யாழ்ப்பாணப் பூர்வீகத்தைக் கொண்டு வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த பெண்ணுக்கும், வெள்ளைக்கார இளைஞர் ஒருவருக்கும் இடையேயான இத் திருமணமானது வடமராட்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் கோலாகலமாக இடம்பெற்றுள்ளது.
முற்றிலும் தமிழர் கலாச்சாரப் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தத் திருமண விழாவில், வெளிநாட்டு மணமகன் வெள்ளை வேட்டி மற்றும் தேசிய உடையில் கம்பீரமாகக் காட்சி அளித்தார். அத்துடன், மணமக்கள் இருவரும் நவீன வாகனங்களை விடுத்து, கிராமிய மணமணம் மாறாத பாரம்பரிய மாட்டு வண்டிலில் ஏறி ஊர்வலமாக வலம் வந்தனர்.
வெளிநாட்டைச் சேர்ந்த மணமகன் ஒருவர் நம் நாட்டுப் பாரம்பரிய உடைகளை அணிந்து, கிராமிய முறைப்படி மாட்டு வண்டிலில் பவனி வந்து திருமணம் செய்துகொண்ட இந்த விசித்திரமான மற்றும் அழகிய நிகழ்வு அப்பகுதி மக்கள் மத்தியிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.








