சமீபத்திய பதிவுகள்
தமிழ் சினிமாவின் உச்சம்.. 700 கோடியை கடந்த முதல் தமிழ் படம்.. 76 வயதில் வரலாறு படைத்த ரஜினி!  •  ஹவுதிகளிடம் சரணடைந்த சவுதி! ரூ.8,400 கோடியுடன் களமிறங்கிய இளவரசர்?  •  இளம்பெண்ணை வெட்டிக் கொன்றுவிட்டு, லாரியில் பாய்ந்து உயிரை மாய்த்த இளைஞர் - கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி  •  அன்பில் மகேஸ் கைதின் பின்னணி என்ன? முழு விவரம்!  •  இஸ்ரேலியத்-தேர்தல்-தலைமை-மாறினால்-கொள்கை-மாறுமா?

சினிமாவை மிஞ்சிய நிஜம்! பறக்கும் காரை அறிமுகப்படுத்திய எலான் மஸ்க்!

சினிமாவை மிஞ்சிய நிஜம்! பறக்கும் காரை அறிமுகப்படுத்திய எலான் மஸ்க்!

எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஸ்பேஸ்எக்ஸ் சோதனை மையத்தில் இந்த காரைச் செயல் விளக்கம் செய்து காட்டியுள்ளது.


பறக்கும் கார் என்பது இனி அறிவியல் புனைகதைகளில் மட்டுமே வரும் கற்பனை அல்ல என்று கூறும் வகையில், டெஸ்லா நிறுவனம் Roadster 2 என்ற கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 

டெஸ்லாவின் அடுத்த தலைமுறை Roadster 2 கார், பறக்கும் கார் என்ற தனது கனவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. ராக்கெட்டைப் போன்ற உந்துவிசைக் கருவிகளின் உதவியுடன், இந்த மின்சார ஸ்போர்ட்ஸ் கார் சிறிது நேரம் தரையிலிருந்து மேலே சென்று , பின்னர் பாதுகாப்பாகத் தரையிறங்கும் விதமாக உருவாக்கப் பட்டுள்ளது

எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஸ்பேஸ்எக்ஸ் சோதனை மையத்தில் இந்த காரைச் செயல் விளக்கம் செய்து காட்டியுள்ளது.

இந்தச் செயல்விளக்கத்தின்போது, மின்சாரத்தில் இயங்கும் ரோட்ஸ்டர் 2 கார் வளைந்த பாதையில் சென்று, சில நொடிகள் காற்றில் பறந்துவிட்டு மீண்டும் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. மேலும், டெஸ்லாவின் சைபர்டிரக் உள்ளிட்ட கார்களுக்கு மேலே பறந்து செல்வது போன்ற காட்சியும் இடம்பெற்றுள்ளது

இந்தக் காரின் தொழில்நுட்பம் குறித்து டெஸ்லாவின் வாகனப் பொறியியல் பிரிவுத் தலைவர் லார்ஸ் மொராவி விளக்கம் அளித்துள்ளார். ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் உந்துவிசைத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கார் காற்றில் மேலே உயர்ந்து போகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


பகிரவும்:

கருத்துக்கள் (0)

இதுவரை கருத்துக்கள் இல்லை.

தொடர்புடைய செய்திகள்