சமீபத்திய பதிவுகள்
மணிக்கு 600 கி.மீ வேகம்! அலை அலையாக பாயும் ட்ரோன்கள்! உக்ரைனை பந்தாடும் ரஷ்யா!  •  மானிப்பாயில் பொலிஸார் வழிமறித்த போது இளைஞன் வீதியில் விழுந்து உயிரிழப்பு!  •  திருகோணமலையில் மதுபானக் கடையில் கொள்ளை முயற்சி: பொலிஸ் அதிகாரி மற்றும் சிவில் பாதுகாப்பு படை வீரர் கைது!  •  6 லட்சம் பேர்.. கையில் AK-47.. வீதியில் இறங்கிய பெண்கள்! ஈரானில் திடீர் பரபரப்பு!  •  F-35ஐ களமிறக்கும் சவுதி? $24.3 பில்லியன் அமெரிக்க ஒப்பந்தத்தால் பரபரப்பு!

மானிப்பாயில் பொலிஸார் வழிமறித்த போது இளைஞன் வீதியில் விழுந்து உயிரிழப்பு!

மானிப்பாயில் பொலிஸார் வழிமறித்த போது இளைஞன் வீதியில் விழுந்து உயிரிழப்பு!
யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீதியில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை பொலிஸார் வழிமறித்த வேளையில், இளைஞரொருவர் சம்பவ இடத்திலேயே திடீரெனக் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை (19) காலை யாழ்ப்பாணம் - காரைநகர் வீதியில், மானிப்பாய் தேவாலயத்திற்கு முன்பாக இச் சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சுன்னாகம், சபாபதிப்பிள்ளை வீதியைச் சேர்ந்த  26 வயதுடைய  இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, வீதியில் கடமையிலிருந்த போக்குவரத்து பொலிஸார் அவரை வழிமறித்துள்ளனர்.

இதன்போது மோட்டார் சைக்கிளை வீதியோரமாக நிறுத்திய இளைஞன், தானாகவே கீழே சரிந்து விழுந்து அசைவற்றுக் காணப்பட்டுள்ளார்.

உடனடியாக அவரை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் மேலதிக உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பகிரவும்:

கருத்துக்கள் (0)

இதுவரை கருத்துக்கள் இல்லை.

தொடர்புடைய செய்திகள்