சமீபத்திய பதிவுகள்
பிரிட்டன் வனவிலங்கு பூங்காவில் அதிர்ச்சி சம்பவம்: கூண்டுக்குள் குதித்த நபரை கடித்துக் கொன்ற புலி..- வீடியோ  •  மெக்கா, மதீனாவை தவிர சவுதியில் உள்ள மற்ற அனைத்து விமான நிலையங்களுக்கும் குறி - ஹவுதிக்கள் எச்சரிக்கை  •  இறுதிப் போரில் விடு­தலைப் புலிகளின் விமானபடைக்கு எதிராக ஆயுதங்கள் வழங்கிய இந்­திய விமா­னப்­படை!!!!  •  சுற்­றி­வ­ளைக்­கப்­பட்ட ராஜபக்‌ஷ குடும்பம்  •  அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி

“கள்ளத் தொடர்பில் இருந்த கணவரின் சகோதரிகள்” - உண்மையை அறிந்த இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்.. 6 மாத கர்ப்பிணி இறந்தது எப்படி?

“கள்ளத் தொடர்பில் இருந்த கணவரின் சகோதரிகள்” - உண்மையை அறிந்த இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்.. 6 மாத கர்ப்பிணி இறந்தது எப்படி?
புதுக்கோட்டை மாவட்டம், மேட்டுப்பட்டி பகுதியில் 6 மாத கர்ப்பிணிப் பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம், கொலை வழக்காக மாறியுள்ளது. 

கணவரின் உறவினர்களுக்கு இடையேயான தகாத உறவு குறித்து கணவரிடம் தெரிவித்ததால் ஏற்பட்ட முன்விரோதத்தில், கர்ப்பிணிப் பெண் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அவரது மாமியார் உட்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மேட்டுப்பட்டி அருகே உள்ள இந்திரா நகரைச் சேர்ந்த பாண்டித்துரை என்பவரது மனைவி 21 வயதுடைய சந்தியா. ஆறு மாத கர்ப்பிணியான இவர், கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார். 

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற கணேஷ் நகர் காவல்துறையினர், சந்தியாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். மருத்துவர்கள் நடத்திய பிரேதப் பரிசோதனையில் சந்தியாவின் மரணம் தொடர்பாகச் சந்தேகங்கள் எழுந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, காவல்துறையினர் சந்தியாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 8 பேரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

காவல்துறையினரின் விசாரணையில், பாண்டிதுரையின் சகோதரிகளான பாண்டி மீனா மற்றும் பொற்கொடி ஆகிய இருவரும் உறவினர்களுடன் கள்ள தொடர்பில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இவர்கள் தகாத உறவு குறித்து அறிந்த சந்தியா இதை பற்றி தனது கணவரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சந்தியா மீது ஆத்திரமடைந்த உறவினர்கள், சந்தியாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில், கணவர் மற்றும் மாமனாரைத் தவிர மாமியார், மாமனாரின் தங்கை அவரது மகன் மற்றும் இரண்டு நாத்தனார்கள், கணவரின் அத்தை கனிமொழி ஆகிய 6 உறவினர்களும் ஒன்றுசேர்ந்து சந்தியாவைத் துப்பட்டாவால் கழுத்தை நெரித்தும், தலையணையால் முகத்தை அழுத்தியும் கொலை செய்ததாக விசாரணையில் ஒப்புக்கொண்டதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சந்தேக மரணம் தொடர்பான வழக்கைக் கொலை வழக்காக மாற்றிய காவல்துறையினர், இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஆறு பேரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

ஆறு மாத கர்ப்பிணிப் பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம், விசாரணைக்குப் பின்னர் கொலை வழக்காக மாறியிருப்பது புதுக்கோட்டை பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 
பகிரவும்:

கருத்துக்கள் (0)

இதுவரை கருத்துக்கள் இல்லை.

தொடர்புடைய செய்திகள்