சமீபத்திய பதிவுகள்
தமிழ் சினிமாவின் உச்சம்.. 700 கோடியை கடந்த முதல் தமிழ் படம்.. 76 வயதில் வரலாறு படைத்த ரஜினி!  •  ஹவுதிகளிடம் சரணடைந்த சவுதி! ரூ.8,400 கோடியுடன் களமிறங்கிய இளவரசர்?  •  இளம்பெண்ணை வெட்டிக் கொன்றுவிட்டு, லாரியில் பாய்ந்து உயிரை மாய்த்த இளைஞர் - கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி  •  அன்பில் மகேஸ் கைதின் பின்னணி என்ன? முழு விவரம்!  •  இஸ்ரேலியத்-தேர்தல்-தலைமை-மாறினால்-கொள்கை-மாறுமா?

மூன்று மாதத்துக்குள் அனுர ஆட்சியை கவிழ்க்க சூன்னியம் வைத்த புத்த பிக்குகள்!

மூன்று மாதத்துக்குள் அனுர ஆட்சியை கவிழ்க்க சூன்னியம் வைத்த புத்த பிக்குகள்!
-விஹாரமகாதேவி பூங்காவில் ஆட்சியாளர்களை தண்டிக்கச் செய்யக்கோி சூனிய வழிபாடு 

விஹாரமகாதேவி பூங்காவில் தேரர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தில் ஒரு கட்டமாக செவ்வாய்க்கிழமை (20) மாலை வஜிரபாணி, உத்பலவண்ண, பஜ்ஜுன்ன மற்றும் மகா வெசமுணி ஆகிய யக்ஷராஜ தேவர்களை விளித்து, புத்த சாசனத்தை அழிப்பதாகக் குற்றஞ்சாட்டப்படும் ஆட்சியாளர்களைத் தண்டிக்குமாறும், அவர்களின் ஆட்சிப் பலத்தை உடைக்குமாறும், மூன்று மாதங்களுக்குள் தற்போதைய ஆட்சியைப் பலவீனப்படுத்தி நாட்டில் அறநெறிசார் ஆட்சியை ஏற்படுத்துமாறும் வேண்டுகோள் விடுக்கும் வகையிலான சூனியம் செய்யும் பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன..


புத்த சாசனத்தையும் காவி உடையையும் பாதுகாக்க யக்ஷப் படைகளை அனுப்புமாறும், ஆட்சியாளர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராகத் தண்டனை நடவடிக்கைகள் இடம்பெற வேண்டுமென்றும். மேலும், இலங்கையில் புத்த சாசனம் நிலைத்திருப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிப்படுத்துமாறும் தேவர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டும் வகையில் இந்த பூஜைகள் தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது.



p>


பகிரவும்:

கருத்துக்கள் (0)

இதுவரை கருத்துக்கள் இல்லை.

தொடர்புடைய செய்திகள்