2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில் 270 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டவர்களில், தற்கொலைத் தாக்குதல்களுக்கு மூளையாகச் செயல்பட்டதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் குறிப்பிட்ட நௌஃபர் மௌலவியும் அடங்குவார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மற்ற 9 பேர் விடுவிக்கப்பட்டனர்.
2009-ல் உள்நாட்டுப் போர் முடிவடைந்த பிறகு, மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று சொகுசு விடுதிகளில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தக் குண்டுவெடிப்புகள், இலங்கையில் நடந்த மிக மோசமான தாக்குதலாகும். இறந்தவர்களில் 45 வெளிநாட்டினரும் அடங்குவர்.
இந்த தற்கொலைத் தாக்குதல்களில் ஈடுபட்ட அனைவரும் குண்டுவெடிப்பில் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமியத் தீவிரவாதிகளே காரணம் என்று புலனாய்வாளர்கள் முன்னர் குற்றம் சாட்டியிருந்தனர். குற்றம் சாட்டப்பட்ட 25 பேரும் இலங்கையின் முஸ்லிம் சிறுபான்மையினர். அவர்களில் ஒருவர் காவலில் இருந்தபோது உயிரிழந்தார்.
கொலை, பயங்கரவாதச் சதி மற்றும் துப்பாக்கிகளை வைத்திருத்தல் உள்ளிட்ட 23,000க்கும் மேற்பட்ட குற்றங்களுக்காகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
அரசுத் தரப்பில் 2,300-க்கும் மேற்பட்டோர் சாட்சியம் அளித்தனர்.
வெடிபொருட்கள், வாள்கள் மற்றும் துப்பாக்கிகள் உள்ளிட்ட 2,076 சான்றுகளும் சமர்ப்பிக்கப்பட்டன.

தாக்குதல்களுக்கு வழிவகுத்த தேசியப் பாதுகாப்புத் தோல்விகளுக்கு முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன பொறுப்பு என்று கண்டறிந்த உச்ச நீதிமன்றம், 2023-ஆம் ஆண்டில் குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
குண்டுவெடிப்புகளுக்குக் காரணமான குற்றவியல் ரீதியான அலட்சியத்திற்காக, கடந்த மாதம் இரண்டு முன்னாள் உயர் அதிகாரிகள் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர். இலங்கையில் மரண தண்டனையை நிறைவேற்றுவது பல தசாப்தங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், இத்தகைய தண்டனைகள் வழக்கமாக ஆயுள் சிறைத்தண்டனையாகக் குறைக்கப்படுகின்றன.
ஈஸ்டர் தினத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி, இலங்கையர்கள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் 2019ம் ஆண்டு 277 பேரின் உயிர்களை காவுக்கொண்ட ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி இலங்கையிலுள்ள பிரதான கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இந்த தாக்குதலில் 277 பேர் உயிரிழந்திருந்ததுடன், 400ற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்ததாக ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை நடத்திய நாடாளுமன்றத் தெரிவு குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு வழக்கின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு விபரம் வெளியீடு!
குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டவர்கள் (15 பேர்) :
1. முகம்மது இப்ராஹிம் முகம்மது நெளபர் (நௌஃபர் மௌலவி) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி
2. முகம்மது சரிபு ஆதம் லெப்பை (அபு ஹாத்விக்) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி
3. ஹயாத்து முகம்மது அஹமட் மில்ஹான் (அபு சில்லா) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி
4. முகம்மது இப்ராஹிம் சாதிக் அப்துல்லா (அபு உமர்) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி
5. முகம்மது இப்ராஹிம் அப்துல் ஹக் (அபு பலா) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி
6. முகம்மது அன்வர் முகம்மது ரிஸ்கான் (அபு தாரிக்) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி
7. முகம்மது மன்சூர் முகம்மது சனாஸ்தீன் (அபு மிசான்) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி
8. அப்துல் மனாப் முகம்மது பிரிதௌஸ் – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி
9. முகம்மது ரமீஷ் முகம்மது சாரிக் / சாஜித் – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி
10. ஹுஸைனுல் ரிஸ்வி முகம்மது காஹிர் சமீர் – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி
11. முகம்மது ஹனீபா சைனுல் ஆப்தீன் (அபு ஹினா) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி
12. முகம்மது முஸ்தபா முகம்மது ஹாரிஸ் (அபு நன்ஜியார்) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி
13. ராசிக் ராஸா ஹுஸைன் – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி
14. கச்சி முகம்மது ஜஸ்மின் – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி
15. அப்துல் லதீப் முகம்மது சாப்பி (சாப்பி மௌலவி / அபு புர்கான்) – ஒரு குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பு; ஏனைய அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி
குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டவர்கள் (9 பேர்):
1. முகம்மது சஹீர் முகம்மது ஹசன் (அபு தாவூத்)
2. முகம்மது இப்திகார் முகம்மது இன்சாப் (அபு முகம்மது)
3. ரஷீத் முகம்மது இப்ராஹிம்
4. சைனுல் ஆப்தீன் முகம்மது ஜசீம்
5. முகம்மது முஸ்தபா முகம்மது ரிஸ்வான்
6. மீரா சாஹிப் முகம்மது நப்கி (அபு சனா)
7. முகம்மது அமீர் முகம்மது அயாத்துல்லா
8. முகம்மது அன்சார்தீன் முகம்மது இல்மி
9. முகம்மது அக்ரம் அஹக்கம்
சிறைக்காவலில் உயிரிழந்தவர் (1 நபர்):
* யாசின் பாவா அப்துல் ரவூப் – வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் சிறைக்காவலில் உயிரிழந்துள்ளார்.
குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 15 பேருக்குமான தண்டனை விபரங்கள் நீதிமன்றத்தால் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.




