சமீபத்திய பதிவுகள்
தமிழ் சினிமாவின் உச்சம்.. 700 கோடியை கடந்த முதல் தமிழ் படம்.. 76 வயதில் வரலாறு படைத்த ரஜினி!  •  ஹவுதிகளிடம் சரணடைந்த சவுதி! ரூ.8,400 கோடியுடன் களமிறங்கிய இளவரசர்?  •  இளம்பெண்ணை வெட்டிக் கொன்றுவிட்டு, லாரியில் பாய்ந்து உயிரை மாய்த்த இளைஞர் - கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி  •  அன்பில் மகேஸ் கைதின் பின்னணி என்ன? முழு விவரம்!  •  இஸ்ரேலியத்-தேர்தல்-தலைமை-மாறினால்-கொள்கை-மாறுமா?

யாழ். விபத்தில் இரு இளைஞர்கள் பலி

யாழ். விபத்தில் இரு இளைஞர்கள் பலி
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – கனரக வாகன விபத்தில் இரு இளைஞர்களும் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர். கைதடி பகுதியில் செவ்வாய்க்கிழமை நண்பகல் இடம்பெற்ற குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர்.

குறித்த இரு இளைஞர்களும் தமது தொலைபேசியில் காணொளி பதிவு செய்தவாறு மிக வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்று வேக கட்டுப்பாட்டை இழந்து கனரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்

புன்னாலைக்கட்டுவன் தெற்கை சேர்ந்த நிசாந்தன் நிதர்சன் (வயது 23) மற்றும் கமலேந்திரன் கஜந்தன் (வயது 20) ஆகிய இருவரே பலியானவர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பகிரவும்:

கருத்துக்கள் (0)

இதுவரை கருத்துக்கள் இல்லை.

தொடர்புடைய செய்திகள்