குவாத்தமாலா, சிறுமியை அடக்கம் செய்ய முயற்சித்த குடும்பத்தினர் திடீரென எழுந்து தண்ணீர் கேட்டதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள குவாட்டமாலா நாட்டைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் சம்பவத்தன்று திடீரென நெஞ்சு வலியால் மயங்கி கீழே விழுந்தார்.
இதனைக்கண்ட அவரது தந்தை சிறுமியை தனது காரில் மருத்துவமனைக்கு அவசர அவசரமாக அழைத்துச்சென்றார். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே, சிறுமியின் சுவாசம் மற்றும் நாடிதுடிப்பு நின்று விட்டது என அவரது தந்தை முடிவு செய்தார்.
இதனையடுத்து சிறுமியை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். அடக்கம் செய்வதற்காக சிறுமியை ஒரு சவப்பெட்டியில் வைத்துள்ளனர்.
இந்த நிலையில், சுமார் 8 மணி நேரம் கழித்து சிறுமி திடீரென கணிவிழித்து குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார். சடங்கில் கலந்துகொண்ட உறவினர்களும் கிராம மக்களும் இதைப் பார்த்து பெரும் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தனர்.
சிலர் இது கடவுளின் அற்புதம் என்று வழிபாடுகளைச் செய்யத் தொடங்கினர்.
🇬🇹 | Joven declarada muerta despierta durante su propio velorio. https://t.co/P5UD0zKB76
— Actualidad Viral (@ActualidaViral) October 12, 2026




