கெய்ரோவில் பிறந்த பச்சிளம் குழந்தை, பிறந்த சில நிமிடங்களில் கால் மேல் கால் போட்டு ரிலாக்ஸ் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி, 'ராயல் போஸ்' என அழைக்கப்படுகிறது.
மருத்துவர் இதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததால், பலரும் குழந்தையின் சாவகாசமான போஸை பாராட்டி கருத்து தெரிவித்துள்ளனர்..

ராயல் போஸ்கெய்ரோவைச் சேர்ந்த பச்சிளம் குழந்தைகள் நல மருத்துவ நிபுணரான டாக்டர் இஸ்லாம் எல்தே தனது வழக்கமான மருத்துவப் பரிசோதனையின் போது இந்த வீடியோவை எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
மருத்துவர் ஸ்டெதாஸ் கோப் மூலம் இதயத் துடிப்பைப் பரிசோதிக்கும் போது, அந்த குழந்தை எந்தவித பதற்றமும் இல்லாமல், கடற்கரையில் ஓய்வெடுப்பது போல சாவகாசமாகப் படுத்திருந்தது.
இதனால் மருத்துவர் இதற்கு “ராயல் போஸ்” என்று பெயரிட்டார்..இந்த காட்சியை இணையத்தில் பார்க்கும் பலர் “வாழ்க்கையை முழுமையாகப் புரிந்துகொண்ட குழந்தை”, “ரிட்டயர்டு ஆன மில்லியனர் போல போஸ் கொடுக்கிறது”,
“பிறந்த முதல் நாளே ‘மாஸ்’ காட்டும் குழந்தை” எனப் பலரும் சமூக வலைத்தளங்களில் கலகலப்பாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்..
பச்சிளம் குழந்தைகள் தாயின் கருப்பையில் இருந்த நிலையின் தாக்கம் அல்லது ஆரம்பகால தன்னிச்சை அசைவுகளின் காரணமாகவே இது போன்ற உடல் அமைப்புகளை வெளிப்படுத்துகின்றன என்கின்றனர் டாக்டர்கள்.
இந்த அசத்தலான குழந்தையின் வைரல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.",
Content from blocked embed
Baby goes viral for his extreme relaxation minutes after being born. https://t.co/NcwPOCGN2B— Massimo (@Rainmaker1973) October 17, 2026




