சமீபத்திய பதிவுகள்
தமிழ் சினிமாவின் உச்சம்.. 700 கோடியை கடந்த முதல் தமிழ் படம்.. 76 வயதில் வரலாறு படைத்த ரஜினி!  •  ஹவுதிகளிடம் சரணடைந்த சவுதி! ரூ.8,400 கோடியுடன் களமிறங்கிய இளவரசர்?  •  இளம்பெண்ணை வெட்டிக் கொன்றுவிட்டு, லாரியில் பாய்ந்து உயிரை மாய்த்த இளைஞர் - கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி  •  அன்பில் மகேஸ் கைதின் பின்னணி என்ன? முழு விவரம்!  •  இஸ்ரேலியத்-தேர்தல்-தலைமை-மாறினால்-கொள்கை-மாறுமா?

ஏமன் ராணுவ முகாம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்.. 53 வீரர்கள் உயிரிழப்பு - 200க்கும் மேற்பட்டோர் காயம் \"

ஏமன் ராணுவ முகாம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்.. 53 வீரர்கள் உயிரிழப்பு - 200க்கும் மேற்பட்டோர் காயம் \"
:"ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அரசு படைகளின் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தியதில் 53 வீரர்கள் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். .

ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமனில் சனா உள்ளிட்ட நகரங்களை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். 

மறுபுறம் சவுதி அரேபியா மற்றும் மேற்கத்திய ஆதரவு பெற்ற அரசு ஏடன் நகரை தற்காலிக தலைநகராக கொண்டு செயல்பட்டு வருகிறது. 

உள்நாட்டு போர்

அரச படைகள் மற்றும் ஹவுதிக்கள் இடையே கடந்த 2014 முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ஈரான் ஒருபுறம் அமெரிக்காவுடன் போரிட்டு வரும் சூழலில் அண்மை காலமாக ஹவுதி மற்றும் அரச படைகள் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. .

ரியாத் தாக்குதல்

மற்ற நகரங்களையும் கைப்பற்ற ஹவுதிக்கள் முயன்று வருகின்றனர். ஆனால் சவுதி உதவியுடன் ஏமன் அரச படைகள் பதிலடி கொடுத்து வருகிறது. 

ஹவுதிக்கள் மறுபுறம் சவுதி அரேபியா மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அண்மையில் சவுதி தலைநகர் ரியாத் சர்வதேச விமான நிலையம் மீது ஹவுதிக்கள் நடத்திய ஏவுணை தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்.

அதிபர் மாளிகை தாக்குதல்

மேலும் கடந்த வாரம் ஏடனில் உள்ள அதிபர் மாளிகை மீதும் ஹவுதிக்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில் 5 பேர் கொல்லப்பட்டனர். பிரதமர் நூலிழையில் உயிர் தப்பினார்..

ராணுவ முகாம் மீது தாக்குதல்

இந்நிலையில் இன்று ஏமனின் ஷப்வா மாகாணத்தில் உள்ள அல்-ஆலம் ராணுவ முகாம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் முகாமில் இருந்த 53 வீரர்கள் கொல்லப்பட்டனர், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என தகவல் வெளியாகி உள்ளது. .முகாமின் பயிற்சி மையம் மீது ஹவுதிக்கள் 3 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதாக ஏமன் ராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் மஜித் அல்-நசிலி தெரிவித்தார்.

கொல்லப்பட்ட அனைத்து வீரர்களும் சமீபத்தில் சேர்ந்த புதியவர்கள் என்றும், அவர்களின் மரணத்திற்கு பழிவாங்கப்படும் என்றும் அதிபரின் கீழ் செயல்படும் ஏமனின் தலைமை கவுன்சில் தலைவர் (PLC) ரஷாத் அல்-அலிமி சூளுரைத்துள்ளார்..

சவுதி தாக்குதலில் 9 பேர் கொலை

முன்னதாக தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சதா (Sadah) மாகாணத்தில் நேற்று சவுதி நடத்திய வான்வழித் தாக்குதலில், 5 குழந்தைகள் மற்றும் 2 பெண்கள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டதாகவும் 30 பேர் காயமடைந்ததாகவும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர். 

இந்தத் தாக்குதலுக்கு பழிவாங்குவோம் என ஹவுதிக்கள் சூளுரைத்த நிலையில் ராணுவ முகாம் மீதான தாக்குதல் நடந்துள்ளது. 
பகிரவும்:

கருத்துக்கள் (0)

இதுவரை கருத்துக்கள் இல்லை.

தொடர்புடைய செய்திகள்