சமீபத்திய பதிவுகள்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் இரு வருட ஆட்சியின் கோலங்கள்  •  200 முதல் 260 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்பட்ட 15 பேரும் யார்? ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் தீர்ப்பு விவரம்  •  ’ராதா தான் எங்களுக்கு ரூ.97 கோடி தரணும்..’ அம்பிகா கண்ணீர் பேட்டி!- வீடியோ  •  யாழில் பாடசாலையில் இருந்து மகளை ஏற்றி சென்றவர் புகையிரத விபத்தில் சிக்கி உயிரிழப்பு  •  13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சித்தப்பாவுக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை! - மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு

மசாஜ் நிலையத்தில் இரகசிய கமராக்கள் ; உரிமையாளர் உட்பட மூன்று பெண்கள் கைது

மசாஜ் நிலையத்தில் இரகசிய கமராக்கள் ; உரிமையாளர் உட்பட மூன்று பெண்கள் கைது
பண்டாரவளை, எல்லத்தோட்ட பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்ததாகக் கூறப்படும் நிலையமொன்றில் இரகசியமாக கமராக்கள் பொருத்தி காணொளிகளை பதிவு செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், நிலையத்தின் உரிமையாளர் உட்பட மூன்று பெண்களை பண்டாரவளை பொலிஸ் பிரிவின் குற்றத்தடுப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

குறித்த நிலையத்தில் இரகசிய கமராக்கள் பொருத்தப்பட்டிருந்ததுடன், அவற்றின் மூலம் பதிவு செய்யப்பட்ட காணொளிகள் தொலைபேசியில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் நிலையத்தின் உரிமையாளரும் மேலும் இரு பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் நேற்று (22) செவ்வாய்க்கிழமை பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து,   அக்டோபர் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பதிவு செய்யப்பட்ட காணொளிகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட பணத்திற்கு மேலதிகமாக வேறு நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதா என்பது தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸ் பிரிவின் குற்றத்தடுப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பகிரவும்:

கருத்துக்கள் (0)

இதுவரை கருத்துக்கள் இல்லை.

தொடர்புடைய செய்திகள்