சமீபத்திய பதிவுகள்
“சிரிலிய சவிய” நிதி மோசடி வழக்கு : ஷிரந்தி ராஜபக்ஷவிற்கு குற்றப்புலனாய்வுப் பிரிவு அழைப்பாணை!  •  மட்டக்குளி பகுதியில் கோர விபத்து – நால்வர் உயிரிழப்பு; இருவர் காயம்  •  ஐரோப்பாவின் தங்க மீட்பு நடவடிக்கை; அமெரிக்கா மீதான நம்பிக்கைச் சரிவா?-  •  “மனைவியின் காதலனை ஸ்கெட்ச் போட்டு கொன்ற கணவன்” - உடந்தையாக இருந்த முன்னாள் காதலி.. நள்ளிரவில் நடந்தது என்ன?  •  முடி அலங்காரத்திற்கு ரூ.4.49 கோடி.. அரசுப் பணத்தைச் செலவு செய்த பிரதமர்.. வெடித்த சர்ச்சை!

மட்டக்குளி பகுதியில் கோர விபத்து – நால்வர் உயிரிழப்பு; இருவர் காயம்

மட்டக்குளி பகுதியில் கோர விபத்து – நால்வர் உயிரிழப்பு; இருவர் காயம்



 கொழும்பு – மட்டக்குளி, கந்தஉட பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக மட்டக்குளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்..


இந்த விபத்து இன்று இரவு சுமார் 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


வத்தளை பகுதியில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசு கார் ஒன்று, மட்டக்குளி கந்தஉட பகுதியில் வைத்து மூன்று முச்சக்கர வண்டிகளையும், ஒரு மோட்டார் சைக்கிளையும் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



    பகிரவும்:

    கருத்துக்கள் (0)

    இதுவரை கருத்துக்கள் இல்லை.

    தொடர்புடைய செய்திகள்