சமீபத்திய பதிவுகள்
பிரிட்டன் வனவிலங்கு பூங்காவில் அதிர்ச்சி சம்பவம்: கூண்டுக்குள் குதித்த நபரை கடித்துக் கொன்ற புலி..- வீடியோ  •  மெக்கா, மதீனாவை தவிர சவுதியில் உள்ள மற்ற அனைத்து விமான நிலையங்களுக்கும் குறி - ஹவுதிக்கள் எச்சரிக்கை  •  இறுதிப் போரில் விடு­தலைப் புலிகளின் விமானபடைக்கு எதிராக ஆயுதங்கள் வழங்கிய இந்­திய விமா­னப்­படை!!!!  •  சுற்­றி­வ­ளைக்­கப்­பட்ட ராஜபக்‌ஷ குடும்பம்  •  அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி

வம்ச அர­சியல் முடிந்துவிட்­டதா?

வம்ச அர­சியல் முடிந்துவிட்­டதா?
இலங்­கையில்  வம்ச அர­சியல் சகாப்தம் முடிந்து விட்­ட­தாக, ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்க கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நொச்­சி­யா­க­மவில் நடந்த பொதுக்­கூட்­டத்தில் உரை­யாற்­றிய போது கூறி­யி­ருந்தார். 

“நமது நாட்டில், தந்தை ஜனா­தி­ப­தி­யாக இருந்தால், மகனும் ஜனா­தி­ப­தி­யாக வேண்டும்; தந்தை பிர­த­ம­ராக இருந்தால், மகனும் பிர­த­ம­ராக வேண்டும் என்று மக்கள் பொது­வாக நினைத்து வந்­தனர். அந்த அர­சியல் ஒரு பழைய காலத்தைச் சேர்ந்­தது- அது நவீன அர­சியல் அல்ல, அது இப்­போது மாற்­றப்­பட்டு விட்­டது," என்று  அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

இதன்­மூலம் அவர் ராஜபக் ஷவி­னரின் அர­சியல் சகாப்தம் முடி­வுக்கு வந்­துள்­ளது என்­பதை பிர­க­ட­னப்­ப­டுத்த முயன்றார் என்­பதில் ஐய­மில்லை.

ஏனென்றால் மஹிந்த ராஜபக் ஷவுக்கு அடுத்து அந்த குடும்­பத்தின் அர­சியல் தலைமை தாங்க முற்­பட்ட நாமல் ராஜ பக் ஷ கைது செய்­யப்­பட்டு சிறையில் அடைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில், அநு­ரா­த­பு­ரத்தில் பொது­ஜன பெர­முன ஒரு பெரிய அர­சியல் பேர­ணியை நடத்­திய மறுநாள், ஜனா­தி­பதி அநு­ர­விடம் இருந்து இந்த கருத்து வெளி­வந்­தி­ருந்­தது.

அப்­ப­டி­யானால், ராஜபக் ஷவி­னரின் வம்ச அர­சி­யலை மக்கள் முற்று முழு­தாக நிரா­க­ரித்து விட்­ட­னரா என்ற கேள்வி எழு­கி­றது.

ஜனா­தி­பதி ஒரு­வரின் மகன் ஜனா­தி­ப­தி­யாக வேண்டும், பிர­த­மரின் மகன் பிர­த­ம­ராக வேண்டும்  இலங்­கையின் அர­சியல் சரித்­தி­ரத்தில், வம்ச அர­சியல் நீடித்­தி­ருக்­கி­றது என்­பதில் சந்­தேகம் இல்லை.

ஆரம்­பத்தில் சேனா­நா­யக்க குடும்பம், பண்­டா­ர­நா­யக்க குடும்பம் என தொடங்கி, ராஜபக் ஷ குடும்பம் வரை அது கோலோச்­சிய காலங்கள் உள்­ளன.

இலங்­கையின் முக்கால் நூற்­றாண்டு அர­சியல் வர­லாற்றில்- இந்த மூன்று குடும்­பங்­களும் தான் பெரும்­ப­குதி காலத்தில் நாட்டை ஆட்சி செய்­தி­ருந்­தன.
பண்­டா­ர­நா­யக்க குடும்­பம்



சேனா­நா­யக்க குடும்­பத்­தி­னதும், பண்­டா­ர­நா­யக்க குடும்­பத்­தி­னதும், அர­சியல் ஏற்­கெ­னவே முடி­வுக்கு வந்து விட்­டது.

ராஜபக்ஷ குடும்­பத்தின் இரண்­டா­வது தலை­முறை அர­சியல் அந்­திமக் காலத்தை நெருங்கி விட்­டாலும், மூன்­றா­வது தலை­முறை இன்­னமும் தீவிர அர­சி­யலில் தான் இருக்­கி­றது. நாமல் ராஜபக்ஷ பாரா­ளு­மன்­றத்தில் வகிக்­கிறார்.

அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில்,  அவரே வெற்றி பெறுவார் என்று, அவ­ரது கட்­சி­யினர் கூறி வரு­கி­றார்கள்.

அவரை அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் வெற்றி பெற வைப்­ப­தற்­காக- முன்னர் ராஜபக் ஷவி­ன­ருடன் கூட்­டணி வைத்­தி­ருந்த பலர் இப்­போது ஒன்­றி­ணைய தொடங்­கி­யி­ருக்­கி­றார்கள்.

அவர்­களின் முயற்­சியை முற்­றாகத் தோற்­க­டித்து, பாரா­ளு­மன்­றத்­துக்­குள்­ளேயும் கூட, அவர்கள் இல்­லாமல் போகின்ற நிலை ஏற்­பட்டால் தவிர, வம்ச அர­சியல் தோற்­க­டிக்­கப்­பட்டு விட்­ட­தாக கூற­மு­டி­யாது. ராஜபக் ஷ வம்ச அர­சியல் அவ்­வ­ளவு இல­கு­வாக தோற்­க­டிக்­கப்­படக் கூடி­ய­தாக தோன்­ற­வில்லை.

அதனை தீர்­மா­னிப்­பது, அவர்­களின் தவ­றுகள் மாத்­தி­ர­மல்ல.

அவர்­களின் அர­சியல் எதி­ரி­களின் தவ­று­களும் கூட அதனைத் தீர்­மா­னிக்கும்.

இன்­றைய அர­சாங்கம் அதி­கா­ரத்­துக்கு வந்­தது அவர்­களின் அர­சியல் கொள்­கை­களின் அடிப்­ப­டையில், -வாக்­கு­று­தி­களின் அடிப்­ப­டையில். கவர்ச்­சி­க­ர­மான தலை­மை­களின் அடிப்­ப­டையில் அல்ல.

கடந்த கால அர­சியல் தலை­மை­களின் தவ­று­களின் விளை­வுதான், தற்­போ­தைய அர­சாங்­கத்தின் தோற்றம்.

எனவே, ராஜபக் ஷவி­னரை அதி­கா­ரத்­துக்கு கொண்டு வரு­வதா இல்­லையா என்­பதை தீர்­மா­னிப்­பது தற்­போ­தைய அர­சாங்­க­மா­கவோ அல்­லது அடுத்து வரும் அர­சாங்­கங்­க­ளா­கவோ தான் இருக்கும்.

ராஜபக்ஷ குடும்பம்



மக்­களின் எதிர்­பார்ப்­பு­களை நிறை­வேற்­றாது போனால் மீண்டும் ராஜ­பக்ஷ வின­ருக்­காக மக்கள் வாக்­க­ளிக்கக் கூடும்.

அவர்­களின் அர­சியல் கவர்ச்சி முழு­மை­யாக மங்கிப் போக­வில்லை என்­பதை அநு­ரா­த­பு­ரத்தில் நடத்­திய பேரணி நினை­வு­ப­டுத்­து­கி­றது.

ஆனால், ஜனா­தி­பதி அநு­ரவோ வம்ச அர­சி­ய­லுக்கு தமது அர­சாங்க முடிவு கட்டி விட்­டது போல கருத்து வெளி­யிட்­டி­ருக்­கிறார்.

ஜனா­தி­ப­தியின் மகன் தான் ஜனா­தி­பதி, பிர­த­மரின் மகன் தான் பிர­தமர் என்ற சூழல் இன்று இல்லை என்­பது உண்மை.

அவ்­வா­றா­ன­தொரு நிலை, தற்­போ­தைய அர­சாங்­கத்தால் மாற்­றப்­பட்­ட­தென,  உரிமை கோர முடி­யாது.

ஏனென்றால் ஜே.ஆரிடம் இருந்து பிரே­ம­தா­ச­வுக்கோ அவ­ருக்­குப்பின் டி.பி. விஜே­துங்­க­வுக்கோ ஜனா­தி­பதி பதவி அப்­படிக் கிடைக்­க­வில்லை.

சந்­தி­ரி­கா­விடம் இருந்து மஹிந்­த­வுக்கு கிடைத்த வாய்ப்பும் அப்­ப­டிப்­பட்­ட­தல்ல.

அவ­ருக்குப் பிறகு வந்த மைத்­திரி,  ரணில், அநு­ரவும்  கூட தந்தை வழிப் பத­வியைப் பெற்­ற­வர்கள் அல்ல.


பிர­தமர் பத­வியில் அமர்ந்­த­வர்­களில் கூட பிரே­ம­தாச, டி.பி.விஜே­துங்க, ரணில் விக்­கி­ர­ம­சிங்க, டி.எம். ஜய­ரத்ன, ரட்­ண­சிறி விக்­கி­ர­ம­நா­யக்க, தினேஷ் குண­வர்­தன,  ஹரிணி அம­ர­சூ­ரிய போன்­ற­வர்­களும் தந்தை வழியில் பிர­தமர் பத­வியை பெற்­ற­வர்கள் இல்லை. ஆனால், இலங்­கை யில் அர­சியல் குடும்­பங்­களின் ஆதிக்கம் இருந்­தது, வம்ச அர­சியல் இருந்­தது.

அவர்கள் அதி­கா­ரத்தில் தங்­களின் செல்­வாக்கை நிலை நிறுத்தி வந்­தார்கள்.

ராஜபக் ஷவினர் மாத்­திரம் தான்,  குடும்ப அர­சி­யலை மோச­மாக முன்­னெ­டுத்­த­வர்கள்.

அவர்­களின் இந்த குடும்ப அர­சியல் இப்­போது முடிவு கட்­டப்­பட்­டி­ருக்­கி­றது.

ஆனால், வம்ச அர­சியல் அல்­லது வாரிசு அர­சியல் முடிவு கட்­டப்­பட்­ட­தாக கூற முடி­யாது.

குடும்ப அர­சி­ய­லுக்கு, வம்ச அர­சி­ய­லுக்கு முடிவு கட்­டி­விட்­ட­தா­கவும் அதற்­குத்தான் தமது கட்­சியின் இட­மில்லை என்றும் கூறு­கின்ற தேசிய மக்கள் சக்­தியே ஒரு­வ­கையில் அதனை ஆத­ரிக்­கி­றது என்­பது பல­ருக்கு ஆச்­ச­ரி­ய­மாக இருக்கும்.

தேசிய மக்கள் சக்­தியின் தேசியப் பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­கவும் மூத்த அமைச்­ச­ரா­கவும் இருக்கும் பிமல் ரத்­நா­யக்­கவின்  மனைவி  சமன்­மலி குண­சிங்க கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக பதவி வகிக்­கிறார்.

இதனை குடும்ப அர­சியல் இல்லை என யாரும் மறுக்க முடி­யாது. தேசிய மக்கள் சக்­தியின்  பொதுச்­செ­ய­லாளர் கலா­நிதி நிஹால் அபே­சிங்க களுத்­துறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருக்­கின்ற நிலையில், அவ­ரது மகன் சது­ரங்க அபே­சிங்க கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக பதவி வகிக்­கிறார்.

இதுவும் குடும்ப அர­சியல் தான்

ஒரு குடும்­பத்தில் ஒரு­வ­ருக்கு தான் வாய்ப்பு,  வம்ச அர­சி­ய­லுக்கு இட­மில்லை  என்றால், ஜே.வி.பி.யின் மூத்த தலை­வர்கள் தேசிய மக்கள் சக்­தியின் முக்­கிய உறுப்­பி­னர்கள், எப்­படி வம்ச அர­சி­ய­லுக்கு துணை போக முடியும்?

அதே­வேளை வம்ச அர­சியல் முற்றும் முழு­தாக ஒழிக்­கப்­பட்டு விட்­ட­தாக தேசிய மக்கள் சக்தி கூறு­வதும்   தவறு.

நீதி அமைச்சர் ஹர்­ஷண நாண­யக்­கார ஒரு பாரம்­ப­ரிய அர­சியல் குடும்­பத்தைச் சேர்ந்­தவர். இது பல­ருக்குத் தெரி­யாத இர­க­சியம்.

ஹர்­ஷண நாண­யக்­கா­ரவின் தந்தை யச­பா­லித நாண­யக்­கார, சிங்­கள திரை­யு­லகில் மிகப் பிர­ப­ல­மான இயக்­குனர், தயா­ரிப்­பா­ளர்கள். அவ­ரது ஏனைய இரண்டு சகோ­த­ரர்­க­ளான, ஹேம­கு­மார நாண­யக்­கா­ரவும், வாசு­தேவ நாண­யக்­கா­ரவும், பிர­ப­ல­மான அர­சி­யல்­வா­திகள். இவர்கள், இட­து­சாரி அர­சி­ய­லிலும் பின்னர், ஐதேக மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி வழி அர­சாங்­கங்­க­ளிலும் அங்கம் வகித்­தனர்.

ஹேம­கு­மார நாண­யக்­கார  பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக, பிரதி அமைச்­ச­ராக, மேல் மற்றும் தென் மாகாண ஆளு­ந­ராக பதவி வகித்­தவர்.

அதே­வேளை, லங்கா சம­ச­மாஜக் கட்சி மற்றும் நவ­ச­ம­ச­மாஜக் கட்சி, ஜன­நா­யக இட­து­சாரி முன்­னணி போன்­ற­வற்றின் ஊடாக பல்­வேறு அர­சாங்­கங்­களில் அங்கம் வகித்த வாசு­தேவ நாண­யக்­கார, கடை­சி­யாக கோட்­டா­பய ராஜ­ப­க்ஷ­வினால் அமைச்சர் பத­வியில் இருந்து நீக்­கப்­பட்ட பின்னர்,  இப்­போது இட­து­சாரி அர­சி­ய­லிலும் இல்ல,  ராஜ­ப­க்ஷ­வி­ன­ரு­டனும் இல்லை.

அவர் இப்­போது, தேசிய மக்கள் சக்தி அர­சாங்­கத்தை புகழ்ந்து கொண்­டி­ருக்­கிறார். தேசிய மக்கள் சக்­தி­யி­னரும் அவ­ருக்கு புக­ழாரம் சூட்­டு­கி­றார்கள்.

அண்­மையில்  பிர­தமர் ஹரிணி அம­ர­சூ­ரிய அவ­ருக்குப் பாராட்டுத் தெரி­வித்­த­மைக்கு காரணம் இருக்­கி­றது.


வாசு­தேவ நாண­யக்­கார குடும்பம்

தேசிய மக்கள் சக்தி அர­சாங்­கத்தை வாசு­தேவ நாண­யக்­கார  அண்­மைக்­கா­ல­மாக ஆத­ரித்து வரு­கிறார்.

அதற்கு முக்­கிய காரணம், அவ­ரது சகோ­தரர்  யச­பா­லித நாண­யக்­கா­ரவின் மகன் ஹர்­ஷண நாண­யக்­கார, இந்த அர­சாங்­கத்தில் நீதி அமைச்­ச­ராக பதவி வகிக்­கிறார். இதுவும் ஒரு வம்ச அர­சி­யல்தான்.

பிர­தமர் ஹரிணி



பிர­தமர் ஹரிணி அம­ர­சூ­ரிய தனக் குடும்பம் தொடர்­பான சுய விவ­ரங்­களை பெரி­தாக வெளிப்­ப­டுத்­து­வ­தில்லை.

அவ­ரது தந்தை ஒரு தோட்ட நிர்­வாகி, தாய் ஒரு இல்­லத்­த­ரசி,  அவ­ரது குடும்­பத்தில் இருந்து அர­சி­ய­லுக்கு வந்த முதல் நபர் ஹரிணி அம­ர­சூ­ரிய மட்­டுமே என்று விக்­கி­பீ­டியா கூறு­கி­றது.  இதைத் தவிர தவிர பெரி­தாக எந்த விப­ரங்­களும் பொது­வெ­ளியில் இல்லை, ஆனால் அவர் ஒரு பாரம்­ப­ரிய அர­சியல் குடும்­பத்தைச் சேர்ந்­தவர்.

காலியில் மிகப்­பெ­ரிய வர்த்­தக குடும்­பத்தைச் சேர்ந்த ஹென்றி அம­ர­சூ­ரிய,  டி.எஸ்.சேன­நா­யக்­க­வுடன் இணைந்து, சுதந்­தி­ரத்­துக்கு முன்­னரே,  தேசிய காங்­கிரஸ் ஊடாக அர­சி­ய­லுக்கு வந்­தவர். 1936 தொடக்கம் 1938 ஆம் ஆண்டு வரை ஹென்றி அம­ர­சூ­ரிய,  தேசிய காங்­கி­ரஸின் தலை­வ­ராக பதவி வகித்­தி­ருந்தார்.

1931 ஆம் ஆண்டு முதல்­முறை அரச சபைக்கு உடு­க­மவில் இருந்து தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டார். 1936 தொடக்கம் 1947 ஆம் ஆண்டு வரை அவர் காலியை பிர­தி­நி­தித்­துவம் செய்தார்.

1947 ஆம் ஆண்டு தேர்­தலில் தோல்­வி­ய­டைந்த அவர்1948 ஆம் ஆண்டு பத்­தே­கம இடைத்­தேர்­தலில் வெற்றி பெற்று பாரா­ளு­மன்றம் சென்று, பிரதி சபா­நா­யகர் மற்றும் வர்த்­தக வாணிப அமைச்­ச­ராக பதவி வகித்­தி­ருந்தார்.

1952, 1956 தேர்­தல்­களில் அவர் தோல்­வி­ய­டைந்த நிலையில் 1956 ஆம் ஆண்டு செனட் சபைக்கு நிய­மிக்­கப்­பட்டார்.

இவ­ரது சகோ­தரர் தோமஸ் அம­ர­சூ­ரிய 1953 ஆம் ஆண்டு ஐக்­கிய தேசியக் கட்­சியின் முக்­கிய உறுப்­பி­ன­ராக இருந்து செனட் சபைக்கு தேர்வு செய்­யப்­பட்டார்.

அதன் பின்னர் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இணைந்து கொண்ட  போதும், 1963 ஆம் ஆண்டு இரண்டு கட்சிகளும் இணைந்து அவரை செனட்  தலைவராக நியமித்தன.

பௌத்த இயக்கங்களின்  முன்னோடியாக, கல்வி வளர்ச்சிக்கான அடித்தளமாக இருந்த ஹென்றி அமரசூரிய, தெ ன்மாகாணத்தில் பல பெரிய பாடசாலைகளை உருவாக்கினார்.

அமரசூரிய குடும்பத்திடம்,  6,000 ஏக்கர் தேயிலை, தென்னை, மற்றும் நபர் தோட்டங்கள் இருந்தன

சிறிமாவோ அரசாங்கம் 1972 ஆம் ஆண்டு காணி சீர்திருத்த சட்டத்தை கொண்டு வந்த போது இவர்களின் பெருமளவு நிலங்கள் அரசுடமையாக்கப்பட்டன. அதன் பிறகு அவர்கள் கொழும்பு நோக்கி நகர்ந்தனர். அந்த வம்சத்தை சேர்ந்தவர்கள் தான் பிரதமர் ஹரிணி அமரசூரிய.

அவர் மாத்திரமல்ல, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக இருக்கின்ற ரஜீவ் அமரசூரியவும் அதே குடும்பத்தை சேர்ந்தவர் தான்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் உள்ளவர்கள் மத்தியிலும் கூட, வம்ச அரசியல் வேர்கள் இருக்கின்றன.

இது ஜனாதிபதிக்கு தெரியாத விடயமும் அல்ல. அப்படி இருந்தும் அவர் வம்ச அரசியல் ஒழிக்கப்பட்டு விட்டதா கூறுவது வேடிக்கை.


-என்.கண்ணன்-
பகிரவும்:

கருத்துக்கள் (0)

இதுவரை கருத்துக்கள் இல்லை.

தொடர்புடைய செய்திகள்