சமீபத்திய பதிவுகள்
பிரிட்டன் வனவிலங்கு பூங்காவில் அதிர்ச்சி சம்பவம்: கூண்டுக்குள் குதித்த நபரை கடித்துக் கொன்ற புலி..- வீடியோ  •  மெக்கா, மதீனாவை தவிர சவுதியில் உள்ள மற்ற அனைத்து விமான நிலையங்களுக்கும் குறி - ஹவுதிக்கள் எச்சரிக்கை  •  இறுதிப் போரில் விடு­தலைப் புலிகளின் விமானபடைக்கு எதிராக ஆயுதங்கள் வழங்கிய இந்­திய விமா­னப்­படை!!!!  •  சுற்­றி­வ­ளைக்­கப்­பட்ட ராஜபக்‌ஷ குடும்பம்  •  அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி

இஸ்லாம் மார்க்கத்தை அவமதித்த வழக்கு ; ஞானசார தேரரின் 09 மாத சிறைத் தண்டனை உறுதி – கொழும்பு மேல் நீதிமன்றம்

இஸ்லாம் மார்க்கத்தை அவமதித்த வழக்கு ; ஞானசார தேரரின் 09 மாத சிறைத் தண்டனை உறுதி – கொழும்பு மேல் நீதிமன்றம்

இஸ்லாம் மார்க்கத்தை அவமதித்த விவகாரத்தில் குற்றவாழியாக காணப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயளாலர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு  கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தால் தீர்பளிக்கப்பட்ட 9 மாத சிறைதண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் உறுதிசெய்துள்ளதாக  கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேற்படி வழக்கு  இன்று (7) புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே   கொழும்பு மேலதிக நீதிவான்  லஹிரு சில்வா உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை  அறிவித்திருந்தார்.

கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட குறித்த சிறைத்தண்டனைக்கு எதிராக ஞானசார தேரரினால் சமர்ப்பிக்கப்பட்ட மேல்முறையீட்டை கடந்த நாட்களில் கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்திருந்தது.  


இதனை அடுத்து, குறித்த தண்டனையை வாசித்து காட்டுவதற்காக சம்பந்தப்பட்ட வழக்கு  நேற்று நீதிவான் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டதுடன், சிறைத்தண்டனை  அனுபவித்து வரும் ஞானசார தேரர்  கைதி உடையில் சிறைச்சாலை அதிகாரிகளால்  மன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது, மேல் நீதிமன்றத்தினால் வெளியிடப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வாசித்து காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பிரதிவாதியான ஞானசார தேரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தெகொட தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவினர் விடயங்களை முன்வைக்கையில், “கணம் நீதிவான் அவர்களே! எனது சேவை பெறுநரான தேரரின் மேல்முறையீட்டை நிராகரித்து கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக ஞானசார தேரர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளதாக ”  அறிவித்திருந்தார்.

தொடர்ந்து  விடயங்களை முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி, “அதன்படி, அந்த உயர் நீதிமன்ற மேல்முறையீட்டுத் தீர்ப்பு வரும் வரை இந்த வழக்குத் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என  கோரிக்கை விடுத்த அவர், ஞானசார தேரரின்  காவி உடையை அகற்றி கைதி உடையுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியமைக்கு  தனது எதிர்ப்பையும் வெளிப்படுத்தியிருந்தார்.

ஜனாதிபதி சட்டத்தரணி அநுர மெத்தெகொட,“ கணம் நீதிவான் அவர்களே! ஞானசார தேரரின்  காவி உடையை நீக்கி அவரை சாதாரண உடையுடன் நீதிமன்றில் ஆஜர்படுத்தியது முற்றிலும் தவறான செயலாகும். ஞானசார தேரரின் காவி உடையை அகற்றுவதற்கு எந்தவித உரிமையும் கிடையாது. எனது சேவை பெறுநரான தேரர் துறவற நெறிகளிலிருந்து விலகிய பிக்கு அல்ல.  

அவரது துறவற வாழ்வு எந்தவிதத்திலும் இழக்கப்படவில்லை. எனவே, இந்த முறையில் அவரது  காவி உடையை  நீக்கியமை தவறான செயலாகும்.

இதன் காணமாகவே தலைமைத் தேரர்கள் அவரது  காவி உடை அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்பை வெளியிட்டனர். எமது அரசியலமைப்பினுள் பௌத்தம் பாதுகாக்கப்பட்டு போஷிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறிருக்கையில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது மிகவும் வருந்தத்தக்க விடயமாகும்" என்றார்.

மன்றில் முன்வைக்கப்பட்ட சாட்ச்சியங்களை பரிசீலித்ததன் பின்னர், ஞானசார தேரரின் சிறைத்தண்டனைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டின் இறுதி முடிவு கிடைக்கும் வரை, தேரருக்குத் தண்டனையை வாசித்துக் காட்டுவதை பெப்ரவரி 25 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

2016 ஆம் ஆண்டு கிரிக்கெட்பொல  பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வெளியிடப்பட்ட கருத்துக்களினால் இஸ்லாத்தையும் திருக்குர்ஆனையும் அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக  குற்றம் சுமத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஞானசார தேரருக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் 9 மாத கால சிறைத்தண்டனை விதித்திருந்தது.  குறித்த தண்டனைக்கு எதிராக ஞானசார தேரர் தாக்கல் செய்த  மேல்முறையீடு கடந்த நாட்களில் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டிருந்தது.
பகிரவும்:

கருத்துக்கள் (0)

இதுவரை கருத்துக்கள் இல்லை.

தொடர்புடைய செய்திகள்