ஜெயிலர் 2 திரைப்படத்தை ரசிகர்களுடன் பார்த்து ரசித்த ரஜினிகாந்த்.
40 ஆண்டுகளில் முதல்முறையாக தியேட்டரில் ரசிகர்களுடன் ஜெயிலர் 2 திரைப்படத்தை பார்த்த ரஜினிகாந்த், ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தினார்.
நெல்சன் இயக்கத்தில் உருவான இப்படம், காமெடி மற்றும் மாஸ் காட்சிகளால் ரசிகர்களை கவர்ந்து, 9 நாட்களில் 628 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்து வருகிறது.
ரஜினி நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜெயிலர் 2. 2023ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டடித்த ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் இப்படத்தில், மோகன்லால், சிவராஜ் குமார், எஸ்ஜே சூர்யா, ஜாக்கி ஷரஃப், ரித்திக் ரோஷன், ரம்யா கிருஷ்ணன், வித்யா பாலன், யோகிபாபு, சுராஜ், நமோநாரயணா உள்ளிட்ட பல திரைநட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ஜெயிலர் முதல் பாகத்தின் கதை முடிந்து 3 மாதங்களுக்குப் பிறகு நடப்பது போல ஜெயிலர் 2 கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஒருபக்கம் வில்லன் கேங் ஜெயிலர் ரஜினியை தேடுவதுபோலவும், ஆனால் வில்லன்கள் வந்துசேருவதற்குள் ஜெயிலரே வில்லன்கள் குழுவுக்குள் ஊடுறுவதுபோலவும் படம் அமைக்கப்பட்டுள்ளது. முதல் பாதி முழுவதும் வெடித்துச் சிரிப்பது போலவும், இரண்டாம் பாதி ரஜினியின் மாஸ் மசாலாக்களுடன் படம் உருவாக்கப்பட்டிருந்தது ரசிகர்களை கவர்ந்தது.
நீண்டநாட்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினியின் திரைப்படத்தில் இவ்வளவு காமெடி கலாட்டாக்கள் இருப்பது படத்திற்கு பெரிய பாசிட்டிவாக அமைந்துள்ளது. அது வசூலிலும் சாதனையை நிகழ்த்திவருவதற்கு காரணமாக அமைந்துள்ளது. உலகம் முழுவது வெளியான ஜெயிலர் திரைப்படம் 9 நாள் முடிவில் 628 கோடி ரூபாய் வசூலித்து வெற்றிகரமாக ஓடிவருகிறது.
இந்தசூழலில் தான் தமிழ்சினிமாவின் மாபெரும் வெற்றிப்படமாக ஜெயிலர் 2 மாறியிருக்கும் நிலையில், 40 வருடங்களில் முதல்முறையாக தியேட்டருக்கு சென்று ரசிகர்களுடன் படம் பார்த்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். அவருடன் நெல்சன், அனிருத்தும் படத்தை பார்த்துள்ளனர்.
For the first time in 40 years, Superstar Rajinikanth joins fans to witness #Jailer2 on the big screen!😎🔥 #Jailer2 Industry Mega Blockbuster #Jailer2 Rampage in theatres worldwide @rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @vidya_balan @iam_SJSuryah #MithunChakraborty #SurajVenjaramoodu @meramyakrishnan @iYogiBabu @mirnaaofficial @vijaykartikdop @Nirmalcuts @ChethanDsouza @AlwaysJani @KiranDrk @sunilreddy22 #PallaviSingh @valentino_suren @Alagiakoothan #SantoshRaju @kabilanchelliah @kuchirayar73 @RIAZtheboss @IMAX
— Sun Pictures (@sunpictures) October 24, 2026




