15 வயது, 7 மாத கால வயதுடைய பாடசாலைச் சிறுமி ஒருவரைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில், 19 வயதுடைய உறவுமுறையான சகோதரன் வெல்லவாயப் பொலிஸாரால் திங்கட்கிழமை (05 ஆம் திகதி) கைது செய்யப்பட்டுள்ளார். இச்சிறுமி, வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்ல வீதி, நெட்டோலகம பிரதேசத்தில் வசிக்கின்றார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர், பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டின் அருகில் வசிக்கும், அவரது மாமாவின் மகனான 19 வயது இளைஞராவார்.
இந்தச் சிறுமி குறித்த இளைஞருடன் காதல் தொடர்பைப் பேணி வந்துள்ளார். அத்தொடர்பைக் கைவிடுமாறு தாயார் பல சந்தர்ப்பங்களில் சிறுமிக்கு எச்சரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் குறித்த சிறுமியின் அறையிலிருந்து, சந்தேக நபருக்கு எழுதப்பட்ட கடிதம் ஒன்று தாயாருக்குக் கிடைத்துள்ளது.
அக் கடிதத்தில் மாதாந்த மாதவிடாய் வழமை போல் ஏற்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டிருந்ததைக் கண்ட தாயார், இது குறித்து சிறுமியிடம் வினவியுள்ளார். எனினும், சிறுமி உரிய பதிலளிக்கத் தவறியதைத் தொடர்ந்து, தாயார் அவரைப் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதன்போது பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ள சிறுமி, வீட்டின் அருகில் வசிக்கும் தனது உறவினரான இளைஞனுடன் காதல் தொடர்பைப் பேணி வந்ததாகவும், கடந்த 2026 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 18 ஆம் திகதியன்று வீட்டில் ஆளில்லாத சந்தர்ப்பத்தில் அவர் வீட்டிற்கு வந்து தன்னை அறைக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மற்றுமொரு நாளிலும் இருவரும் கணவன் - மனைவி போன்று பழகியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
துஷ்பிரயோகத்திற்குள்ளான சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக வெல்லவாய ஆதார பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான இளைஞரைப் பொலிஸார் கைது செய்துள்ள நிலையில், அவரை வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்.ஏ.டி.எம். சமரசிங்க தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.