சமீபத்திய பதிவுகள்
பிரிட்டன் வனவிலங்கு பூங்காவில் அதிர்ச்சி சம்பவம்: கூண்டுக்குள் குதித்த நபரை கடித்துக் கொன்ற புலி..- வீடியோ  •  மெக்கா, மதீனாவை தவிர சவுதியில் உள்ள மற்ற அனைத்து விமான நிலையங்களுக்கும் குறி - ஹவுதிக்கள் எச்சரிக்கை  •  இறுதிப் போரில் விடு­தலைப் புலிகளின் விமானபடைக்கு எதிராக ஆயுதங்கள் வழங்கிய இந்­திய விமா­னப்­படை!!!!  •  சுற்­றி­வ­ளைக்­கப்­பட்ட ராஜபக்‌ஷ குடும்பம்  •  அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி

மறைந்திருந்த ஞானசார தேரர் அதிரடி கைது!

மறைந்திருந்த ஞானசார தேரர் அதிரடி கைது!

- நீதிமன்றத்தை தவிர்த்து வந்த நிலையில் பொலிஸாரிடம் சிக்கினார்



நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றில் ஆஜராகாமல் தொடர்ந்து தவிர்த்து வந்த பொது பல சேனா (BBS) அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை, பிட்டிகல, இஹலஹேரஸ்ஸ, தீனியாவல பகுதியில் அமைந்துள்ள லேனகிரிய ஆரண்ய சேனாசனம் எனும் ஆசிரமத்தில் மறைந்திருந்த நிலையிலேயே இவர் பொலிஸாரினால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அண்மையில் கொழும்பு மேல் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியவற்றினால் பிறப்பிக்கப்பட்ட பிடிஆணைகளைத் தொடர்ந்து, குறித்த ஆசிரமத்தில் மறைந்திருந்த ஞானசார தேரர் பொலிஸாரினால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

இஸ்லாம் மார்க்கத்தையும் திருக்குர்ஆனையும் இழிவுபடுத்தும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்த குற்றச்சாட்டில் சட்ட மாஅதிபரினால் தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகலவினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

அத்துடன், ஞானசார தேரருக்கு முன்னர் வழங்கப்பட்ட ஜனாதிபதியின் பொது மன்னிப்பை இரத்து செய்து, அவருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு சட்ட மாஅதிபர் தாக்கல் செய்த மனுவை அடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றமும் திறந்த பிடியாணை பிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.

செப்டெம்பர் 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் வழக்குகள் விசாரணைக்கு வந்த போது ஞானசார தேரர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கை திருப்திகரமாக இல்லை எனத் தெரிவித்த நீதிமன்றம், அவரது பிணையாளர்களும் ஆஜராகாததைச் சுட்டிக்காட்டியது.

இதனைத் தொடர்ந்து மேன்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதித்ததுடன், பொலிஸ் மா அதிபர் ஊடாகப் பிடிஆணையை உடனடியாக அமல்படுத்துமாறு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
 
பகிரவும்:

கருத்துக்கள் (0)

இதுவரை கருத்துக்கள் இல்லை.

தொடர்புடைய செய்திகள்