சமீபத்திய பதிவுகள்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் இரு வருட ஆட்சியின் கோலங்கள்  •  200 முதல் 260 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்பட்ட 15 பேரும் யார்? ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் தீர்ப்பு விவரம்  •  ’ராதா தான் எங்களுக்கு ரூ.97 கோடி தரணும்..’ அம்பிகா கண்ணீர் பேட்டி!- வீடியோ  •  யாழில் பாடசாலையில் இருந்து மகளை ஏற்றி சென்றவர் புகையிரத விபத்தில் சிக்கி உயிரிழப்பு  •  13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சித்தப்பாவுக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை! - மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் இரு வருட ஆட்சியின் கோலங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் இரு வருட ஆட்சியின் கோலங்கள்
தேசிய மக்கள் சக்­தியின் தலைவர் அநுர குமார திசாநா­யக்க நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்று எதிர்­வரும் புதன்­கி­ழ­மை­யுடன் சரி­யாக இரு வரு­டங்கள் நிறை­வ­டை­கின்­றன. இலங்­கையின் அர­சியல் வர­லாற்றுப் போக்கில் 2024 செப்­டெம்பர் 21 ஜனா­தி­பதி தேர்தல் முக்­கி­ய­மான ஒரு திருப்­பு­மு­னை­யாக அமைந்­தது.

நிறை­வேற்று அதி­கார  ஜனா­தி­பதி ஆட்­சி­முறை  1978ஆம் ஆண்டில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­ட­தி­லி­ருந்து  இது­வரை திச­நா­யக்க  ஒன்­பது ஜனா­தி­ப­திகள் பத­வியில் இருந்­தி­ருக்­கி­றார்கள். காலங்­கா­ல­மாக நாட்டின் அர­சியல் அதி­காரம் ஒரு குறிப்­பிட்ட பாரம்­ப­ரிய அர­சியல் மேல்­தட்டு வர்க்­கத்­தி­னரின் கரங்­க­ளி­லேயே சுழன்று கொண்­டி­ருந்­தது. ரண­சிங்க பிரே­ம­தாச, மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் அநுர குமார திசாநா­யக்க ஆகிய மூவரைத் தவிர, ஏனைய ஆறு ஜனா­தி­ப­தி­களும் குடும்பப் பாரம்­ப­ரியம், உயர்­குடிப் பின்­னணி மற்றும் பாரம்­ப­ரிய அர­சியல் கட்­சி­களின் கட்­ட­மைப்­புக்­களைச் சேர்ந்­த­வர்­க­ளா­கவே இருந்­தனர்.

இவர்­களில் திசாநா­யக்­கவின் வருகை மிகவும் தனித்­து­வ­மா­னது. வட­மத்­திய மாகா­ணத்தின் தம்­புத்­தே­கம பகு­தியில் எளி­மை­யான விவ­சாயக் குடும்பப் பின்­பு­லத்­தி­லி­ருந்து வந்து, ஆயு­த­மேந்­திய கிளர்ச்­சி­களின் வர­லாற்றுப் பின்­ன­ணியைக் கொண்ட மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் (ஜே.வி.பி.) தலை­வ­ராக உரு­வெ­டுத்து தேசிய மக்கள் சக்­தியின் மூலம் நாட்டின் ஒன்­ப­தா­வது நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­தி­யாக அவர் பத­விக்கு வந்­தது "அர­சியல்  அதி­கா­ரத்தின் வர்க்க மாற்றம்" என்று வர்­ணிக்­கப்­பட்­டது.

2024 செப்­டெம்பர் 23ஆம் திகதி திச­ாநா­யக்க ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்­ற­தற்கு பிறகு "இலங்­கையில் அதி­கார நிலை மாற்­றமும் அர­சியல் எழுச்­சியும்" என்ற தலைப்பில் எழு­திய கட்­டுரை ஒன்றில்  நாட்டின் முன்­னணி அர­சியல் அறி­வியல் பேரா­சி­ரி­ய­ரான  ஜெய­தேவ உயன்­கொட பின்­வ­ரு­மாறு குறிப்­பிட்­டி­ருந்தார்:

"புதிய ஜனா­தி­ப­தி­யாக திச­ாநா­யக்க பத­வி­யேற்ற நிகழ்வு வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த புதிய தொடக்கம் ஒன்றைக் குறித்து நிற்­கி­றது. அது அர­சியல் அதி­கா­ரத்தின் வர்க்கத் தளங்­களில் ஒரு திடீர் நகர்வை அடை­யா­ளப்­ப­டுத்­து­கி­றது. அதா­வது, கொழும்பை மைய­மாகக் கொண்ட, மேற்­கத்­தைய பாணி வாழ்க்கை முறையைப் பின்­பற்றும் வசதி படைத்த  ஒரு சிறிய எண்­ணிக்­கை­யி­லான   பிரி­வி­ன­ரி­ட­மி­ருந்து அதி­காரத் தளங்கள் உயர் வர்க்­கத்­த­வர்கள் அல்­லாத சமூக சக்­தி­களின் கூட்­டணி ஒன்­றுக்கு நகர்ந்­தி­ருக்­கி­றது.

"கால­னித்­துவ ஆட்­சி­யா­ளர்­க­ளிடம் இருந்து 1948 ஆம் ஆண்டில் சுதந்­தி­ர­ம­டைந்த நாளில் இருந்து இலங்­கையின் ஜன­நா­யகம், அர­சியல் அதி­கா­ரத்தில் உயர் வர்க்­கத்­த­வர்­களின் முறி­வ­டை­யாத தொடர்ச்­சியை உத்­த­ர­வாதம் செய்­தி­ருந்­தது என்றால், இப்­போது அது கடந்த காலத்தில் இருந்து ஒரு வில­கலைத் தோற்­று­வித்­தி­ருக்­கி­றது. இது ஜன­நா­ய­கமும்  சுதந்­தி­ர­மான, நேர்­மை­யான  தேர்­தல்­களும் அவ்­வப்­போது தோற்­று­விக்­கக்­கூ­டிய ஒரு வியத்­தகு தரு­ண­மாகும்.

"குறிப்­பாக, ஜனா­தி­பதி தேர்தல் முடி­வுகள் அமை­தி­யான, --இரத்தம் சிந்­தாத அதி­கார மாற்­றத்­தையும் குறித்து நிற்­கி­றது. சுமார் ஏழு தசாப்­தங்­க­ளாக வச­தி­ப­டைத்த சமூக வர்க்­கங்­களின் பிறப்­பு­ரிமை போன்று நிலைத்­தி­ருந்த ஊழல்­த­ன­மான, நாட்­பட்­டுப்­போன அர­சாங்க முறைமை ஒன்றை முழு­வ­து­மாக மாற்­றி­ய­மைப்­ப­தற்­கான வாக்­கு­று­தி­யுடன் புதிய ஜனா­தி­பதி தனது மக்கள் ஆணையைப் பெற்­றி­ருக்­கிறார். ஜன­நா­ய­கத்தின் ஊடாக நிறு­வ­ன­ம­யப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த அர­சியல் அதி­கா­ரத்தின் மீதான வர்க்க ஏக­போகம் பொது மக்­க­ளா­லேயே இப்­போது தகர்க்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

"உயர்­வர்க்க சமூ­கங்­களைச் சாராத பிர­தி­நி­திகள் என்ற வகையில் ஜனா­தி­பதி திச­ாநா­யக்­கவும் தேசிய மக்கள் சக்தி அர­சாங்­கமும் மெய்­யான மாற்­றத்தை வேண்­டி­நிற்கும் மக்­களின் உணர்­வு­களை மதித்துச் செயற்­ப­டக்­கூ­டிய சிறந்த ஆட்­சி­யா­ளர்­க­ளா­கவும் சிறந்த ஜன­நா­ய­க­வா­தி­க­ளா­கவும் தங்­களால் செயற்­ப­ட­மு­டியும் என்­பதை நிரூ­பிக்க வேண்­டிய பொறுப்பைக் கொண்­டி­ருக்­கி­றார்கள்."

இத்­த­கைய பின்­பு­லத்தில், ஜனா­தி­பதி திசாநா­யக்­கவின் ஆட்சி இரு வரு­டங்­களை நிறை­வு­செய்­தி­ருக்கும் நிலையில், முன்­னைய ஜனா­தி­ப­தி­களின் ஆட்­சி­மு­றை­யோடு ஒப்­பீட்­ட­ளவில் அவரின் ஆட்­சித்­திறன், சாத­னைகள், குறை­பா­டுகள் மற்றும் சாத்­தி­ய­மான  எதிர்­காலப் போக்­குகள் குறித்து  இந்த பத்தி இன்று ஆராய்­கி­றது.

ஜே. ஆர். ஜய­வர்­தன



ஜே. ஆர். ஜய­வர்­தன முதல் ரணில் விக்­கி­ர­ம­சிங்க வரை­யி­லான பாரம்­ப­ரிய அதி­கார வர்க்க ஆட்­சி­யா­ளர்கள் ஜனா­தி­பதி பத­வியை அதி­யுயர் அதி­கார மைய­மா­கவும் ஆடம்­பர மற்றும் பாது­காப்புப் பரி­வா­ரங்கள் நிறைந்த ஒன்­றா­கவும் பேணி வந்­தனர். ஆனால், திச­ாநா­யக்க தனது எளி­மை­யான பின்­பு­லத்தின் இயல்­புக்கு உரித்­தான முறையில்  தோற்­றத்­திலும் நடை­மு­றை­யிலும் படா­டோ­ப­மற்ற ஒரு ஜனா­தி­ப­தி­யாக தன்னை மக்கள் முன்­னி­றுத்­து­வதில் கவனம் செலுத்­து­கிறார்.

முன்­னைய பல ஆட்­சி­களில் (குறிப்­பாக, ராஜபக் ஷ சகோ­த­ரர்­களின் ஆட்­சியில் ) ஆட்­சி­மு­றையின் சகல  பிரி­வு­க­ளிலும் குடும்ப உறுப்­பி­னர்­களின் ஆதிக்கம் உச்ச நிலையில் இருந்­தது. திச­ாநா­யக்­கவின் ஆட்­சியில் குடும்ப ஆதிக்க அர­சியல் என்­பது  முற்­றிலும் இல்­லாத சூழல் தோற்­று­விக்­கப்­பட்­டி­ருப்­பது முக்­கி­ய­மான ஒரு மாற்­ற­மாகும்.  ஜனா­தி­ப­தி­யையோ அல்­லது அமைச்­சர்­க­ளையோ  அவர்­க­ளது வாழ்க்கைத் துணை­யுடன் பொது வெளியில் காணக்­கூட முடி­வ­தில்லை.

ஜே.வி.பி.யின் மார்க்­சியப் பின்­புலம் குறித்து பல்­வேறு விமர்­ச­னங்கள் இருக்­கின்ற போதிலும், ஒரு­வி­த­மான இட­து­சாரி ஒழுக்­கத்­தையும் கூட்டுத் தலை­மைத்­து­வத்­தையும் மைய­மாகக் கொண்ட தேசிய மக்கள் சக்­தியின் வழி­காட்­டலில் நிரு­வாகம் இயங்­கு­வதால் தனி­ந­பரின் விருப்பு வெறுப்­புக்­களை விடவும்  கட்­சியின் கொள்கைத் தீர்­மா­னங்­க­ளுக்கே முன்­னு­ரிமை அளிக்­கப்­ப­டு­கி­றது. ஆனால், அந்த தீர்­மா­னங்கள் குறித்து பல்­வேறு விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­ப­டு­வது வேறு விடயம்.

பொரு­ளா­தார மீட்­சிக்­காக ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்கம் முன்­னெ­டுத்த சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் உத­வி­யு­ட­னான மறு­சீ­ர­மைப்புத் திட்­டத்தை விமர்­சித்து ஆட்­சிக்கு வந்த போதிலும், தேசிய மக்கள் சக்­தி­யிடம் நடை­முறைச் சாத்­தி­ய­மான வேறு திட்டம் எதுவும் இல்­லாத கார­ணத்தால் பொரு­ளா­தாரச் சரிவை  மேலும் தீவி­ர­ம­டை­யாமல் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக அதே உடன்­ப­டிக்­கையை தொடர வேண்­டிய நிர்ப்­பந்தம் ஏற்­பட்­டது. தேசிய மக்கள் சக்­திக்­கென்று  பொரு­ளா­தாரக் கொள்கை ஏதா­வது இருக்­கி­றதா  என்­பது எவ­ருக்கும் தெரி­ய­வில்லை.

தேர்தல் காலத்தில் அளித்த வாக்­கு­று­தி­க­ளுக்கு அமைய, நடுத்­தர மற்றும் உழைக்கும் மக்­க­ளுக்கு வரிக் குறைப்­பு­க­ளையோ அல்­லது பெரும் பொரு­ளா­தார நிவா­ர­ணங்­க­ளையோ வழங்­க­மு­டி­யாமல் சர்­வ­தேச நிதி நிறு­வ­னங்­களின் நிபந்­த­னை­க­ளுக்கு கட்­டுப்­பட வேண்­டிய நிலையில் அர­சாங்கம் இருக்­கி­றது. சர்­வ­தேச நாணய நிதி­யத்­து­ட­னான உடன்­ப­டிக்­கையை மீள்­பேச்­சு­வார்த்­தைக்கு உட்­ப­டுத்­து­வ­தாக தேர்தல் காலத்தில் தேசிய மக்கள் சக்தி கூறி­ய­போ­திலும், கடந்த இரு வரு­டங்­களில் அது சாத்­தி­ய­மா­க­வில்லை.

முன்­னைய அர­சாங்­கங்­களின் காலத்தில் இடம்­பெற்ற ஊழல் முறை­கே­டுகள் மற்றும் நிதி மோச­டிகள் தொடர்­பான விசா­ர­ணை­களை  அர­சாங்கம் முடுக்­கி­விட்­டி­ருப்­ப­தையும் அரச துறையில் இயன்­ற­ள­வுக்கு வெளிப்­ப­டைத்­தன்­மையைக் கொண்டு வரு­வ­தற்கு முயற்­சி­களை முன்­னெ­டுப்­ப­தையும் மக்கள் ஆத­ரித்து  வர­வேற்­கின்­றனர். போதைப்­பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் கும்­பல்­களின் நட­வ­டிக்­கை­கைளை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு அர­சாங்கம் எடுத்து வரும் நட­வ­டிக்­கைகள்  குறிப்­பி­டத்­தக்­கவை.

ஆனால், சிறு­பான்மைச் சமூ­கங்­களின் பிரச்­சி­னை­களைப் பொறுத்­த­வரை, குறிப்­பாக வடக்கு, கிழக்கு தமிழ்­ப்பேசும் மக்­களின் நியா­ய­பூர்­வ­மான அர­சியல் அபி­லா­ஷைகள், அதி­கா­ரப்­ப­கிர்வு மற்றும் மூன்று தசாப்­த­கால போரின் விளை­வான மனி­தா­பி­மானப் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­களைக் காண்­பதில் முன்­னைய அர­சாங்­கங்­களைப் போன்றே தேசிய மக்கள் சக்தி அர­சாங்­கமும் தயக்கம் காட்­டு­கி­றது.

சகல சமூ­கங்­க­ளையும் சமத்­து­வ­மாக நடத்­து­வதும் இன­வா­தமும் மதத் தீவி­ர­வா­தமும் மீண்டும் தலை­யெ­டுக்­காமல் இருப்­பதை உறுதி செய்­வதும் தங்­க­ளது உறு­தி­யான கொள்கை என்று ஜனா­தி­பதி திசா­நா­யக்­கவும் அர­சாங்கத் தலை­வர்­களும் இடை­ய­றாது கூறிக் கொண்­டி­ருக்­கி­றார்கள். ஆனால், போரின் விளை­வாக தமிழ் மக்கள் முகங்­கொ­டுக்­கின்ற  பிரத்­தி­யே­க­மான பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­களைக் காணாமல் வெறு­மனே சமத்­துவக் கோட்­பாட்டைப் பற்றி பேசிக் கொண்­டி­ருப்­பதில் அர்த்­த­மில்லை.

வடக்கு, கிழக்கில் இரா­ணு­வத்­தினர் வச­முள்ள குடி­மக்­க­ளுக்குச் சொந்­த­மான வள­மான காணி­களை விடு­விப்­ப­திலும் கடந்த காலப் போர்க் குற்­றங்கள் மற்றும் காணா­ம­லாக்­கப்­பட்டோர் தொடர்­பான உண்மை கண்­ட­றியும் பொறி­மு­றை­களை உரு­வாக்­கு­வ­திலும் அர­சாங்கம் அக்­கறை காட்டத் தயா­ராக இல்லை.

பத­விக்கு வந்­ததும் ஒரு மாத காலத்­திற்குள் மாகா­ண­சபை தேர்­தல்­களை நடத்­து­வ­தாக வாக்­கு­றுதி வழங்­கிய தேசிய மக்கள் சக்தி, தற்­போது இரு வரு­டங்கள் நிறை­வ­டை­கின்ற நிலை­யிலும் கூட அதை நிறை­வேற்­ற­வில்லை. மாறாக, அந்த தேர்­தல்­களை மேலும் தாம­திப்­ப­தற்­காக பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு போன்ற தந்­தி­ரோ­பா­யங்­களை அர­சாங்கம் கையா­ளு­கின்­றது என்ற சந்­தேகம் மக்கள் மத்­தியில் வலு­வ­டைந்­தி­ருக்­கி­றது.

அதி­காரப் பகிர்வைச் செய்­வ­தற்­காக முன்­னெ­டுக்­கப்­பட்ட  சகல முன்­னைய  முயற்­சி­க­ளையும் கடு­மை­யாக எதிர்த்த  கசப்­பான வர­லாற்றை ஜே.வி.பி. கொண்­டி­ருக்­கி­றது. அதனால், மாகாண சபை தேர்­தல்­களை நடத்­து­வ­திலோ அல்­லது அர­சி­ய­ல­மைப்­புக்­கான 13 ஆவது திருத்­தத்தை  நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­திலோ தேசிய மக்கள் சக்தி அர­சாங்­கத்­துக்கு அக்­கறை இருக்கும் என்று நம்­பு­வ­தற்­கில்லை.

இந்­தி­யாவின் தலை­யீட்டின் கார­ண­மாக சுமார் நாற்­பது வரு­டங்­க­ளுக்கு முன்னர் கொண்டு வரப்­பட்ட மாகாண சபைகள் முறை மாத்­தி­ரமே அதி­காரப் பகிர்வு தொடர்பில் இலங்கை அர­சி­ய­ல­மைப்பில் இருக்­கின்ற ஒரே­யொரு சட்ட ரீதி­யான ஏற்­பா­டாகும். ஜே.வி.பி.யின் கட்­டுப்­பாட்டில் உள்ள இன­றைய அர­சாங்­கத்தின் காலத்தில் அதற்கு ஏற்­ப­டக்­கூ­டிய கதி குறித்து பலத்த சந்­தே­கங்கள் இயல்­பா­கவே எழு­கின்­றன.


ரில்வின் சில்வா

புதிய அர­சி­ய­ல­மைப்பு கொண்­டு­வ­ரப்­படும் வரை மாகாண சபைகள் முறை தொடரும் என்று பொதுச் செய­லாளர் ரில்வின் சில்வா உட்­பட ஜே.வி.பி.யின் தலை­வர்கள் கூறு­கின்­றார்கள். 

மாகா­ண­சபை தேர்­தல்­களை நடத்­தாமல் ஜனா­தி­ப­தியின் நேரடிப் பிர­தி­நி­தி­க­ளான ஆளு­நர்கள்  மூல­மாக  மாகா­ணங்­களை நிரு­வ­கிப்­பது அதி­காரப் பகிர்வுக் கோட்­பாட்டை கேலி செய்­வ­தற்கு ஒப்­பா­ன­தாகும். புதிய அர­சி­ய­ல­மைப்பு கொண்­டு­வ­ரப்­படும் வரை மாகாண சபை­களை மக்­க­ளினால் தெரிவு செய்­யப்­படும் பிர­தி­நி­திகள் நிரு­வ­கிப்­பதை உறுதி செய்தால் மாத்­தி­ரமே இது விட­யத்தில் தமிழ் மக்­களின் நம்­பிக்­கையை அர­சாங்­கத்­தினால் பெறக்­கூ­டி­ய­தாக இருக்கும்.

தேசிய மக்கள் சக்தி ஆட்­சிக்கு புதிய கட்சி என்­ப­தாலும் அதன் அர­சாங்­கத்தின் தல­வர்­களின் வர்க்­க­நிலை கார­ண­மா­கவும் பாரம்­ப­ரிய அரசு இயந்­தி­ரத்­தையும் உயர்­மட்ட அதி­கா­ரிகள் வர்க்­கத்­தையும் முழு­மை­யாகக் கையாளும் அனு­பவம் இன்­மையால் சில கொள்கைமுடிவுகளைச்  செயற்­ப­டுத்­து­வதில்  நெருக்­க­டி­களை எதிர்­நோக்க வேண்­டி­யி­ருக்­கி­றது. முக்­கி­ய­மான அமைச்­சர்கள் இதை வெளிப்­ப­டை­யாக ஆத்­தி­ரத்­துடன் கூறியும் இருக்­கி­றார்கள். பாரம்­ப­ரிய அர­சியல் அதி­கார வர்க்­கத்­துக்கு சேவை செய்­து­வந்த பழைய அரசு இயந்­தி­ரத்தை அப்­ப­டியே வைத்­துக்­கொண்டு பய­னு­று­தி­யு­டைய மாற்­றங்­களைக் கொண்­டு­வர முடி­யாது என்­பதை இது வெளிக்­காட்­டு­கி­றது.

ஜனா­தி­பதி திச­ாநா­யக்க தனது பதவிக் காலத்தின் எஞ்­சிய மூன்று வரு­டங்­க­ளிலும் கடு­மை­யான சவால்­களை எதிர்­நோக்க வேண்­டி­யி­ருக்கும். புதிய அர­சி­ய­ல­மைப்பு வரைவுச் செயன்­மு­றை­களை ஓர் அர­சாங்கம் அதன் பத­விக்­கா­லத்தின் பிற்­ப­கு­தியில் முன்­னெ­டுப்­பதில் பல­வி­த­மான நெருக்­க­டி­க­ளுக்கு முகங்­கொ­டுக்க வேண்­டி­யி­ருக்கும். நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி ஆட்­சி­முறை திச­ாநாயக்கவின் இந்த பத­விக்­கா­லத்­திற்கு ஒழிக்­கப்­ப­டு­வ­தற்­கான சாத்­தி­யங்கள் குறித்து பலத்த சந்­தே­கங்கள் எழு­கின்­றன.

ஜனா­தி­பதி திச­நா­யக்க இட­து­சாரிச் சித்­தாந்­தங்­க­ளுக்கு அழுத்தம் கொடுக்­காமல், முத­லா­ளித்­துவ உலகப் பொரு­ளா­தார அமைப்­போடு இணங்கிச் செல்லும். " ஒரு சமூக ஜன­நா­ய­க­வா­தி­யாக " உரு­மாற்­ற­ம­டைந்து வரு­கிறார் என்­பதே உண்மை.

சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் நிபந்­த­னை­களும் கடன் மறு­சீ­ர­மைப்புச் செயன்­மு­றை­களும் தொட­ரும்­போது மக்­களின் எதிர்­பார்ப்­புக்­களை நிறை­வேற்ற முடி­யாமல். போனால், தொழிற்­சங்­கங்கள் மற்றும் வெகு­ஜன அமைப்­புக்­களின் எதிர்ப்­புக்கு முகங்­கொ­டுக்க வேண்­டி­யி­ருக்கும்.

இலங்­கையின் பன்­மு­கத்­தன்­மையை அங்­கீ­க­ரித்து சிறு­பான்­மை­யினச் சமூ­கங்­களின் நம்­பிக்­கையை வென்­றெ­டுக்கும் வகையில் அதி­காரப் பகிர்­விலும் சீர்­தி­ருத்­தங்­க­ளிலும் ஜனா­தா­பதி திசா­நா­யக்க எடுக்கும் முடி­வு­க­ளி­லேயே அவ­ரது எதிர்­கால ஆட்­சியின் வெற்­றியும் தோல்­வியும் தங்­கி­யி­ருக்­கி­றது.

இது இவ்­வா­றி­ருக்க, ஜே.வி.பி.யின் பொதுச் செய­லாளர் ரில்வின் சில்­வா­வுக்கும் ஜனா­தி­பதி திச­ாநா­யக்­க­வுக்கும் இடை­யி­லான அர­சியல் உறவும் ஜனா­தி­ப­திக்கு பின்னால் இயங்கும் சக்­தி­யாக சில்வா பார்க்­கப்­ப­டு­வதும் இன்­றைய இலங்கை அர­சி­யலில் மிகவும் கூர்ந்து கவ­னிக்­கப்­படும் ஒரு முக்­கிய அம்­ச­மாகும்.


திச­ாநா­யக்க ஜே.வி.பி.யின் முக­மா­கவும் மக்கள் செல்­வாக்­கு­மிக்க தலை­வ­ரா­கவும் விளங்­கு­கின்ற அதே­வேளை, சில்வா கட்­சியின் கட்­ட­மைப்­புகள் மற்றும் சித்­தாந்தக் கட்­டுப்­பாட்டை தனது கைகளில் வைத்­தி­ருக்கும் பிர­தான அமைப்­பா­ள­ராகச் செயற்­ப­டு­கிறார். 

பாரம்­ப­ரி­ய­மாக இலங்கை அர­சி­யலில் ஜனா­தி­ப­தியே அவ­ரது கட்­சியின் முழு­மை­யான அதி­கார மைய­மாகத் திகழ்வார். ஆனால், ஜே.வி.பி.யைப் பொறுத்­த­வரை, நாட்டின் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­தி­யாக திசா­நா­யக்க இருந்­தாலும், கட்­சியின் தீர்­மா­னங்கள் மற்றும் கொள்கை வகுப்­பதில்  பொதுச்­செ­ய­லாளர் என்ற வகையில் சில்­வாவின் செல்­வாக்கு மிகவும் அதி­க­மா­ன­தா­கவே தெரி­கி­றது.

அர­சாங்க நிரு­வா­கத்தை திச­ாநா­யக்க தலை­மை­யி­லான அமைச்­ச­ரவை வழி நடத்­தி­னாலும், கட்சித் தொண்­டர்­களின் எதிர்­பார்ப்­புக்­க­ளையும் அர­சாங்க தீர்­மா­னங்­க­ளையும் ஒருங்­கி­ணைக்கும் பால­மாக சில்வா விளங்­கு­கிறார். ஜனா­தி­பதி செய­லகம் ஒரு புறமும் பெல­வத்­தையில் அமைந்­தி­ருக்கும் ஜே.வி.பி.யின் தலை­மை­யகம் மறு­பு­றமும் இரு அதி­கார மையங்கள் இயங்­கு­வது போன்ற ஒரு தோற்­றப்­பாட்டை அர­சியல் விமர்­ச­கர்கள் சுட்­டிக்­காட்­டு­கி­றார்கள்.

எதிர்­கா­லத்தில் சர்­வ­தேச நிதி நிறு­வ­னங்­களின் நிபந்­த­னைகள் அல்­லது பொரு­ளா­தார மறு­சீ­ர­மைப்­புகள் தீவி­ர­ம­டைந்து மக்­களின் அதி­ருப்தி அதிகரிக்குமானால், கடுமையான  இடதுசாரி நிலைப்பாட்டைக் கொண்ட சில்வாவின் தலைமையிலான கட்சியின் பிரிவிற்கும் அரசாங்கத்தின் நடைமுறைச் சவால்களை எதிர்கொள்ளும் ஜனாதிபதி திசாநாயக்கவுக்கும் இடையில் கொள்கை நீதியான முரண்பாடுகள் ஏற்படுவதற்கான  சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் அவதானிகள் பரவலாக அபிப்பிராயப்படுகிறார்கள்.

இதேவேளை, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினதும் ஜனாதிபதி திசாநாயக்கவினதும் இன்றைய மக்கள் செல்வாக்கு குறித்து மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. ஆரம்பத்தில் நிலவிய பெரும் எதிர்பார்ப்புகளுடன் ஒப்பிடும்போது குறிப்பிட்ட சில தளங்களில் விமர்சனங்களும் ஆதரவுக்குறைவும் தென்பட்டாலும், ஒட்டுமொத்த மக்கள் திருப்தி விகிதம் இன்னமும் ஒப்பீட்டளவில் வலுவாக இருப்பதாகவே தெரிகிறது.

2024 பாராளுமன்றத் தேர்தலில் 61 சதவீத வாக்குகளைப் பெற்ற தேசிய மக்கள் சக்தி 2025 உள்ளூராட்சி தேர்தல்களில் 43 சதவீத வாக்குகளையே பெறக்கூடியதாக இருந்தது. இந்த சரிவு மாகாணசபை தேர்தல்களை நடத்துவதில் அரசாங்கம் அவசரம் காட்டாததற்கான காரணங்களில் ஒன்று என்று நம்பப்படுகிறது.

அரசாங்கத்தின் மீது அதிருப்தி எழுந்தாலும், அதற்கு மாற்றாக வலுவானதும் நம்பகமானதுமான எதிர்க்கட்சி ஒன்று இன்னமும் உருவாகாதது அரசாங்கத்துக்கு சாதகமான ஒரு காரணியாக இருக்கிறது. திசாநாயக்கவுக்கு நிகரான தலைமைத்துவ ஆளுமை எதிர்க்கட்சிகள் மத்தியில் தற்போது இல்லை என்பது இன்னொரு காரணியாகும்.

அரசாங்கத்தின் மீதான ஆரம்பக்கட்ட "அதிதீவிர ஆதரவு அலை" சற்றே தணிந்து, மக்கள் நடைமுறைப் பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்ளத் தொடங்கியிருப்பதால் தேசிய மக்கள் சக்தியின் செல்வாக்கில் இயல்பான சரிவு ஏற்படவே செய்யும். அதன் காரணத்தினாலேயே ஜனாதிபதி திசாநாயக்க தனது தலைமையில் மாவட்டந்தோறும் பேரணிகளை நடத்தி தங்களது நிலைப்பாடுகளுக்கு மக்களின் ஆதரவைத் திரட்டும் முயற்சிகளில் இறங்கத் தீர்மானித்தார் போலும்.


-வீரகத்தி தனபாலசிங்கம்-


பகிரவும்:

கருத்துக்கள் (0)

இதுவரை கருத்துக்கள் இல்லை.

தொடர்புடைய செய்திகள்