சமீபத்திய பதிவுகள்
பிரிட்டன் வனவிலங்கு பூங்காவில் அதிர்ச்சி சம்பவம்: கூண்டுக்குள் குதித்த நபரை கடித்துக் கொன்ற புலி..- வீடியோ  •  மெக்கா, மதீனாவை தவிர சவுதியில் உள்ள மற்ற அனைத்து விமான நிலையங்களுக்கும் குறி - ஹவுதிக்கள் எச்சரிக்கை  •  இறுதிப் போரில் விடு­தலைப் புலிகளின் விமானபடைக்கு எதிராக ஆயுதங்கள் வழங்கிய இந்­திய விமா­னப்­படை!!!!  •  சுற்­றி­வ­ளைக்­கப்­பட்ட ராஜபக்‌ஷ குடும்பம்  •  அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி

ஷிரந்தி-ராஜபக்ஷ- மற்றும் முன்னாள் அமைச்சர் ரோகித போகொல்லகம கைது

ஷிரந்தி-ராஜபக்ஷ- மற்றும் முன்னாள் அமைச்சர் ரோகித போகொல்லகம கைது
முன்னாள் முதன்மைப் பெண்மணியும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியுமான ஷிரந்தி ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் (CIABOC) சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை கிருலப்பனையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் ஷிரான்தி ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாகவே அவரிடம் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, திங்கள்கிழமை இரவு (05) இலங்கை திரும்பிய ஷிரந்தி ராஜபக்ஷவை, ஓக்டோபர் 13 ஆம் திகதி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகுமாறு பொலிஸார் அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் முதன்மைப் பெண்மணி மலேசியாவிலிருந்து வந்த விமானம் மூலம் நாட்டிற்குத் திரும்பியிருந்தார்.

சிகிச்சைக்காக அவர் செப்டம்பர் 16 ஆம் திகதி அதிகாலை சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றிருந்தார். செப்டம்பர் 15 ஆம் திகதி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கிருந்து நேரடியாக விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, 'சிரிலிய சவிய' (Siriliya Saviya) அமைப்பின் நிதி விவகாரங்கள் தொடர்பான விசாரணைகளுடன் தொடர்பில், தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, ஷிரந்தி ராஜபக்ஷவின் சட்டத்தரணிகளால் திங்கள்கிழமை (05) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்பிணை மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


முன்னாள் அமைச்சர் ரோகித போகொல்லகம கைது07
07/10/1991




ஊழல் குற்றச்சாட்டு ஒன்றுடன் தொடர்புடைய வழக்கு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ரோகித போகொல்லகம, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக, முன்னாள் அமைச்சர் ரோகித போகொல்லகம இன்று (07) இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, விசாரணை அதிகாரிகளால் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைக்குப் பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரை கொழும்பு  பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 

பகிரவும்:

கருத்துக்கள் (0)

இதுவரை கருத்துக்கள் இல்லை.

தொடர்புடைய செய்திகள்