சமீபத்திய பதிவுகள்
தமிழ் சினிமாவின் உச்சம்.. 700 கோடியை கடந்த முதல் தமிழ் படம்.. 76 வயதில் வரலாறு படைத்த ரஜினி!  •  ஹவுதிகளிடம் சரணடைந்த சவுதி! ரூ.8,400 கோடியுடன் களமிறங்கிய இளவரசர்?  •  இளம்பெண்ணை வெட்டிக் கொன்றுவிட்டு, லாரியில் பாய்ந்து உயிரை மாய்த்த இளைஞர் - கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி  •  அன்பில் மகேஸ் கைதின் பின்னணி என்ன? முழு விவரம்!  •  இஸ்ரேலியத்-தேர்தல்-தலைமை-மாறினால்-கொள்கை-மாறுமா?

அல்லைப்பிட்டியில் பேருந்து - முச்சக்கரவண்டி மோதி பயங்கர விபத்து! பெண் ஒருவர் உயிரிழப்பு

அல்லைப்பிட்டியில் பேருந்து - முச்சக்கரவண்டி மோதி பயங்கர விபத்து! பெண் ஒருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியில், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும் முச்சக்கரவண்டியும் மோதி இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (19) முற்பகல், அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள நண்டு பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

ஊர்காவற்றுறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துடன், அதே திசையில் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி மோதியதில் இவ்விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் படுகாயமடைந்த பெண், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், காயமடைந்த இருவர் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


பகிரவும்:

கருத்துக்கள் (0)

இதுவரை கருத்துக்கள் இல்லை.

தொடர்புடைய செய்திகள்