துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கிப் பயணித்த ஃப்ளைதுபாய் விமானத்தில் ஏற்பட்ட பரபரப்பான சம்பவத்தில் காயமடைந்த இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி வீடியோ அழைப்பில் தொடர்புகொண்டு நலம் விசாரித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கேப்டன் ஸ்மித் மச்சார், ஃப்ளைதுபாய் FZ1073 விமானத்தில் விமானியாக பணியாற்றியிருந்தார். 174 பேர் பயணித்ததாக தெரிவிக்கப்படும் இந்த விமானம், துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோது விமானத்தின் விமானி அறையில் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் விமானம் சவுதி அரேபியாவின் தபுக் நகருக்கு திருப்பிவிடப்பட்டு பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
விமானம் அதிக உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, துணை விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரை தாக்கியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலில் காயமடைந்த போதிலும், அவர் விமானி அறையின் கதவை திறக்க முடிந்ததாகவும், இதன் மூலம் பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் விமானி அறைக்குள் சென்று துணை விமானியை கட்டுப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விமானத்தில் இருந்த மேலதிக பயிற்சி பெற்ற விமானிகளும் விமானத்தை நிலைநிறுத்துவதற்கு உதவியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், கேப்டன் ஸ்மித் மச்சாரை வீடியோ அழைப்பில் தொடர்புகொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அவரது துணிச்சலையும் இக்கட்டான சூழ்நிலையில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் பாராட்டியதுடன், விரைவில் குணமடைய வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதன்போது விமானத்தில் இடம்பெற்ற சம்பவம் குறித்தும், நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக தான் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் ஸ்மித் மச்சார் பிரதமர் மோடியிடம் விளக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரதமர் மோடியுடன் பேசியது தனக்கு மிகுந்த ஊக்கமளிப்பதாகவும், மோடி தனக்கு மிகப்பெரிய முன்னுதாரணம் என்றும் ஸ்மித் மச்சார் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், விமானி ஸ்மித் மச்சாரின் நடவடிக்கைகளை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். அதேவேளை, விமானி அறையில் இடம்பெற்ற தாக்குதலுக்கான காரணம் உள்ளிட்ட சம்பவத்தின் முழுமையான பின்னணி தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.