சமீபத்திய பதிவுகள்
ஐரோப்பாவின் தங்க மீட்பு நடவடிக்கை; அமெரிக்கா மீதான நம்பிக்கைச் சரிவா?-  •  “மனைவியின் காதலனை ஸ்கெட்ச் போட்டு கொன்ற கணவன்” - உடந்தையாக இருந்த முன்னாள் காதலி.. நள்ளிரவில் நடந்தது என்ன?  •  முடி அலங்காரத்திற்கு ரூ.4.49 கோடி.. அரசுப் பணத்தைச் செலவு செய்த பிரதமர்.. வெடித்த சர்ச்சை!  •  விண்வெளியில் ஆயுதத்தை நிலைநிறுத்திய அமெரிக்கா - எவ்வாறு தாக்கும் என்பது பற்றி எழும் ஊகங்கள்  •  யாழில். கள்ள மண் ஏற்றிய டிப்பர்கள் மீது துப்பாக்கி சூடு – இருவர் கைது

9/11 தாக்­கு­தல்கள் நடந்து கால்­நூற்­றாண்­டுக்கு பிறகு உலக ஒழுங்கின் கோலங்கள்

9/11 தாக்­கு­தல்கள் நடந்து கால்­நூற்­றாண்­டுக்கு பிறகு உலக ஒழுங்கின் கோலங்கள்
2001 செப்­டெம்பர் 11 அன்று, நியூ­யோர்க்கில் உலக வர்த்­தக மையத்தின் இரட்டைக் கோபு­ரங்கள் மற்றும் வொஷிங்­டனில் பென்­டகன் மீதான விமானத் தாக்­கு­தல்கள் இடம்­பெற்று கடந்த வெள்­ளிக்­கி­ழ­மை­யுடன் (2026 செப்­டெம்பர் 11) சரி­யாக கால் நூற்­றாண்டு கடந்து விட்­டது. அன்­றைய தினம் வான­ளாவ உயர்ந்து சென்ற புகை­மண்­டலம் உலக அர­சியல் வரை­ப­டத்தை நிரந்­த­ர­மா­கவே மாற்­றி­ய­மைத்­து­விட்­டது. அதற்குப் பிறகு முன்­னரைப் போன்று இனிமேல்  எதுவும் இருக்­காது என்­றா­கி­யது.

அமெ­ரிக்­காவின் ' பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரான உல­க­ளா­விய போர்' என்ற பிர­க­டனம் வெறு­மனே இரா­ணுவ நட­வ­டிக்­கை­யாக மாத்­தி­ர­மல்ல, இரண்­டா­வது உலகப் போருக்குப் பின்­ன­ரான சர்­வ­தேச சட்­டங்கள், நாடு­களின் சுயா­தி­பத்­தியக்  கோட்­பா­டுகள் மற்றும் மனித உரி­மைகள் மீதான உல­க­ளா­விய பார்­வையை அடி­யோடு மாற்­றி­ய­மைத்த வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த புள்­ளி­யா­கவும் அது அமைந்­தது. 'பாது­காப்பு' என்ற ஒற்றைக் காரணி, ஜன­நா­ய­கத்­தையும் தனி­ம­னித சுதந்­தி­ரத்­தையும் விட மேலோங்­கிய காலப் பகு­தி­யாக இந்த 25 வரு­டங்­களும் அமைந்­தன.

ஆப்­கா­னிஸ்தான் மற்றும் ஈராக் மீதான அமெ­ரிக்­கா­வி­னதும் அதன் மேற்­கு­லக நேச­நா­டு­க­ளி­னதும் படை­யெடுப்­பு­க­ளுடன் தொடங்­கப்­பட்ட இந்த பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரான உல­க­ளா­விய போர், தேசங்­களின் சுயா­தி­பத்­தி­யத்­துக்கு சர்­வ­தேச சமூகம் அளித்­து­வந்த மதிப்பை தலை­கீழாக மாற்­றி­யது.




'முன்­னெச்­ச­ரிக்கைத் தாக்­குதல்' என்ற புதிய கோட்­பாட்டின் கீழ்  ஐக்­கிய நாடு­களின் ஒப்­பு­த­லின்றி முன்­னெ­டுக்­கப்­பட்ட இரா­ணுவ நட­வ­டிக்­கைகள் சர்­வ­தேச நிறு­வ­னங்­களின் பல­வீ­னத்தை வெளிச்சம் போட்டுக் காட்­டின. இதன் விளை­வாக மத்­திய கிழக்கு, தெற்­கா­சியப் பிராந்­தி­யங்­களில் ஏற்­பட்ட அழி­வு­களும் எண்­ணற்ற உயிர்ப் பலியும் பயங்­க­ர­வா­தத்தை ஒழிப்­ப­தற்குப் பதி­லாக பிராந்­திய அளவில் மேலும் தீவி­ர­வாதக் இயக்­கங்கள் பெரு­கவே வழி­வ­குத்­தன.

பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரான போர்,  போர்க்­கள எல்­லை­களைத் தாண்டி உலகின் குடி­மக்­களின் அன்­றாட வாழ்க்­கைக்­குள்ளும் ஊடு­ரு­வி­யது. அமெ­ரிக்­காவின் ' தேச­பக்த சட்டம்' (Patriot Act) தொடங்கி உலக நாடுகள் முழு­வதும் இயற்­றப்­பட்ட கடு­மை­யான பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்­டங்கள் அரசின் கண்­கா­ணிப்பு அதி­கா­ரங்­களை எல்­லையற்­ற­தாக்­கின. பாது­காப்­புக்­காக சுதந்­தி­ரத்தைத் தியாகம் செய்­வது என்ற ஆபத்­தான போக்கு உல­க­ளா­விய வழக்­க­மாக மாறி­யது.

மனித உரி­மை­களைப் பாது­காப்­ப­தாகக் கூறிக்­கொள்ளும் மேற்­கு­லக நாடு­களின் போலித்­தனம் உல­கிற்கு அம்­ப­ல­மா­னது. சர்­வ­தேச மனித உரிமைச் சட்­டங்கள், ஜெனிவா உடன்­ப­டிக்­கைகள் போன்ற வர­லாற்று முக்­கி­யத்­துவம் கொண்ட பாது­காப்­புகள் ' தேசிய பாது­காப்பு ' என்ற போர்­வையில் திட்­ட­மிட்டு மீறப்­பட்­டன. நாள­டைவில் இது உல­க­ளவில் சர்­வா­தி­கார ஆட்­சிகள் அவற்றின் சொந்த மக்­க­ளுக்கு எதி­ரான அடக்­கு­மு­றை­களை நியா­யப்­ப­டுத்த தவ­றான ஒரு முன்­னு­தா­ர­ண­மாக அமைந்­தது. இலங்­கை­கை­யர்­க­ளா­கிய நாம் இதை தாரா­ள­மாக அனு­ப­வித்தோம்.

பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரான உல­க­ளா­விய போர் பயங்­க­ர­வாத அமைப்­பு­க­ளுக்கு (முக்­கி­ய­மாக அல் - கொய்­தா­வுக்கு) எதி­ரா­ன­தாக தொடங்­கப்­பட்ட போதிலும், இறு­தியில் அமெ­ரிக்­காவின் நலன்­க­ளுக்கும் அதன் உலகப் பார்­வைக்கும் ஏற்ற முறையில்  ஆப்­கா­னிஸ்தான், மேற்­கா­சியா மற்றும் வட ஆபி­ரிக்­காவில் ' ஜன­நா­ய­கத்தைப் பரப்­பு­வது' என்ற போர்­வையில் ஆட்­சி­களை மாற்றுவதற்­கான போரா­கவும் மாறி­யது.

ஆட்சி மாற்றப் போர்கள் ஈராக்கில் தொடங்கி, 2011 ஆம் ஆண்டில் 'அரபு வசந்தப் ' போராட்­டங்­க­ளுக்கு மத்­தியில் லிபிய மக்­களைப் 'பாது­காக்கும்' போர்­வையில் கேணல் கடா­பியின் படை­க­ளுக்கு எதி­ராக குண்­டு­வீச்­சாக மாறின. அதை பின்­னி­ருந்து வழி­ந­டத்­தி­ய­தாக அன்­றைய அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா பகி­ரங்­க­மா­கவே கூறினார்.

கடா­பியின் ஆட்­சியைக் கவிழ்த்த போரின் விளை­வாக ஆபி­ரிக்­காவின் மிகவும் நிலை­யு­று­தி­யான நாடு­களில் ஒன்­றாக விளங்­கிய லிபியா சீர்குலைந்தது. லிபிய அரசின் வீழ்ச்சி பயங்­க­ர­வா­தத்­துக்­கான கத­வு­களை ஆபி­ரிக்கா முழு­வதும் திறந்­தது. ஆயு­தங்கள் எல்­லை­களைத் தாண்டிக் கடத்­தப்­பட்டு பல்­வேறு போராளிக் குழுக்­க­ளி­னதும் பயங்­க­ர­வாதக் குழுக்­க­ளி­னதும் கைக­ளுக்குச் சென்­றன. கடந்த 15 வரு­டங்­க­ளுக்கும் அதி­க­மான கால­மாக வட ஆபி­ரிக்­காவின் பல நாடு­களில் ஜிஹாதிக் குழுக்கள் அவற்றின் செல்­வாக்கைப் பரப்­ப­வ­ரு­கின்­றன.

9/11 தாக்­கு­தல்­க­ளுக்கு பின்­ன­ரான இரு­பத்­தைந்து வரு­டங்­களில் பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரான  போர் அமெ­ரிக்­காவின் உல­க­ளா­விய ஆதிக்­கத்தின் பல­வீ­னத்­தையும் எல்­லை­க­ளையும் வெளிக் காட்­டி­யி­ருக்­கி­றது. இரு தசாப்­த­கால ஆக்­கி­ர­மிப்­புக்குப் பிறகு ஆப்­கா­னிஸ்­தா­னி­லி­ருந்து அமெ­ரிக்கப் படை­களின் பின்­வாங்கல் பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரான போரின் மூலோ­பாயத் தோல்­வியை கோடிட்டுக் காட்­டி­யது.

இரா­ணுவ ரீதி­யா­கவும் பொரு­ளா­தார ரீதி­யா­கவும் அமெ­ரிக்கா இந்தப் போர்­களில் அதன் கவ­னத்­தையும் வளங்­க­ளையும் குவித்­தி­ருந்த வேளையில், சீனா, ரஷ்யா போன்ற வல்­ல­ர­சுகள் சர்­வ­தேச அரங்கில் தங்­களை வலுப்­ப­டுத்திக் கொள்ளும் வாய்ப்பைப் பெற்­றன. இதன் விளை­வாக, 9/11 தாக்­கு­தல்­க­ளுக்குப் பிறகு நில­விய அமெ­ரிக்க ஒற்றை ஆதிக்கம் மறைந்து புதிய ஒரு பல்­து­ருவ ஒழுங்கு உரு­வா­கி­யி­ருக்­கி­றது.


டொனால்ட் ட்ரம்ப் கடைப்­பி­டித்­து­வரும் 'முத­லா­வ­தாக அமெ­ரிக்கா' (America First) கொள்­கையும் சர்­வ­தேச சட்­டங்­களை மதிக்­காத அவரின் போக்கும் 9/11 தாக்­கு­தல்­க­ளுக்கு பின்­ன­ரான தசாப்­தங்­களில் ஏற்­கெ­னவே பல­வீ­ன­ம­டைந்­தி­ருந்த சர்­வ­தேச ஒழுங்கை சீர்­கு­லைத்­தன.

சர்­வ­தேச உடன்­ப­டிக்­கைகள், கால­நிலை உடன்­ப­டிக்­கைகள் மற்றும் சர்­வ­தேச அமைப்­புக்­களைப் புறந்­தள்­ளி­விட்டு தனிப்­பட்ட வர்த்­தகப் போர்­க­ளையும் அச்­சு­றுத்­தல்­க­ளையும் அவர் முதன்­மைப்­ப­டுத்­து­வதால் உலகில் பெரும் பொரு­ளா­தார நெருக்­கடி ஏற்­பட்­டி­ருக்­கி­றது. சர்­வ­தேச சட்­டங்­களைப் பற்றி தனக்கு கவ­லை­யில்லை என்று அவர் பகி­ரங்­க­மா­கவே கூறு­கிறார்.

உல­க­ளா­விய இரா­ஜ­தந்­திர நெருக்­க­டி­களை ட்ரம்ப் கையா­ளு­கின்ற விதத்தில் வெளிப்­ப­டு­கின்ற அடா­வ­டித்­த­ன­மான அணு­கு­முறை, சர்­வ­தேச உறு­திப்­பா­டின்­மையை மேலும் சீர்­கு­லைத்­தது. 9/11 தாக்­கு­தல்­க­ளுக்குப் பின்­ன­ரான ஆக்­கி­ர­மிப்­புகள், இரா­ணுவக் குவிப்­புகள் மற்றும் தன்­னிச்­சை­யான. வெளி­யு­றவுக் கொள்­கையும்   இரு­பத்­தைந்து வரு­டங்­களின் முடிவில் அமெ­ரிக்­காவின் உல­க­ளா­விய ஆதிக்­கத்தின் எல்­லையை அம்­ப­லப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றன.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை 'தி இந்து' பத்­தி­ரி­கையின் சர்­வ­தேச விவ­கார ஆசி­ரியர் ஸ்ரான்லி ஜோனி, 'ஒரு முனை உல­கத்­துக்குப் பிறகு தன்­னிச்­சை­யாகச் செயற்­படும் அமெ­ரிக்கா' (A unilateral America in a post - unipolar world)  என்ற தலைப்பில் எழு­திய கட்­டு­ரையில் 9/11 தாக்­கு­தல்­க­ளுக்கு முன்னர் இருந்த அமெ­ரிக்­கா­வுக்கும் இரு­பத்­தைந்து வரு­டங்கள் கடந்த நிலையில் இன்­றைய அமெ­ரிக்­கா­வுக்கும் இடையில் உள்ள வேறு­பாட்டை மிகவும் சுருக்­க­மாக விளக்­கி­யி­ருந்தார். அந்த பந்­தி­களின் தமிழ் மொழி­யாக்­கத்தை இங்கு மீள்­பி­ர­சுரம் செய்­வது பொருத்­த­மா­ன­தாக இருக்கும்.

"2021 செப­்டெம்பர் 11 பயங்­க­ர­வாத தாக்­கு­தல்கள் நடந்­த­போது அமெ­ரிக்கா தனது அதி­கா­ரத்தின் உச்­சத்தில் இருந்­தது. அதன் பனிப்போர் எதி­ரி­யான சோவியத் யூனியன்  ஒரு தசாப்த காலத்­துக்கு முன்னர் சிதைந்­து­போ­யி­ருந்­தது.  ரஷ்யா, சோவியத் வீழ்ச்­சிக்குப் பின்­ன­ரான குழப்­பங்­களில் இருந்து மீள்­வ­தற்கு போராடிக் கொண்­டி­ருந்­தது. அதே­வேளை, சீனா, அமெ­ரிக்­காவின் நெருக்­கிய பொரு­ளா­தாரப் பங்­கா­ளி­யாக இருந்­தது.

"கிழக்கு ஐரோப்­பாவில் அமெ­ரிக்கா வெற்­றி­க­ர­மாக இரா­ணுவத் தலை­யீ­டு­களை மேற்­கொண்­டது. வட அத்­தி­லாந்திக் ஒப்­பந்த அமைப்பு (நேட்டோ) ரஷ்­யாவின் அயல்  நாடு­களில் அதன் முதற்­கட்ட விரி­வாக்­கத்தை நிறைவு செய்­தி­ருந்­தது. அமெ­ரிக்கா மேற்­கா­சி­யா­விலும் பல­ம் மிக்க இரா­ணுவப் பிர­சன்­னத்தைக் கொண்­டி­ருந்­தது.

"9/111 தாக்­கு­தல்­க­ளுக்கு 25 வரு­டங்­க­ளுக்குப் பிறகு பயங்­க­ர­வாத குழுக்கள் பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரான போரில் தப்பிப் பிழைத்­தது மாத்­தி­ர­ம­ல்­லாமல், பல புவி­யியல் பகு­தி­களை உள்­ள­டக்­கிய எல்லை கடந்த ஜிஹாத் திட்­டத்தின் கீழ் உள்­நாட்டுப் பிரி­வு­க­ளா­கவும் உரு­வா­கி­யுள்­ளன. நேட்டோ மூலம் ஐரோப்­பா­வுக்­கான அமெ­ரிக்­காவின் அர்ப்­ப­ணிப்பு இருந்த போதிலும், அத்­தி­லாந்திக் நாடு­க­ளுக்கு இடை­யி­லான கூட்­ட­ணியில் பிளவு விரி­வ­டைந்து வரு­கி­றது. அமெ­ரிக்­காவின் பாரம்­­பரிய கூட்­டா­ளிகள், .ெவாஷிங்­டனின் புதிய கொடுக்கல் வாங்கல் தன்­மை­யான போக்­கினால் அதி­ருப்தி அடைந்து வரு­கி­ன­றனர்.

"மேற்­கா­சி­யாவில் அமெ­ரிக்­காவின் மிக நெருங்­கிய கூட்­டா­ளி­யான இஸ்ரேல், வொஷிங்­டனை மேலும் ஆழ­மான ஒரு பிராந்­தியச் சுழிக்குள் இழுத்துச் செல்­கி­றது. அமெரிக்கா, மேற்காசியாவில் முடங்கிக் கிடக்கும் வேளையில், சீனா பெருகிவரும் பல்துருவ ஒழுங்கின் இரண்டாவது தூணாக உருவெடுத்திருக்கிறது.

அதே நேரத்தில், ரஷ்யா, ஐரோப்பாவில் அமெரிக்கா தலைமையிலான பாதுகாப்புக் கட்டமைப்புக்கு தீவிரமான சவாலை ஏற்படுத்துகிறது.

"சிந்தனையற்ற ஈரான் போர் உணர்த்துவது போன்று அமெரிக்கா தொடர்ந்து ஒரு பக்கச் சார்புடைய ஆதிக்க சக்தியாகவே செயற்படுகிறது. ஆனால், அதன் தன்னிச்சையான செயற்பாடுகள் ஒரு துருவத்துக்கு பின்னரான உலகில் வளர்ந்துவரும் யதார்த்தங்களுடன் நாளுக்கு நாள் முரண்பட்டே வருகிறது."

இறுதியாக, 9/11 தாக்குதல்களைத் தொடர்ந்து அன்றைய ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் பயங்கரவாத்துக்கு எதிரான உலகளாவிய போரைப் பிரகடனப்படுத்திய

போது கியூபாவின் ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ மிகவும் தீர்க்க தரிசனமான கருத்தொன்றைக் கூறினார்.

"பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போர் என்ற பெயரில் அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் அப்பட்டமான பயங்கரவாதத்துக்கும் நியாயபூர்வமான ஆயுதப் போராட்டத்துக்கும் இடையிலான பிரிகோட்டை அழித்து விடப் போகிறார்கள்."

வீரகத்தி தனபாலசிங்கம்
பகிரவும்:

கருத்துக்கள் (0)

இதுவரை கருத்துக்கள் இல்லை.

தொடர்புடைய செய்திகள்