சமீபத்திய பதிவுகள்
யாழ். சிறைச்சாலையில் இருந்து பிணையில் வந்தவர் திடீர் மரணம் ; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!  •  சௌதி மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி அச்சுறுத்தும் ஹூத்திகள் யார்?  •  \'முகமது நபி குறித்து பதிவு\' - செளதியில் இலங்கை தமிழருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை மரண தண்டனையாக அதிகரிப்பு ஏன்?  •  \"மாமியார் தான் வேணும்.. மனைவி வேண்டாம்” - 6 மாதமாக இருந்த கள்ளத்தொடர்பு.. குடும்பத்துக்கு கொலை மிரட்டல்!  •  மணிக்கு 600 கி.மீ வேகம்! அலை அலையாக பாயும் ட்ரோன்கள்! உக்ரைனை பந்தாடும் ரஷ்யா!

யாழ். சிறைச்சாலையில் இருந்து பிணையில் வந்தவர் திடீர் மரணம் ; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

யாழ். சிறைச்சாலையில் இருந்து பிணையில் வந்தவர் திடீர் மரணம் ; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நபர் ஒருவர், அன்றைய தினமே திடீரென உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் இளவாளைப் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 39 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:

சந்தேகநபராகக் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த நபர், நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து அன்றைய தினமே வீட்டிற்கு வந்துள்ளார். எனினும், வீடு திரும்பிய சிறிது நேரத்திலேயே அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக அவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த கைதி சிறைச்சாலையில் விளக்கமறியலில் அடைக்கப்பட்டிருந்த நாட்களில் கடுமையான நோய்வாய்ப்பட்டிருக்கலாம் என அவரது குடும்பத்தினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சிறைச்சாலை நிர்வாகத்தின் அலட்சியப் போக்கே இவரது திடீர் உயிரிழப்புக்கு முதன்மை காரணம் என உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தி நீதி வழங்கக் கோரி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்தியக் கிளையில் உயிரிழந்தவரின் குடும்பத்தாரால் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பகிரவும்:

கருத்துக்கள் (0)

இதுவரை கருத்துக்கள் இல்லை.

தொடர்புடைய செய்திகள்