சமீபத்திய பதிவுகள்
பிரிட்டன் வனவிலங்கு பூங்காவில் அதிர்ச்சி சம்பவம்: கூண்டுக்குள் குதித்த நபரை கடித்துக் கொன்ற புலி..- வீடியோ  •  மெக்கா, மதீனாவை தவிர சவுதியில் உள்ள மற்ற அனைத்து விமான நிலையங்களுக்கும் குறி - ஹவுதிக்கள் எச்சரிக்கை  •  இறுதிப் போரில் விடு­தலைப் புலிகளின் விமானபடைக்கு எதிராக ஆயுதங்கள் வழங்கிய இந்­திய விமா­னப்­படை!!!!  •  சுற்­றி­வ­ளைக்­கப்­பட்ட ராஜபக்‌ஷ குடும்பம்  •  அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி

பிரான்சில் மூன்று பிள்ளைகளின் தாயான 40வயது தமிழ் பெண் கொலை! கணவன் கைது!

பிரான்சில் மூன்று பிள்ளைகளின் தாயான 40வயது தமிழ் பெண் கொலை! கணவன் கைது!
பிரான்சில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 40 வயதான 3 பிள்ளைகளின் தாயாரான அனுஷா அவளது கணவனால் கொலை செய்யப்பட்டுள்ளாள். பிரான்சின் பாரிஸ் புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஈவ்லின் (Yvelines) மாவட்டத்தின் ஆஷேர் (Achères) பகுதியில் அக்டோபர் 5, 2026 அன்று இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

40 வயதான அனுசா தனது 47 வயதான கணவன், பிள்ளைகளுடன் மிகவும் சந்தோசமாக சச்சரவு இன்றி வாழ்ந்து வந்ததாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பொலிசாருக்கு தெரிவித்துள்ளார்கள். இருப்பினும் திடீரென நேற்று மனைவியை கணவன் கொ*லை செய்துள்ளார்.


மனைவியைக் கொ*லை செய்த பின்னர் தனது சகோதரருக்கு தொலைபேசியில் தொடர்பு எடுத்து தான் தனது மனைவியைக் கொன்றுவிட்டதாக கூறிய பின்னரே பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசாரும் தீயணைப்பு படையினரும் அனுசாவின் சடலத்தை மீட்ட பின் கணவனைக் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து பிரான்ஸ்சிற்கு அகதியாக அண்மையில் சென்ற ஒரு காவாலி ஒருவன் அனுசாவுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகப்பட்டே இந்தக் கொ*லை இடம்பெற்றுள்ளதாக தமிழ்தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

அனுசாவின் 3 சிறு பிள்ளைகளும் தற்போது தாய், தந்தையற்ற நிலையில் அநாதரவாக உள்ளதாகத் தெரியவருகின்றது
பகிரவும்:

கருத்துக்கள் (0)

இதுவரை கருத்துக்கள் இல்லை.

தொடர்புடைய செய்திகள்