42 வயதான கிம் ஜாங் உன் கடுமையான மூளை ரத்தப்போக்கு (cerebral காரணமாகக் கோமா நிலைக்கு சென்று இறந்துவிட்டதாகவும், அவரது உடல் சீனாவுக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் ஆன்லைனில் தகவல்கள் பரவின.
வடகொரியாவின் அதிகாரபூர்வ ஊடகமான ரோடோங் சின்முன் வெளியிட்டுள்ள புதிய படங்களில், கிம் ஜாங் உன் ஆடை மற்றும் காலணி கண்காட்சிக்குச் சென்று பார்வையிடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அமெரிக்காவில் வசிக்கும் வஞ்சுன் சீ என்பவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவுகள்தான் இந்த வதந்திகளுக்கு முக்கியக் காரணமாக அமைந்தன. கிம் ஜாங் உன் இறந்துவிட்டதாகவும், வாரிசுரிமை நெருக்கடியைக் கையாள சீனா தனது 9,000 வீரர்களைப் பியாங்யாங்கிற்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் ஆரம்பத்தில் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, பெய்ஜிங்கில் இருந்து மருத்துவக் குழுவினர் வரவழைக்கப்பட்டதாகவும், சிகிச்சை பலனின்றி கிம் ஜாங் உன் இறந்துவிட்டதாகவும் அவர் எந்தவித சாட்சியமுமின்றித் தொடர்ச்சியாகத் தகவல்களைப் பரப்பினார்.
இந்த வதந்திகளால் கிம் ஜாங் உனின் சகோதரியான கிம் யோ ஜாங் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றிவிட்டாரா என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டன. எனினும், அரசு ஊடகங்கள் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இந்த ஊகங்களுக்குத் முற்றுப்புள்ளி வைத்துள்ளன.
இதேபோன்று கடந்த 2020ஆம் ஆண்டிலும் கிம் ஜாங் உனின் உடல்நிலை குறித்துத் தவறான தகவல்கள் பரவியதும், பின்னர் அவர் பொதுவெளியில் தோன்றி அவற்றை பொய்யாக்கியதும் நினைவுகூரத்தக்கது.




