மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திமிலதீவு வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
வலையிறவு பாடசாலையில் கற்பித்து வந்த ஆசிரியரான புளியந்தீவினைச் சேர்ந்த கமலநாதன் மதிவதனி (வயது 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

ஆசிரியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததைத் தொடர்ந்து, அப்பகுதியில் பெருமளவிலான மக்கள் ஒன்று திரண்டதால் அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை நிலவியது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு பொலிஸார் பாதுகாப்பைப் பலப்படுத்தியதுடன், தப்பி ஓடிய சாரதியைக் கைது செய்யவும், விபத்து தொடர்பிலும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.