உக்ரைனின் ஆட்டத்தை தவிடிபொடியாக்கும் வகையில், அதிரடியான வியூகத்தை ரஷ்யா முன்னெடுத்துள்ளது.
நேட்டோவில் இணைய முயன்ற உக்ரைனுக்கு எதிராக 2022 முதல் தாக்குதலைத் தொடரும் ரஷ்யா, இப்போது கெரான்-5 ட்ரோன்களை அலை அலையாக ஏவி, உக்ரைனின் உட்கட்டமைப்பை சேதப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், இந்த போரில் உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்த, அதிநவீன ஆயுதத்தை ரஷ்யா களமிறக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, மணிக்கு சுமார் 600 கிலோ மீட்டர் வேகத்திலும், 6 ஆயிரம் மீட்டர் உயரத்திலும் பறக்கக் கூடிய கெரான் -5 என்ற அதிநவீன ட்ரோன்களை, ரஷ்யா களமிறக்கியுள்ளது. சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளையும் துல்லியமாக தாக்கக் கூடிய இந்த ட்ரோன்கள், 90 கிலோ வரையிலான வெடிபொருட்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது.
பழைய ட்ரோன்களை போல் இல்லாமல், அதீத வேகத்தில் குரூஸ் ஏவுகணைப் போன்று செயல்படும் இந்த ட்ரோன்கள், ஏ.ஐ அமைப்புகளுடனும், தெர்மல் கேமராக்களுடனும் செயல்படுவதால், இலக்கை கச்சிதமாக தகர்க்கிறது. மேலும், மின்னணு தாக்குதல்களை முறியடிக்கும் ஆன்டி ஜாமிங் அமைப்புகளும் பொருத்தப்பட்டுள்ளதால், உக்ரைனின் வான் பகுதி, மிகுந்த ஆபத்தில் உள்ளது.

ஐரோப்பிய யூனியனின் ராணுவ மற்றும் அரசியல் கூட்டமைப்பு தான் நேட்டோ என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் இந்த அமைப்பில் இணைய உக்ரைன் முயற்சிகள் மேற்கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த தாக்குதலுக்கு, உக்ரைனும் தங்களால் முடிந்த பதிலடிகளை அவ்வப்போது அளித்து வருகிறது. இருதரப்பிலும் இதுவரை 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த போரில் உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்த, அதிநவீன ஆயுதத்தை ரஷ்யா களமிறக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, மணிக்கு சுமார் 600 கிலோ மீட்டர் வேகத்திலும், 6 ஆயிரம் மீட்டர் உயரத்திலும் பறக்கக் கூடிய கெரான் -5 என்ற அதிநவீன ட்ரோன்களை, ரஷ்யா களமிறக்கியுள்ளது. சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளையும் துல்லியமாக தாக்கக் கூடிய இந்த ட்ரோன்கள், 90 கிலோ வரையிலான வெடிபொருட்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது.
பழைய ட்ரோன்களை போல் இல்லாமல், அதீத வேகத்தில் குரூஸ் ஏவுகணைப் போன்று செயல்படும் இந்த ட்ரோன்கள், ஏ.ஐ அமைப்புகளுடனும், தெர்மல் கேமராக்களுடனும் செயல்படுவதால், இலக்கை கச்சிதமாக தகர்க்கிறது. மேலும், மின்னணு தாக்குதல்களை முறியடிக்கும் ஆன்டி ஜாமிங் அமைப்புகளும் பொருத்தப்பட்டுள்ளதால், உக்ரைனின் வான் பகுதி, மிகுந்த ஆபத்தில் உள்ளது.
இத்தகைய வலிமையான ட்ரோன்களை உருவாக்கியிருப்பதோடு, இதனை அலை அலையாக ஆயிரக்கணக்கில் ரஷ்யா ஏவுவதால், உக்ரைனின் உட்கட்டமைப்பு பலத்த பாதிப்பு அடைகிறது. இவை அனைத்திற்கும் மேலாக, கெரான் -5 ட்ரோன்கள் ஒப்பீட்டு அளவில் விலை குறைவான ஆயுதமாக இருப்பதால், அதனை அதிக அளவில் ரஷ்யாவால் ஏவ முடிகிறது.
ஆனால், அந்த அதிநவீன ட்ரோன்களை அழிக்க, விலை உயர்ந்த இன்டர்செப்டர் ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்த வேண்டியுள்ளது. இது போரின் பொருளாதார விதிகளையும், எதிர்காலப் போர் தந்திரங்களையும் ரஷ்யாவிற்குச் சாதகமாக மாற்றியுள்ளது.