நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியாகி வசூலில் வேட்டை நடத்திவரும் ஜெயிலர் 2 திரைப்படம் 700 கோடி ரூபாய் வசூலை கடந்து சம்பவம் செய்துள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் 2 திரைப்படம், தமிழ் சினிமா வரலாற்றில் முதல் ரூ.700 கோடி வசூல் செய்த படமாக சாதனை படைத்துள்ளது. 75 வயதிலும் சூப்பர் ஸ்டார் தனது மாஸ் மற்றும் திறமையால் ரசிகர்களை கவர்ந்து, உலகளாவிய அளவில் 710 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
ரஜினி நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜெயிலர் 2. 2023ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டடித்த ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் இப்படத்தில், மோகன்லால், சிவராஜ் குமார், எஸ்ஜே சூர்யா, ஜாக்கி ஷரஃப், ரித்திக் ரோஷன், ரம்யா கிருஷ்ணன், வித்யா பாலன், யோகிபாபு, சுராஜ், நமோநாரயணா உள்ளிட்ட பல திரைநட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
ஜெயிலர் முதல் பாகத்தின் கதை முடிந்து 3 மாதங்களுக்குப் பிறகு நடப்பது போல ஜெயிலர் 2 கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஒருபக்கம் வில்லன் கேங் ஜெயிலர் ரஜினியை தேடுவதுபோலவும், ஆனால் வில்லன்கள் வந்துசேருவதற்குள் ஜெயிலரே வில்லன்கள் குழுவுக்குள் ஊடுறுவதுபோலவும் படம் அமைக்கப்பட்டுள்ளது.
முதல் பாதி முழுவதும் வெடித்துச் சிரிக்கும் காமெடியையும், இரண்டாம் பாதி ரஜினியின் மாஸ் மசாலாக்களுடன் படம் உருவாக்கப்பட்டிருந்தது ரசிகர்களை கவர்ந்தது.
இந்தசூழலில் பழைய ரஜினி பட டெம்ப்ளேட்டில் குடும்பத்துடன் பார்க்கும்விதமாக ரிலீஸான ஜெயிலர் 2 திரையரங்கில் வசூல் வேட்டையை நடத்திவருகிறது.
கடந்த அக்டோபர் 15ஆம் தேதி வெளியான திரைப்படம், 12வது நாளிலும் ரசிகர்களை தியேட்டருக்கு இழுத்துவருகிறது. அந்தவகையில் 11 நாள் முடிவில் உலகளவில் 700 கோடி ரூபாயை கடந்து வரலாறு படைத்தது ஜெயிலர் 2. சமீபத்திய அப்டேட்டின் படி ரஜினியின் ஜெயிலர் 2 திரைப்படம் இந்திய அளவில் 466.8 கோடி ரூபாய் மொத்த வசூலையும், 243.5 கோடி மொத்த வெளிநாட்டு வசூலையும் குவித்துள்ளது. அதன் உலகளாவிய வசூல் 710 கோடி ரூபாயாக பதிவாகியுள்ளது.
இதன்படி தமிழ் சினிமா பாக்ஸ் ஆஃபிஸ் வரலாற்றில் ரூ.700 கோடி வசூலை கடந்த முதல் தமிழ் திரைப்படமாக மாறி சாதனை படைத்துள்ளது ஜெயிலர் 2 திரைப்படம். ரஜினியின் 2.ஒ திரைப்படம் 660 முதல் 690 கோடி வரை வசூலித்து அதிக வசூல்செய்த தமிழ்ப்படமாக முதலிடத்தில் இருந்த நிலையில், அதை முறியடித்து ஜெயிலர் 2 அதிக வசூல் செய்த தமிழ்படமாக மாறியுள்ளது.
75 வயதில் இந்தச்சாதனையை செய்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தான்தான் என்றென்றும் தமிழ்சினிமாவின் உச்சநட்சத்திரம் என்பதை நிரூபித்துள்ளார்.
#Jailer2 11 Days Box Office Collection :- 👉 Tamil Nadu : ₹180Cr 👉 Andhra & Nizam : ₹89.50 Cr 👉 Kerala : ₹71 Cr 👉 Karnataka : ₹80 Cr 👉 Rest of India : ₹49 Cr 👉 Overseas : ₹256.9 Cr / $27 Mn Total Worldwide Gross : ₹726.4 Cr https://t.co/BSrRh79LAg
— Filmy Track (@Filmy_Track) October 26, 2026
75 வயதிலும் இந்தக்குதிரை ஓடிக்கொண்டிருப்பதே பெரிய விசயமாக பார்க்கப்படும் நிலையில், 75 வயதிலும் இந்தக்குதிரை பந்தயமே அடித்துவருகிறது என்பது மிரட்சியாக இருக்கிறது.
இந்த வயதில் ஒரு நடிகரின் சோலோ திரைப்படம் 700 கோடிக்கும் மேல் வசூலிக்கும் என்ற பேச்சு எழுந்தால் மற்ற சினிமா துறையில் சிரித்துவிடுவார்கள். ஆனால் அதை தமிழ்சினிமாவும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் சாத்தியமாக்கி இருப்பது மாபெரும் சாதனையே!




