சமீபத்திய பதிவுகள்
தமிழ் சினிமாவின் உச்சம்.. 700 கோடியை கடந்த முதல் தமிழ் படம்.. 76 வயதில் வரலாறு படைத்த ரஜினி!  •  ஹவுதிகளிடம் சரணடைந்த சவுதி! ரூ.8,400 கோடியுடன் களமிறங்கிய இளவரசர்?  •  இளம்பெண்ணை வெட்டிக் கொன்றுவிட்டு, லாரியில் பாய்ந்து உயிரை மாய்த்த இளைஞர் - கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி  •  அன்பில் மகேஸ் கைதின் பின்னணி என்ன? முழு விவரம்!  •  இஸ்ரேலியத்-தேர்தல்-தலைமை-மாறினால்-கொள்கை-மாறுமா?

\"ஈரோடுஅருகே மீட்கப்பட்ட செவிலியர் உடல்.. நகைக்காக கொலை செய்து உடல் வீச்சு... காட்டிக் கொடுத்த காகிதம்.. உடன் பணிபுரிந்த ஊழியர் கைது

\"ஈரோடுஅருகே மீட்கப்பட்ட செவிலியர் உடல்.. நகைக்காக கொலை செய்து உடல் வீச்சு... காட்டிக் கொடுத்த காகிதம்.. உடன் பணிபுரிந்த ஊழியர் கைது
 "ஈரோடுஅருகே மீட்கப்பட்ட செவிலியர் உடல்.. நகைக்காக கொலை செய்து உடல் வீச்சு... காட்டிக் கொடுத்த காகிதம்.. உடன் பணிபுரிந்த ஊழியர் கைது 

"ஈரோடு அருகே நகைக்காக உடன் பணியாற்றும் செவிலியரை கொலை செய்து நிர்வாணப்படுத்தி சாலையில் வீசி சென்ற கொலைகார சைக்கோ கொடூரனை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது." 

t;ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளியான ரஞ்சித் குமாரின் மனைவி 26 வயதான உத்ரா, திருப்பூர் மாவட்டம் பல்ல கவுண்டன்பாளையத்தில் தனியார் மருத்துவமனையில் கடந்த 3-ம் தேதி முதல் செவிலியராக வேலைக்கு சேர்ந்து பணி செய்து வந்துள்ளார். 

காலையில் ரஞ்சித்குமார் வேலைக்கு செல்லும்போது மனைவியை விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே பேருந்தில் செல்ல இறக்கி விட்டுவிட்டு இரவு வேலை முடிந்து திரும்ப வரும்போது மனைவி உத்ராவையும் பேருந்தில் இருந்து இறங்கியதும் அழைத்து வருவது வழக்கம். 

இந்நிலையில் கடந்த 14- ஆம் தேதி மனைவியை வழக்கம் போல் ரஞ்சித்குமார் காலை அழைத்து சென்று பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டுவிட்டு, மீண்டும் இரவு மனைவியை அழைத்து செல்ல காத்திருந்தார். 

ஆனால் உத்ரா வராததால் அவரது செல்போனையும் எடுக்காததால் மருத்துவமனைக்கு போன் செய்துள்ளார். அப்போது உத்ரா மருத்துவமனையில் இருந்து சீக்கிரமாகவே சென்று விட்டதாக கூறியதால் அங்கிருந்து வீட்டிற்கு சென்று பார்த்தபோது உத்ரா வீட்டிற்கும் வரவில்லை என தெரியவந்தது. 

இதனையடுத்து கடந்த 15 ஆம் தேதி ஊத்துக்குளி காவல் நிலையத்தில் ரஞ்சித் குமார் அளித்த புகாரில் உத்ராவை தேடி வந்தனர்.


இந்த நிலையில், கடந்த 17-ந்தேதி பெருந்துறை அருகே விஜயமங்கலம் சுங்கச்சாவடி பகுதியில் புதர் பகுதியில் இளம்பெண் உடல் நிர்வாண நிலையில் கிடப்பதாக பெருந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

சம்பவ இடத்தில் இருந்து அழுகி நிலையில் இருந்த பெண்ணின் உடலை மீட்டு விசாரித்ததில், காணாமல் போன செவிலியர் உத்ராவின் சடலம் என்பது தெரியவந்தது. 

உத்ராவின் உடலை பெருந்துறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ததில் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்ததற்கான தடயம் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. 

கடந்த இரு நாட்களாக உத்ராவின் கொலைக்கு காரணம் என்ன? யார் கொன்றது என விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், திருமணம் செய்து ஓராண்டே ஆகும் நிலையில், தனது மனைவிக்கு என்ன நடந்தது என புரியாமல் அவரது உடலை பார்த்து கதறி அழுத துக்கம் தாளாமல் ரஞ்சித்குமாரும் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

மருத்துவமனை வளாகத்தில் மரக்கிளையில் தூக்கிக் கொண்ட ரஞ்சித்குமாரை மீட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, உத்ரா சடலமாக மீட்கப்பட்ட இடத்தில் இருந்து செல்போன் எண் எழுதப்பட்ட கசங்கிய நிலையில் இருந்த காகிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். 

இந்த எண் உத்ராவுடன் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த சரவணன் என்பவருடையது என தெரியவந்தது. 

அதேவேளையில் உத்ரா காணாமல் போன அன்று மருத்துவமனையில் அவர் புறப்படுவதற்கு முன்பு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், சரவணன் தனது செல்போன் எண்ணை எழுதி உத்ராவிடம் கொடுத்த காட்சிகள் பதிவாகியிருந்ததாக கூறப்படுகிறது. 

சரவணன் மீது சந்தேகம் வலுத்த நிலையில், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சரவணன் தான் கொலையாளி என்பதும், நகைக்காக உத்ராவை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. 

சம்பவம் நடந்த அன்று வேலை முடிந்து உத்ரா செல்வதற்கு முன் தனது செல்போன் எண்ணை வலுக்கட்டாயமாக கொடுத்த சரவணன், அலுவலகத்தில் இருந்து பின் தொடர்ந்து சென்றுள்ளார். 


பின்னர் தான் போகும் வழியில் இறக்கிவிட்டுச் செல்வதாக கூறி உத்ராவை தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் விஜயமங்கலம் சுங்கச் சாவடி அருகே சர்வீஸ் சாலை வழியாக சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வண்டியை நிறுத்தி உத்ரா அணிந்திருந்த நகைகளை கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. 

உத்ரா மறுப்பு தெரிவித்து கூச்சலிட்டதால் திடீரென அவர் அணிந்திருந்த துப்பாட்டாவை கொண்டு கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, அவரது கழுத்தில் இருந்து நான்கரை சவரன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டும், கொலையை திசைத்திருப்ப அவரது ஆடைகளை கலைந்து வீசியுள்ளார். 

அப்போது தான் சரவணன் எழுதிக் கொடுத்த காகிதம் உத்ராவின் லெகின்ஸில் இருந்து கீழே விழுந்துள்ளது. இந்த வழக்கில் துப்பு துலக்க முக்கிய தடயமாக மாறியுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்

.மேலும், தன் செலவுகளுக்கு பணம் தேவைப்பட்டதால் பலரிடமும் கேட்டு யாரும் தராதால் உத்ரா அணிந்து இருந்த நகையை கண்டு கேட்டதாகவும், அதற்க்கு தர மறுக்கவே நகைக்காக கொலை செய்ததாகவும் கைதான நபர் வாக்குமூலம் அளித்துள்ளார். 

நான்கரை சவரன் நகைக்காக உடன் பணிபுரிந்த பெண்ணை திட்டம்போட்டு கொலை செய்த சரவணன் ஏற்கனவே குற்றப்பின்னணி கொண்ட நபர் எனவும், எந்தவொரு நிறுவனங்களிலும் வேலைக்கு ஆட்களை நியமிக்கும் போது போலீசார் மூலம் அவர்களது நன்னடத்தை சான்று பெற வேண்டும் என்ற உத்தரவையும் பின்பற்றவில்லை என போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
பகிரவும்:

கருத்துக்கள் (0)

இதுவரை கருத்துக்கள் இல்லை.

தொடர்புடைய செய்திகள்