சமீபத்திய பதிவுகள்
தமிழ் சினிமாவின் உச்சம்.. 700 கோடியை கடந்த முதல் தமிழ் படம்.. 76 வயதில் வரலாறு படைத்த ரஜினி!  •  ஹவுதிகளிடம் சரணடைந்த சவுதி! ரூ.8,400 கோடியுடன் களமிறங்கிய இளவரசர்?  •  இளம்பெண்ணை வெட்டிக் கொன்றுவிட்டு, லாரியில் பாய்ந்து உயிரை மாய்த்த இளைஞர் - கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி  •  அன்பில் மகேஸ் கைதின் பின்னணி என்ன? முழு விவரம்!  •  இஸ்ரேலியத்-தேர்தல்-தலைமை-மாறினால்-கொள்கை-மாறுமா?

கிளிநொச்சி வீதியில் பசுவின் மீது முச்சக்கரவண்டி மோதி விபத்து:பெண்ணொருவர் உயிரிழப்பு

கிளிநொச்சி வீதியில் பசுவின் மீது முச்சக்கரவண்டி மோதி விபத்து:பெண்ணொருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம்-கிளிநொச்சி பிரதான வீதியில் உள்ள புதுக்காடு பகுதியில் நேற்று (20) இடம்பெற்ற விபத்தில் சிக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

வீதியைக் கடந்து சென்ற பசுவொன்றின் மீது முச்சக்கர வண்டி மோதியதிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக பளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி,  பசுவின் மீது மோதிய பின்னர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது.

 
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

இதில் முச்சக்கரவண்டி சாரதியும், பின் இருக்கையில் பயணித்த பெண் பயணியும் பலத்த காயமடைந்துள்ளனர்.

அவர்கள் முதலில் பளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர், பளை பகுதியைச் சேர்ந்த அறுபத்தெட்டு வயதானவர் ஆவார்.

இந்தச் சம்பவம் குறித்து பளை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பகிரவும்:

கருத்துக்கள் (0)

இதுவரை கருத்துக்கள் இல்லை.

தொடர்புடைய செய்திகள்