இரண்டாம் உலகப் போருக்குப் பின், சர்வதேசப் பணப் பரிவர்த்தனையில் அமெரிக்க டொலரின் மதிப்பு தங்கத்துடன் பிணைக்கப்பட்டது. இதனால், பன்னாட்டுச் சந்தையில் வர்த்தகம் செய்யவும், நிதிப் பரிவர்த்தனைகளை எளிதாக்கவும் நியூயோர்க் வங்கியிலேயே தங்கத்தை வைத்திருப்பது ஐரோப்பிய நாடுகளுக்கு வசதியாக இருந்தது.
சமீபகாலமாக, ஐரோப்பிய மத்திய வங்கிகள் அமெரிக்காவின் நியூயோர்க் ஃபெடரல் ரிசர்வ் வங்கியிலிருந்து தங்கள் தங்க இருப்புக்களைத் திரும்பப் பெறுவதும், லண்டன் அல்லது சொந்த நாடுகளுக்கு மாற்றுவதும் உலகப் பொருளாதாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
உலகின் பாதுகாப்பான இடமாகக் கருதப்படும் அமெரிக்காவிலிருந்து தங்க இருப்புக்கள் ஏன் வெளியேற்றப்படுகின்றன என்பதன் பின்னணியையும் அதன் எதிர்காலத் தாக்கங்களையும் விரிவாகக் ஆராய்வது அவசியமானது.
எதிரி நாடுகளின் இராணுவப் படைகள் தங்கத்தை ஆக்கிரமித்துக் கைப்பற்றிவிடுமோ என்ற பயத்தில், பாதுகாப்பான இடமாக அமெரிக்காவிற்குத் தங்கம் அனுப்பப்பட்டது.
இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில், ஐரோப்பாவில் முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்கள், அரசியல் சீர்குலைவுகள் போன்ற கடுமையான அச்சுறுத்தல்கள் நிலவின.

கடந்த சில வருடங்களாக உலகளவில் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்கள் மற்றும் புதிய புவிசார் அரசியல் சூழல்கள் காரணமாக ஐரோப்பிய நாடுகள் தங்கள் முடிவை மாற்றிக்கொண்டுள்ளன.
2013 முதல் 2017 வரையிலான காலகட்டத்திலேயே, ஜெர்மனியின் ‘பண்டேஸ்பங்க்’ (Bundesbank) 674 தொன் தங்கத்தை நியூயோர்க் மற்றும் பாரிஸிலிருந்து திரும்பப் பெற்று, தன் சொந்த நகரமான பிராங்போர்ட்டிற்கு மாற்றியது. எனினும், இன்னும் குறிப்பிடத்தக்க அளவு தங்கம் அமெரிக்காவில் உள்ளது.
இத்தாலியின் அரசியல் தலைவர்கள் மற்றும் பொது அமைப்புகள் தங்கள் நாட்டுத் தங்கத்தை மீட்டெடுக்கக் கோரிக்கைகளை எழுப்பி வருகின்றன. எதிர்காலத்தில் எந்தவொரு நாடும் ஒரே வெளிநாட்டு வங்கியையோ அல்லது ஒரே உலகளாவிய மையத்தையோ முழுமையாக நம்பியிருக்காது. தங்க இருப்புக்கள் 30 சதவீதத்தை சொந்த நாட்டிலும், 30 சதவீதத்தை லண்டனிலும், எஞ்சியதை அமெரிக்காவிலும் எனப் பிரித்து வைப்பிலிடப்படும்.
உலகளவில் மத்திய வங்கிகள் தங்கள் தங்க இருப்புக்களின் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை அளித்து, தங்கத்தை அதிகளவில் வாங்கிச் சேமித்து வருவதால் பன்னாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சமடைந்து வருகிறது.
அமெரிக்க டொலர் மற்றும் அமெரிக்க அரசாங்கக் கடன் பத்திரங்கள் மீதான நம்பிக்கைக் குறைவு, என்பன ஐரோப்பிய மத்திய வங்கிகளை பாதுகாப்பான இடத்தை நோக்கி நகர்த்துகின்றன.
சுருங்கக் கூறின், இது அமெரிக்கா மீதான நேரடிப் பகைமை என்பதை விட, மாறிவரும் உலக அரசியல் சூழலில் தங்களின் தேசியச் சொத்துக்களைப் பாதுகாப்பாகவும் எளிதில் பயன்படுத்தக்கூடிய வகையிலும் வைத்துக்கொள்ள ஐரோப்பிய நாடுகள் எடுக்கும் ஒரு தற்காப்பு நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது.
எஸ்.அபிலாஷினி…

நியூயோர்க் ஃபெடரல் ரிசர்வ் வங்கி பாதுகாப்பாளராக மட்டுமே செயல்பட்டதே தவிர, அத் தங்கத்தின் முழு உரிமையும் அந்தந்த ஐரோப்பிய மத்திய வங்கிகளுக்கே உரித்தானது.
உக்ரைன்- ரஷ்யா போர் மற்றும் உலகளவில் விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகள், வெளிநாடுகளில் வைக்கப்படும் சொத்துக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளன. ஒரு நெருக்கடி காலத்தில் வெளிநாட்டில் உள்ள தங்கத்தை உடனடியாக அணுக முடியாமல் போகலாம் என்ற அச்சம் உருவெடுத்துள்ளது.
கடந்த சில வருடங்களாக உலகளவில் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்கள் மற்றும் புதிய புவிசார் அரசியல் சூழல்கள் காரணமாக ஐரோப்பிய நாடுகள் தங்கள் முடிவை மாற்றிக்கொண்டுள்ளன.
அமெரிக்காவின் உள்நாட்டுப் பொருளாதாரம், உயர்ந்து வரும் கடன் சுமை, மற்றும் அரசியல் தலைமைகளின் கணிக்க முடியாத வெளியுறவுக் கொள்கைகள் ஐரோப்பிய நாடுகளுக்கு நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியுள்ளன.
நெருக்கடிமிக்க காலங்களில் தங்கத்தை விரைவாக விற்பனை செய்யவோ அல்லது பணமாக மாற்றவோ சொந்த நாட்டிலோ அல்லது உலகளாவிய தங்க வர்த்தக மையமான லண்டன் போன்ற இடங்களிலோ வைத்திருப்பது சிறந்தது என மத்திய வங்கிகள் கருதுகின்றன.
இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து தங்கத்தைத் திரும்பப் பெற்ற நாடுகளின் பட்டியல் நீண்டு செல்கின்றது. 2026 ஓகஸ்ட் மாத நிலவரப்படி, நெதர்லாந்து மத்திய வங்கி தனது 86 தொன் தங்கத்தை வட அமெரிக்காவிலிருந்து (அமெரிக்கா மற்றும் கனடா) லண்டனுக்கு மாற்றியது. அவசர காலங்களில் உடனடிப் பயன்பாட்டிற்கு லண்டன் சந்தை மிகவும் உகந்தது என அது தெரிவித்தது.
2025 ஜூலை முதல் 2026 ஜனவரி வரையிலான காலத்தில், பிரான்ஸ் மத்திய வங்கி ( நியூயோர்க்கில் எஞ்சியிருந்த 129 தொன் தங்க இருப்பை முற்றிலுமாக மீளப் பெற்று, சொந்த நாட்டுக்குக் கொண்டுசென்று விட்டது.