யுத்தம் பற்றி நாம் நிறையப் பேசுகிறோம். வழக்கமாக யுத்தத்தின் நேரடி
விளைவுகள் பற்றியும், அதன் மூலம் நிகழும் உடனடி இழப்புகள் பற்றியும்
பேசுவதே வழக்கம்.
எத்தனை உயிர்கள் காவு கொள்ளப்பட்டன, எவ்வளவு சொத்துக்கள் நாசமாகியிருக்கின்றன, பொருளாதாரம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பன போன்ற கேள்விகளுக்கு நாம் பதில் தேடுகிறோம்.
ஆனால், போரின் பலிக்கடாவாகும் இன்னுமொரு முக்கியமான விடயத்தின் மீது நாம் ஆழமான பார்வையைச் செலுத்துவதில்லை. அது வேறொன்றும் அல்ல; 'நம்பிக்கை' (Trust) என்பதாகும்.
பலம்பொருந்திய நாடுகள் ஒன்றையொன்று எதிர்த்துப் போர் செய்கின்றன. அந்நாடுகள் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி நலிந்த நாடுகளை அச்சுறுத்துகின்றன. இந்த அராஜக நடைமுறையில் சிதைந்துபோவது, உலக வர்த்தகத்தைப் பின்னிப் பிணைத்து வைத்திருக்கும் மெல்லிய நூலிழைகள்தான்.
அந்த நூலிழைகள் யாவும் பரஸ்பர நம்பிக்கையால் பிணைக்கப்பட்டவை.
அந்த நம்பிக்கையை இழப்பது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை விவரிக்கும் வணிக மாற்றமொன்று தற்போது உலக நிதியியலில் அமைதியாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இது அதிகம் கவனிக்கப்படாத, ஆனால், மிகவும் சுவாரஸ்யமான ஒரு நிகழ்வாகும்.
ஐரோப்பிய நாடுகளில் மிகவும் ஸ்திரமான நாடுகளுள் ஒன்று நெதர்லாந்து. அந்நாடு, அமெரிக்காவின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த தமக்குச் சொந்தமான பெருமளவு தங்கத்தை அங்கிருந்து மெதுவாக இடம் மாற்றி வருகிறது. பெருமளவு என்றால், சுமார் 10 பில்லியன் டொலர் பெறுமதியான தங்கம்.
இதன் பின்னாலுள்ள அரசியலைப் புரிந்துகொள்ள 'தங்கக் காப்பு நிதி' (Gold Reserves) பற்றியும், உலக நாடுகள் அவற்றை ஏன் தம் சொந்த நாட்டை விட்டு வெளியே வேறு இடங்களில் பேணிப் பாதுகாக்கின்றன என்பதையும் அறிவது அவசியமாகும்.
தம்மிடம் இருக்கும் தங்க நகைகளையோ அல்லது தங்க நாணயங்களையோ வங்கியின் பாதுகாப்பு லொக்கரில் பூட்டி வைத்துப் பராமரிக்கும் ஒரு குடும்பத்தைக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
அந்தக் குடும்பத்தினர் தேவையில்லாமல் வங்கி லொக்கரின் மீது கை வைக்க மாட்டார்கள். திடீர் மருத்துவச் செலவு அல்லது பொருளாதார நெருக்கடி ஏற்படும் சந்தர்ப்பத்தில் மட்டுமே லொக்கரிலிருந்து தங்கத்தை எடுப்பார்கள். அது ஓர் அவசரகாலச் சேமிப்பு.
இதைத்தான் உலக நாடுகளும் செய்கின்றன. ஒரு நாடு பயன்படுத்தும் காகித நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சியடையும் சந்தர்ப்பங்களில், தங்கக் கையிருப்புதான் நாட்டின் பொருளாதாரத்திற்குப் பாதுகாப்பாக அமைகிறது. நெதர்லாந்திடம் 84 பில்லியன் டொலர் பெறுமதியான 612 தொன் தங்கம் உள்ளது.
"எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் போட்டு வைக்கக் கூடாது" என்பது நிதித்துறைப் பழமொழி. ஆபத்துகளைப் பிரிப்பதற்காகவே (Risk Diversification) உலக நாடுகள் தமது தங்கத்தை நியூயோர்க், லண்டன், ஒட்டாவா போன்ற சர்வதேச வணிகத் தலைநகர்களில் பிரித்துச் சேமித்து வைக்கின்றன. இதில் நியூயோர்க்கின் 'பெடரல் ரிசர்வ்' வங்கியே உலகளவில் மிகவும் பாதுகாப்பானது என்ற நம்பிக்கை நீண்டகாலமாக நிலவி வந்தது. அப்படியாயின், நெதர்லாந்து ஏன் 10 பில்லியன் டொலர் பெறுமதியான தங்கத்தை அமெரிக்காவிலிருந்து திடீரென வெளியேற்ற வேண்டும்?
இந்தக் கேள்விக்கான விடை, உலகளாவிய ஆயுத மோதல்களால் சங்கிலித் தொடராக நிகழும் சம்பவங்களில் உள்ளது.
கடந்த சில மாதங்களாக, உலகின் பூகோள அரசியலில் நெருக்கடிகள் தீவிரமடைந்து வருகின்றன. அமெரிக்கா, ஈரானுக்கு எதிராகப் போரில் ஈடுபட்டுள்ளது; தென் அமெரிக்க நாடுகளின் அரசியலில் தலையீடு செய்கிறது; தனது அயல்நாடான கனடாவின் மீது கடுமையான இறக்குமதித் தீர்வைகளை விதித்துப் பகைமையை அதிகரித்துள்ளது.
இது தவிர, ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் இணைய மறுத்த ஐரோப்பிய நாடுகளை அமெரிக்கா பகிரங்கமாகக் கண்டிக்கிறது; வர்த்தகத் தடைகளை விதிப்பதாக மிரட்டுகிறது.
இன்னொருபுறம், ரஷ்ய-உக்ரேன் போரின் போது, ரஷ்ய மத்திய வங்கியின் 300 பில்லியன் டொலர் மதிப்பிலான சொத்துக்களை மேலைத்தேய நாடுகள் முடக்கின.
இது உலக நாடுகளுக்கு ஒரு பெரிய எச்சரிக்கை மணியை அடித்தது: "நாளை ஒரு வல்லரசு நாடு நம் மீது கோபப்பட்டால், அந்நாட்டுக் கஜானாவில் நாம் சேமித்து வைத்துள்ள நம் சொந்தச் செல்வத்தையே அவர்கள் முடக்கிவிடக் கூடும்; அதனையே நமக்கு எதிராகவும் திருப்பக்கூடும்!"
அமெரிக்காவை கண்மூடித்தனமாக நம்புவது இனி ஆபத்தானது என்பதை உணர்ந்த நெதர்லாந்து மத்திய வங்கி, அங்கிருக்கும் தங்கத்தை லண்டனுக்கும், அங்கிருந்து தனது சொந்த நாட்டுக்கும் அவசரமாக மாற்றத் தொடங்கியது. நெதர்லாந்து மட்டுமல்ல; பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகளும் தம் தங்கத்தைத் தாயகம் திருப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
அத்திலாந்திக் பெருங்கடலைக் கடந்து இவ்வளவு பெரிய அளவிலான தங்கக் கட்டிகளை (Gold Bars) கப்பல்களில் கொண்டு வருவது எளிதானதல்ல. அதில் பெரும் பாதுகாப்பு அபாயங்கள் உள்ளன. எனவே, நெதர்லாந்து மத்திய வங்கி ஒரு புத்திசாதுர்யமான இரண்டு வழிமுறைகளைக் கையாண்டது:
அதில் முதலாவது பௌதீக ரீதியான இடமாற்றம். 27 தொன் எடையுள்ள உண்மையான தங்கக் கட்டிகளைப் பலத்த பாதுகாப்புடன் அமெரிக்காவிலிருந்து நேரடியாகத் தமது நாட்டுக்குக் கப்பல்கள் மற்றும் விமானங்கள் மூலம் கொண்டு வந்தது.
அடுத்தது, நிதிச் சந்தை மூலம் கைமாற்றுதல். எஞ்சிய பெருந்தொகை தங்கத்தை நியூயோர்க் சந்தையிலேயே விற்றுவிட்டு, அதே அளவுக்குச் சமமான தங்கத்தை லண்டன் வங்கியின் கஜானாவில் உடனடியாக விலைக்கு வாங்கியது. (நியூயோர்க்கில் 8.3 பில்லியன் டொலர் மதிப்பிலான தங்கம் இவ்வாறு கைமாற்றப்பட்டது).
நிதியுலகில் நிகழும் இந்தச் சதுரங்கப் போட்டியிலிருந்து நாம் அறிந்துகொள்ள வேண்டிய பாடம் மிக முக்கியமானது.
துப்பாக்கிகள், ஏவுகணைகள், போர் விமானங்களால் மட்டுமே யுத்தம் முன்னெடுக்கப்படுவதில்லை. காகித நாணயங்கள், வர்த்தக வரிகள், பொருளாதாரத் தடைகள் ஆகியவையும் இன்று போர் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.
பலம்பொருந்திய நாடுகள் இராஜதந்திரத் தைத் தாண்டிச் சென்று ஆதிக்கம் செலுத்த
நினைக்கும் போது, உலகளாவிய நிதிச் சந் தைகள் குழப்பத்திற்குள் தள்ளப்படுகின்றன. நாடுகள் மத்தியிலான பரஸ்பர நம்பிக்கை காணாமல் போய்விடுகிறது.
தற்போதைய போர்ச் சூழலில், உலகின் மிகவும் பணக்கார, அமைதியான ஒரு தேசமே அச்சமடைந்து, தனது தங்கச் சேமிப்பைத் தன் கஜானாவிற்குள் அவசரமாகக் கொண்டுவர நினைக்கிறதென்றால், இந்த அர்த்தமற்ற போர்களில் உண்மையான வெற்றியாளர்கள் எவருமில்லை.
சதீஷ் கிருஷ்ணபிள்ளை

போர்கள், உலகைச் சந்தேகக் கண்ணோட் டம்
கொண்டதாகவும், வர்த்தக ரீதியாகச் செலவுமிக்கதாகவும் மாற்றி, அவ்வழியில் நம்
அனைவரின் எதிர்காலப் பாதுகாப்பையுமே கேள்விக்குறியாக்குகின்றன என்பதே
கசப்பான யதார்த்தமாகும்.