ஹசலக பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில், பெண்ணுக்கு ஏற்பட்டதாகக் கூறப்பட்ட அமானுஷ்ய தோஷத்தை குணப்படுத்த வந்த மந்திரவாதி ஒருவர், சிகிச்சைக்குப் பின்னர் அந்தப் பெண்ணை அழைத்துக்கொண்டு ரகசியமாக தப்பிச் சென்றதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
32 வயதான குறித்த பெண், மூன்று பிள்ளைகளின் தாயாவார். சுமார் ஒரு வருடமாக உடல்நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த அவர், உள்ளூர் மற்றும் மேலைத்தேய மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றும் குணமடையவில்லை எனக் கூறப்படுகிறது.
அவருக்கு “அமானுஷ்ய தோஷம்” ஏற்பட்டுள்ளதாக உறவினர்கள் கூறியதையடுத்து, பல்வேறு தேவாலயங்களுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளனர். எனினும், அதிலும் பலன் கிடைக்கவில்லை. இதையடுத்து, கீழ் தும்பர பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றுக்குச் சென்று மந்திரவாதி ஒருவரை சந்தித்துள்ளனர். அந்தப் பெண்ணை பரிசோதித்த அவர், “அமானுஷ்ய தோஷம் இருப்பதாகவும், அதைக் குணப்படுத்த முடியும்” என்றும் கூறியுள்ளார்.
மேலும் தோஷத்தை கழிக்க கிரியைக்குத் தேவையான பொருட்களைத் தயாராக வைத்திருக்குமாறும், குறிப்பிட்ட நாளில் மாலை வருவதாகவும் கூறி, பெண்ணின் கழுத்தில் பாதுகாப்பு நூல் ஒன்றைக் கட்டியுள்ளார். தாம் வருவது குறித்து வேறு யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
குறிப்பிட்ட நாளில் சுமார் 37 வயது மதிக்கத்தக்க அந்த மந்திரவாதி, மேளக்காரர் ஒருவருடன் மாலை 5 மணியளவில் வீட்டுக்கு வந்துள்ளார். சாந்திக் கிரியைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னர், இரவு 9 மணியளவில் சடங்கு ஆரம்பிக்கப்பட்டு அதிகாலை 1 மணியளவில் நிறைவடைந்துள்ளது.
அன்றிரவு மந்திரவாதி அந்த வீட்டிலேயே தங்கியுள்ளார். மறுநாள் காலை, பெண்ணுக்கு ஏற்பட்டிருந்த அமானுஷ்யக் குறையின் ஒரு பகுதியை நீக்கியுள்ளதாகவும், மீதமுள்ளதை அன்றிரவு செய்ய வேண்டும் என்றும் கணவரிடம் கூறியுள்ளார்.
மறுநாள் அதிகாலை 5 மணியளவில் எழுந்த கணவர், மனைவியை அழைத்து காலை உணவு தயாரிக்குமாறும், இரண்டு நாட்களாக வயலுக்குச் செல்ல முடியாததால் அன்று முன்கூட்டியே வயலுக்குச் செல்ல வேண்டும் என்றும் கூறிக்கொண்டு மனைவியும் பிள்ளைகளும் உறங்கிய அறைக்குச் சென்றபோது, அங்கு பிள்ளைகள் மட்டுமே இருந்துள்ளனர். மனைவியைக் காணவில்லை. கழிப்பறை, கிணறு மற்றும் வீட்டுத் தோட்டம் உள்ளிட்ட இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்த கணவர், மந்திரவாதி தங்கியிருந்த அறைக்குச் சென்று பார்த்தபோது, அவரும் அங்கு இல்லை.
பிள்ளைகள் எழுந்த பின்னர், அவர்களுக்கு உணவு வழங்கிய கணவர், பிள்ளைகள் தாய் எங்கே எனக் கேட்டபோது, “சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்; விரைவில் வந்துவிடுவார்” எனக் கூறியுள்ளார். பின்னர் பிள்ளைகளை வீட்டைவிட்டு வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்திவிட்டு, நேராக மந்திரவாதியின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
அங்கு மந்திரவாதி இல்லாத நிலையில், அவரது மனைவி மட்டும் இருந்துள்ளார். நடந்த சம்பவத்தை கணவர் தெரிவித்தபோது, மந்திரவாதியின் மனைவி அதிர்ச்சியளிக்கும் வகையில், “அவனுக்கு எந்த மந்திரமும் தெரியாது. அவன் செய்வதெல்லாம் இப்படிப்பட்ட தவறான வேலைகள்தான்” எனக் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், காணாமல் போன பெண்ணைத் தேடி விரைவில் வீட்டுக்கு அழைத்து வருவதாகக் கூறி, கணவரை அனுப்பி வைத்துள்ளார். இரண்டு நாட்களுக்குப் பின்னர், மந்திரவாதியின் மனைவியுடன் குறித்த பெண் மீண்டும் வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.
அங்கு நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர், தான் செய்த தவறுக்காக கணவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாகக் கூறப்படுகிறது. மூன்று பிள்ளைகளைக் கருத்தில் கொண்டு, மனைவியை மீண்டும் ஏற்றுக்கொள்வதாக கணவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுபோன்ற சம்பவம் மீண்டும் இடம்பெற்றால் மன்னிக்க முடியாது என எச்சரித்த பின்னர், மனைவியை வீட்டுக்குள் செல்ல அனுமதித்துள்ளார்.
தனது மனைவியைத் தேடி அழைத்து வந்த மந்திரவாதியின் மனைவிக்கு நன்றி தெரிவித்த கணவர், அவருக்கு உணவு மற்றும் பானங்களை வழங்கியதுடன், பேருந்துக் கட்டணத்தையும் வழங்கி அனுப்பி வைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
32 வயதான குறித்த பெண், மூன்று பிள்ளைகளின் தாயாவார். சுமார் ஒரு வருடமாக உடல்நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த அவர், உள்ளூர் மற்றும் மேலைத்தேய மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றும் குணமடையவில்லை எனக் கூறப்படுகிறது.
அவருக்கு “அமானுஷ்ய தோஷம்” ஏற்பட்டுள்ளதாக உறவினர்கள் கூறியதையடுத்து, பல்வேறு தேவாலயங்களுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளனர். எனினும், அதிலும் பலன் கிடைக்கவில்லை. இதையடுத்து, கீழ் தும்பர பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றுக்குச் சென்று மந்திரவாதி ஒருவரை சந்தித்துள்ளனர். அந்தப் பெண்ணை பரிசோதித்த அவர், “அமானுஷ்ய தோஷம் இருப்பதாகவும், அதைக் குணப்படுத்த முடியும்” என்றும் கூறியுள்ளார்.
மேலும் தோஷத்தை கழிக்க கிரியைக்குத் தேவையான பொருட்களைத் தயாராக வைத்திருக்குமாறும், குறிப்பிட்ட நாளில் மாலை வருவதாகவும் கூறி, பெண்ணின் கழுத்தில் பாதுகாப்பு நூல் ஒன்றைக் கட்டியுள்ளார். தாம் வருவது குறித்து வேறு யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
குறிப்பிட்ட நாளில் சுமார் 37 வயது மதிக்கத்தக்க அந்த மந்திரவாதி, மேளக்காரர் ஒருவருடன் மாலை 5 மணியளவில் வீட்டுக்கு வந்துள்ளார். சாந்திக் கிரியைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னர், இரவு 9 மணியளவில் சடங்கு ஆரம்பிக்கப்பட்டு அதிகாலை 1 மணியளவில் நிறைவடைந்துள்ளது.
அன்றிரவு மந்திரவாதி அந்த வீட்டிலேயே தங்கியுள்ளார். மறுநாள் காலை, பெண்ணுக்கு ஏற்பட்டிருந்த அமானுஷ்யக் குறையின் ஒரு பகுதியை நீக்கியுள்ளதாகவும், மீதமுள்ளதை அன்றிரவு செய்ய வேண்டும் என்றும் கணவரிடம் கூறியுள்ளார்.
இதற்கிடையில், தனது உடல்நிலை குணமடைந்துவிட்டதாக அந்தப் பெண்ணும் கணவரிடம் தெரிவித்ததால், அவர் மகிழ்ச்சியடைந்துள்ளார். சாந்திக் கிரியைக்கு உதவ வந்த மேளக்காரருக்கு பணம் வழங்கி, அன்றிரவு அவர் தேவையில்லை எனக் கூறி மந்திரவாதியே அவரை அனுப்பி வைத்துள்ளார். அன்றிரவும் இரவு 9 மணியளவில் சாந்திக் கிரியை ஆரம்பிக்கப்பட்டு, சுமார் 11 மணியளவில் நிறைவடைந்துள்ளது. பின்னர் அனைவரும் உறங்கச் சென்றுள்ளனர். மந்திரவாதியும் அன்றிரவு அங்கேயே தங்கியுள்ளார்.