சென்னை: நடிகை திரிஷா இப்போதும் கோலிவுட்டின் முன்னணி நடிகையாக ஜொலிக்கிறார்
.மேலும் முதலமைச்சர் விஜய்க்கும் நெருங்கிய நட்பில் இருப்பதால்; அடிக்கடி ஹெட்லைன்ஸிலும் வருகிறார்.
சூழல் இப்படி இருக்க கோவையில் நடந்த தனியார் மொபைல் ஷோ ரூம் திறப்பு விழாவில் கலந்துகொள்ள சென்ற அவர்; ரோடு ஷோ செய்தது சில கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
திரிஷா திரைத்துறைக்கு வந்து 20 வருடங்களுக்கும் மேல் ஆகிறது. பல ஹிட் படங்களிலும், சில தோல்வி படங்களிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக 96 வரை அவருக்கு சில படங்கள் தோல்வியைத்தான் கொடுத்தன.

இப்போதும் குறையாத அவரது மவுசு இளம் ஹீரோயின்களின் வயிற்றில் புளியை கரைத்தது என்றே சொல்லலாம்.
தலைப்பு செய்தியாக திரிஷா:
இதற்கிடையே சர்ச்சைகளில் சிக்குவதையும் கொஞ்சம் குறைத்திருந்த திரிஷா; தேர்தலுக்கு முன்பிருந்து அதிலும் சிக்குகிறார். அதிலும், விஜய் - சங்கீதா விவகாரத்தில் திரிஷாவின் பெயர்தான் பலமாக அடிபட்டது.
அந்தப் பேச்சுக்களுக்கு எல்லாம் பலம் சேர்க்கும் விதமாக இரண்டு பேரும் ஜோடியாக நல்லது, கெட்டதுகளில் கலந்துகொள்கிறார்கள்.
அஜித் அம்மாவின் மறைவு, ஏஜிஎஸ் வீட்டு திருமணம் என ஜோடியாக சென்றார்கள்
.
Content from blocked embed
த்ரிஷாவுக்கு கூடிய ரசிகர்கள் கூட்டத்தை பாருங்க 🥰😍❤️ https://t.co/LcDpMrGmNU— Anshitha🫶💖🍉 (@Anshithaprincey) October 24, 2026
அதுமட்டுமின்றி முதலமைச்சரானதும் விஜய் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி கொடியேற்றியபோது; தனது தாயுடன் முன்வரிசையில் அமர்ந்திருந்தார்.
அரசு தொடர்பான நிகழ்ச்சியில் திரிஷாவை அப்படி அமர வைத்தது பெரும் சர்சையையும், விமர்சனத்தையும் சந்தித்தது. ஆனால் அதையெல்லாம் பெரிதாக கண்டுகொள்ளாத விஜய் - திரிஷா; அஜித் பங்கேற்ற கார் ரேஸை பார்க்கவும் ஒன்றாக சென்றார்கள்.
இப்படி தொடர்ந்து விஜய்யுடன் பயணிப்பதால் அவர் அரசியலுக்கு வருகிறார் என்றும் பேச்சுக்கள் எழுந்தன.
திரிஷாவின் ரோடு ஷோ:
சூழல் இப்படி இருக்க கடந்த சில மாதங்களாக ஹெட்லைன்ஸில் வராத திரிஷா; நேற்று கோவையில் தனியார் மொபைல் ஷோ ரூம் ஒன்றை தொடங்கி வைக்க சென்றார்.
அப்போது திறந்த வாகனத்தில் இருந்தபடி ரோடு ஷோவும் செய்தார். அவரை பார்ப்பதற்கு எக்கச்சக்க ரசிகர்கள் கூடினார்கள். இதுவரை அவர் இப்படி ரோடு ஷோ செய்தது கிடையாது. எனவே இப்போதைய அவரது செயல் பல விதமான பேச்சுக்களை கிளப்பிவிட்டிருக்கிறது.
விதை போடப்பட்டதா?:
அதாவது அரசியலுக்கு வரும் பிளானில் இருக்கும் திரிஷாவுக்கு; நேற்றைய ரோடு ஷோ மூலம் தனக்கு இருக்கும் மவுசை அவர் அறிந்துகொள்ளும் வாய்ப்பாக இருந்தது. படிப்படியாக இதே மாதிரியான செயல்களை செய்து கூடிய விரைவில் அவர் அரசியலுக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
விஜய்க்கு இணையான கூட்டம் அவருக்கும் வர தொடங்கியிருக்கிறது. எனவே விரைவில் தவெகவில் தன்னை அதிகாரப்பூர்வமாக இணைத்துக்கொண்டு அரசியல் களத்தில் களமாடுவார் என்று அடித்து சொல்கிறார்கள் ஒருதரப்பினர்.
பக்கா பிளான்?:
அதுமட்டுமின்றி திரிஷா இப்போது பக்கா பிளானில் இருக்கிறார். தன்னைப் பற்றி வந்த எந்த நெகட்டிவிட்டிக்கும் எதுவும் பதிலளிக்காமல் தன்னுடைய பாதையில் கவனத்தை வைத்திருக்கிறார்.
நேற்று அவர் செய்த ரோடு ஷோ குறித்தும் நெகட்டிவ் விமர்சனங்கள் வரத்தான் செய்திருக்கின்றன. தவெகவினரேகூட அதை விரும்பவில்லை. இருப்பினும் அரசியல் என்ட்ரி கொடுக்க வேண்டும் என்ற பிளானில் அவர் இருப்பதாகத்தான் இது போன்ற செயல்கள் உணர்த்துவதாக கூறுகிறார்கள் ரசிகர்கள்.




