சமீபத்திய பதிவுகள்
தமிழ் சினிமாவின் உச்சம்.. 700 கோடியை கடந்த முதல் தமிழ் படம்.. 76 வயதில் வரலாறு படைத்த ரஜினி!  •  ஹவுதிகளிடம் சரணடைந்த சவுதி! ரூ.8,400 கோடியுடன் களமிறங்கிய இளவரசர்?  •  இளம்பெண்ணை வெட்டிக் கொன்றுவிட்டு, லாரியில் பாய்ந்து உயிரை மாய்த்த இளைஞர் - கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி  •  அன்பில் மகேஸ் கைதின் பின்னணி என்ன? முழு விவரம்!  •  இஸ்ரேலியத்-தேர்தல்-தலைமை-மாறினால்-கொள்கை-மாறுமா?

வைர கற்களால் செய்யப்பட்ட உள்ளாடை.. உலகையே மிரளவைத்த மாடல் அழகி கைலி ஜென்னர்.. விலை எத்தனை கோடி தெரியுமா?

வைர கற்களால் செய்யப்பட்ட உள்ளாடை.. உலகையே மிரளவைத்த மாடல் அழகி கைலி ஜென்னர்.. விலை எத்தனை கோடி தெரியுமா?


 உலக பிரபலமான மாடல் அழகி கைலி ஜென்னர், விலையுயர்ந்த வைர கற்களால் செய்யப்பட்ட உள்ளாடை அணிந்து உலகையே வியக்கவைத்துள்ளார். 


Kylie Jenner 

டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் கைலி ஜென்னர். பின்னர் மாடலிங் துறையில் களமிறங்கி உலகின் முன்னணி ஸ்டார் மாடல் அழகியாக வலம் வருகிறார். 


Kylie Jenner 

 21 வயதிலேயே அமெரிக்காவின் டாப் பில்லினியர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர். தற்போது 29 வயதாகும் இவர், உலகின் முன்னணி மாடல் அழகியாக ஜொலித்து வருகிறார். 


சொந்தமாக அழகு சாதன தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதில் பெண்களுக்கான லிப் ஸ்டிக், உள்ளாடை என பலவிதமான பொருட்களை விற்பனை செய்து வருகிறார். 


குறிப்பாக பெண்களுக்கான உள்ளாடைகளை விற்பனை செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதற்கான விளம்பரத்தில் அவரே நடித்து இன்ஸ்டா மற்றும் பல சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்தி வருகிறார். 



இந்த நிலையில் விக்டோரியா சீக்ரெட் ஃபென்சன் ஷோவில் கைலி ஜென்னர் அணிந்திருந்த உள்ளாடை தான் இணையத்தளத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. 


 கைலி ஜென்னர் அணிந்திருந்த உள்ளாடை முழுக்க முழுக்க வைர கற்களால் உருவாக்கப்பட்டவை என கூறப்படுகிறது. சுமார் 4,410 வைர கற்கள் வைத்து உள்ளாடை உருவாக்கப்பட்டுள்ளதாம். 

மொத்தம் 1,373.39 காரட் என கூறப்படுகிறது. அதில், 75.54 காரட் பேன்ஸி மஞ்சள் நிற வைரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


கைலி ஜென்னர் அணிந்திருக்கும் வைர கற்களால் செய்யப்பட்ட உள்ளாடையின் விலை 50 மில்லியன் டாலர் என கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் 474.65 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. 

ஜேக்கப் அண்ட் கோ என்ற நிறுவனம் இந்த உள்ளாடையை 1000 மணிநேரம் செலவு செய்து உருவாக்கியதாக கூறுகின்றனர். மேலும் உலகிலேயே விலையுயர்ந்த உள்ளாடையாக பார்க்கப்படுகிறது. தற்போது கைலி ஜென்னர் வைர கற்களால் செய்யப்பட்ட உள்ளாடையில் இருக்கும் போட்டோஸ் சமூக வலைத்தளங்களில் செம வைரலாகி வருகிறது.


பகிரவும்:

கருத்துக்கள் (0)

இதுவரை கருத்துக்கள் இல்லை.

தொடர்புடைய செய்திகள்