சமீபத்திய பதிவுகள்
பிரிட்டன் வனவிலங்கு பூங்காவில் அதிர்ச்சி சம்பவம்: கூண்டுக்குள் குதித்த நபரை கடித்துக் கொன்ற புலி..- வீடியோ  •  மெக்கா, மதீனாவை தவிர சவுதியில் உள்ள மற்ற அனைத்து விமான நிலையங்களுக்கும் குறி - ஹவுதிக்கள் எச்சரிக்கை  •  இறுதிப் போரில் விடு­தலைப் புலிகளின் விமானபடைக்கு எதிராக ஆயுதங்கள் வழங்கிய இந்­திய விமா­னப்­படை!!!!  •  சுற்­றி­வ­ளைக்­கப்­பட்ட ராஜபக்‌ஷ குடும்பம்  •  அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி

வவுனியாவில் மின்னல் தாக்கி இளைஞர் பலி : மரத்தடியில் ஒதுங்கியபோது நேர்ந்த சோகம்!!

வவுனியாவில் மின்னல் தாக்கி இளைஞர் பலி : மரத்தடியில் ஒதுங்கியபோது நேர்ந்த சோகம்!!
வவுனியா செக்கடிப்பிலவு பகுதியில் இன்று மாலை பெய்த கடும் மழை மற்றும் இடிமின்னல் காரணமாக, மரத்தின் கீழ் ஒதுங்கிய 20 வயது இளைஞர் ஒருவர் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இன்று மாலை வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் பலத்த இடிமின்னலுடன் கூடிய கனமழை பொழிந்தது. இதன்போது செக்கடிப்பிலவு பகுதியைச் சேர்ந்த ஜோசப் அன்ரணி (வயது 20) என்ற இளைஞர் அங்குள்ள மைதானத்தில் நின்றுகொண்டிருந்துள்ளார்.

திடீரென மழை தீவிரமடைந்ததால், மழையில் இருந்து தப்பிப்பதற்காக அவர் அருகிலிருந்த ஒரு மரத்தின் கீழ் சென்று ஒதுங்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இடிமின்னல் மழை பெய்யும் நேரங்களில் திறந்தவெளிகளிலோ அல்லது மரங்களின் கீழோ ஒதுங்குவதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் துறையினர் பொதுமக்களுக்குத் தொடர்ந்து விழிப்புணர்வு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனர்.
பகிரவும்:

கருத்துக்கள் (0)

இதுவரை கருத்துக்கள் இல்லை.

தொடர்புடைய செய்திகள்