சமீபத்திய பதிவுகள்
தமிழ் சினிமாவின் உச்சம்.. 700 கோடியை கடந்த முதல் தமிழ் படம்.. 76 வயதில் வரலாறு படைத்த ரஜினி!  •  ஹவுதிகளிடம் சரணடைந்த சவுதி! ரூ.8,400 கோடியுடன் களமிறங்கிய இளவரசர்?  •  இளம்பெண்ணை வெட்டிக் கொன்றுவிட்டு, லாரியில் பாய்ந்து உயிரை மாய்த்த இளைஞர் - கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி  •  அன்பில் மகேஸ் கைதின் பின்னணி என்ன? முழு விவரம்!  •  இஸ்ரேலியத்-தேர்தல்-தலைமை-மாறினால்-கொள்கை-மாறுமா?

அர­சாங்­கத்­துக்கும் பிக்­கு­மா­ருக்கும் இடை­யி­லான தக­ராறு எங்­குபோய் முடியும்?

அர­சாங்­கத்­துக்கும் பிக்­கு­மா­ருக்கும் இடை­யி­லான தக­ராறு எங்­குபோய் முடியும்?
இலங்கை அர­சி­ய­லிலும் சிங்­கள பௌத்த சமூ­கத்­திலும்  மகா­சங்கம் (பௌத்த பிக்­குகள்) செலுத்­தி­வரும் செல்­வாக்கு  அல்­லது ஆதிக்கம் வர­லாற்று ரீதி­யாக ஆழ­மான வேர்­களைக் கொண்­டது. "அர­சனை/ ஆட்­சி­யா­ளர்­களை  உரு­வாக்­கு­வதும் அழிப்­பதும் மகா­சங்­கமே " என்ற பிம்பம் நூற்­றாண்­டு­க­ளாக கட்­டி­யெ­ழுப்­பப்­பட்டு வந்­தி­ருக்­கி­றது.

இருப்­பினும், சிறை­வாசம் அனு­ப­விக்கும், சிங்­கள பௌத்த தீவி­ர­வாத அமைப்­பான பொது­பல சேனாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேர­ருக்கு  மீண்டும் மன்­னிப்பு வழங்கும் விவ­கா­ரத்தில் ஜனா­தி­பதி அநுர குமார திச­நா­யக்க தலை­மை­யி­லான தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் எடுத்­தி­ருக்கும் உறு­தி­யான நிலைப்­பாடு  நாட்டின் அர­சியல் கலா­சா­ரத்தில் இருந்து  ஒரு 'வில­க­லாக' அமைந்­தி­ருக்­கி­றது.

ஞான­சா­ர தேரரின் காவி உடையைக் களைந்து விட்டு அவரை சாமா­னி­யர்­களின் உடையில் நீதி­மன்­றத்­துக்கு அழைத்­து­வந்த சிறைச்­சாலை அதி­கா­ரி­களின் செயலை ஆட்­சே­பித்து "காவி உடைக்கு நீதி" என்ற பெயரில் முன்­னெ­டுக்­கப்­பட்ட இயக்­கத்தின் ஓர் அங்­க­மாக கண்டி தலதா மாளி­கைக்கு அருகில் இருந்து பிக்­கு­களும் ஆத­ர­வா­ளர்­களும் ஒக்­டோபர் 10 ஆம் திகதி தொடங்­கிய பாத­யாத்­திரை 6ஆவது நாள் கொழும்­பிற்குள் பிர­வே­சித்­ததும் அவர்­களின் கோரிக்கை ஞான­சா­ர தேரரை உட­ன­டி­யாக நிபந்­த­னை­யின்றி  விடு­தலை செய்ய வேண்டும் என்­ப­தாக மாறி­யது.




கொழும்பு  காலி­மு­கத்­தி­டலில், ஜனா­தி­பதி செய­ல­கத்தின் முன்­பாக  முற்­று­கை­யிட்டு போராட்­டத்தை நடத்­திய பிக்­குமார், நீதி­மன்ற உத்­த­ர­வை­ய­டுத்து அதை தொடர முடி­யா­மற்­போன நிலையில் அவர்­களில் ஒரு பிரி­வினர் விஹாரம­கா­தேவி பூங்­காவில் முகா­மிட்டு கடந்த பத்து தினங்­க­ளுக்கும் மேலாக,  சத்­தி­யாக்­கி­ரகப் போராட்­டத்தில் ஈடு­பட்­டு­வ­ரு­கின்­றனர். நீதி­மன்றம் பிறப்­பித்த உத்­த­ர­வையும்  மீறி பிக்­குமார் போராட்­டத்தை நடத்­து­கி­றார்கள்.

ஞான­சா­ர­ தேரருக்கு மன்­னிப்பு வழங்கி விடு­தலை செய்ய வேண்டும் என்ற மகா­சங்­கத்தின் ஒரு பிரி­வி­னரின் அழுத்­தங்­க­ளுக்கும்  அடி­ப­ணிய மறுத்து 'சட்­டத்தின் முன் அனை­வரும் சமம்' என்ற நிலைப்­பாட்டில்  அர­சாங்கம் உறு­தி­யாக  நிற்­பது, பௌத்த தர்­மத்தின் உண்­மை­யான சாராம்­சத்­துக்கும் மதத்தைக் கேட­ய­மாகப் பயன்­ப­டுத்தி  அர­சி­ய­லிலும் ஆட்­சி­மு­றை­யிலும் செல்­வாக்கைத் தக்க வைக்கக் கங்­கணம் கட்­டி­நிற்கும் பிக்­கு­களின் போக்­கிற்கும் இடை­யி­லான தார்­மீக மோதலை வெளிச்சம் போட்டுக் காட்­டு­கி­றது.

மகா­சங்­கத்தின் இந்தப் பிரி­வி­ன­ருக்கு  சிங்­கள பௌத்த சமூ­கத்தின் மத்­தியில் பரந்­த­ள­வி­லான ஆத­ரவு இருப்­ப­தற்­கான அறி­கு­றிகள்  தெரி­ய­வில்லை. இவர்கள் ஞான­சா­ரவின் விடு­த­லையை வெறு­மனே ஒரு பிக்கு சம்­பந்­தப்­பட்ட  விவ­கா­ர­மாகப் பார்க்­க­வில்லை. மாறாக, அதை அர­சியல் மீதான தங்­களின் மேலா­திக்­கத்தின் அள­வு­கோ­லாகக்  கரு­து­கி­றார்கள்.

வர­லாற்று ரீதி­யாக ஆட்­சி­யா­ளர்­களை தங்­க­ளது விருப்­பத்­திற்கு ஏற்ற முறையில் செயற்­பட வைப்­பதும் தங்­க­ளது சொற்­படி செயற்­படத் தவறும் அர­சாங்­கங்­களை வீழ்த்­து­வதும் தங்­க­ளது பிரத்­தி­யே­க­மான உரிமை என்று பிக்­குகள் கருதி வந்­துள்­ளனர். ஞான­சா­ர­ தேரருக்கு ஜனா­தி­பதி திச­ாநா­யக்க மன்­னிப்பு வழங்­கா­விட்டால், 'புதிய ஜனா­தி­ப­தியைத் தெரிவு செய்ய வேண்­டி­யி­ருக்கும்' என்று இளம் பிக்­கு­வான பலாங்­கொடை கஸ்­ஸப்ப தேரரின் எச்­ச­ரிக்கை இந்த மேலா­திக்க மனோ­பா­வத்தின் வெளிப்­பா­டே­யாகும்.

தங்­களின் கோரிக்­கைக்கு அர­சாங்கம் செவி­சாய்க்­கா­விட்டால், இலங்­கையின் அர­சி­ய­லிலும் ஆட்­சி­மு­றை­யிலும் பிக்­குகள் கொண்­டி­ருப்­ப­தாகக் கரு­தப்­படும் ' நிபந்­த­னை­யற்ற செல்­வாக்கு ' சரிந்­து­விடும் என்ற அச்­சமே அவர்­களை இந்த அள­வுக்கு கொதிப்­ப­டைய வைத்­தி­ருக்­கி­றது.

ஞான­சா­ர­ தேரருக்கு ஆத­ர­வாக அணி­தி­ரண்­டி­ருக்கும் பிக்­கு­களின் நிலைப்­பாடு பௌத்த போத­னை­களின் அடிப்­படைக் கோட்­பா­டு­க­ளுக்கே முற்­றிலும் முர­ணா­ன­தாக அமைந்­தி­ருப்­ப­துதான் இங்­குள்ள முக்­கி­ய­மான அறம் சார்ந்த பிரச்­சினை.  

கடந்த காலத்தில் பௌத்த போத­னை­க­ளுக்கு முர­ணாகச் செயற்­பட்டு சமூ­கங்­க­ளுக்கு இடையில் குரோ­தங்­களைத்  தூண்டி,  நல்­லி­ணக்­கத்தைச் சீர்­கு­லைத்து, வன்­மு­றையை மூள­வைத்த  பிக்கு ஒரு­வ­ருக்கு காவி உடையின் பெயரில்  மன்­னிப்புக் கோரப்­ப­டு­வது இலங்­கையில் பௌத்த மதத்தின் ஒழுக்க நியாயப் பாரம்­ப­ரியம் குறித்து பெரும் கேள்­வியை எழுப்­பு­கி­றது.

நீதி­மன்ற அவ­ம­திப்பு, சமூ­கங்­க­ளுக்கு இடையில் வெறுப்­பு­ணர்­வு­களைத் தூண்­டி­வி­டுதல், காணா­மல்­போன தனது கண­வ­ருக்கு நீதி­கோ­ரிய ஒரு பெண்ணை அச்­சு­றுத்­தி­யமை போன்ற அரு­வ­ருக்­கத்­தக்க குற்­றங்­க­ளுக்­காக தண்­டிக்­கப்­பட்ட ஒரு துற­விக்­காக ஏன் இவ்­வ­ளவு பெரிய சர்ச்சை உரு­வாக்­கப்­ப­டு­கி­றது என்­பது முக்­கி­ய­மான ஒரு கேள்­வி­யாகும்.

அர­சி­ய­லிலும் ஆட்­சி­மு­றை­யிலும் தங்­க­ளது ஆதிக்கம் தளர்ந்­து­போகக் கூடிய சூழ்­நிலை ஏற்­ப­டு­வதை பொதுவில் மகா­சங்கம் விரும்பப் போவ­தில்லை என்­றாலும், ஞான­சார தேரர் விவ­கா­ரத்தில் பிக்­கு­க­ளுக்குள் பிளவு இருக்­கி­றது என்­பது தெளி­வா­னது.

 ஒரு புறத்தில், ஞான­சா­ர­ருக்கு ஆத­ர­வாக ஒரு பிரிவு பிக்­குகள் அணி திரண்டு நிற்கும் அதே­வேளை மறு­பு­றத்தில், அழுத்­தங்­க­ளுக்கு அடி­ப­ணிந்­து­வி­டாமல் சட்­டத்தின் ஆட்­சியை  நிலை­நி­றுத்­து­மாறு கணி­ச­மான எண்­ணிக்­கையில் இன்­னொரு பிரிவு  பிக்­குகள், ஜனா­தி­ப­தியை வலி­யு­றுத்­து­கி­றார்கள். அர­சாங்­கத்­துக்கு ஒரு­மைப்­பாட்டை வெளிக்­காட்டி நாட்டின் பல பாகங்­களில்  இடம்­பெறும் ஏற்­பாடு செய்­யப்­படும் போராட்­டங்­களின்  முன்­ன­ரங்­கத்தில் பிக்­கு­களைக் காணக் கூடி­ய­தாக இருக்­கி­றது.

பிக்­கு­க­ளுக்கும் சாமா­னி­யர்­க­ளுக்கும் நாட்டில் ஒரே சட்டம் தான் இருக்­கி­றது என்றும் சட்­டத்­தையும் தர்­மத்­தையும் மதித்து நடக்கத் தயா­ராக இல்­லா­த­வர்கள் காவி உடை­களைக் களைந்து துற­வ­றத்தைக் கைவிட வேண்டும் என்றும் மூத்த பௌத்தத் தலை­வர்­களில்  ஒரு­வ­ரான ஒமல்பே சோபித தேரர் எச்­ச­ரிக்கை செய்­தி­ருக்­கிறார். இது   அர­சி­யலில் சில பிரிவு  பிக்­கு­களின் கர்­வத்­த­ன­மான  போக்கை தர்­மத்தின் பெயரால் நியா­யப்­ப­டுத்த முடி­யாது என்ற செய்­தியைச் சொல்­கி­றது.

சட்­டத்தை மதிக்­காமல் நடந்­து­கொண்ட ஒரு பிக்­குவை இன்று சட்டம் இறுக்கிப் பிடித்­தி­ருக்­கி­றது. நீதி  அதன் கட­மையைச் செய்­வதை மதித்துப்  பாராட்­டு­வ­தற்குப் பதி­லாக, எதி­ரணி அர­சியல் கட்­சி­களின் தலை­வர்கள்  குறு­கிய அர­சியல் இலா­பத்­துக்­காக மத­வாத உணர்­வு­களைத் தூண்டும் செயல்­களில் ஈடு­பட்­டி­ருக்­கி­றார்கள்;  ஞான­சா­ரரை விடு­தலை செய்ய வேண்டும் என்று பாரா­ளு­மன்­றத்­திற்கு உள்­ளேயும் வெளி­யேயும் கோரிக்கை விடுக்­கி­றார்கள்.

நாட்டின் பொரு­ளா­தார நெருக்­கடி, மக்­களின் வாழ்­வா­தாரப் பிரச்­சி­னைகள் போன்­றவை தீவி­ர­மாக இருக்கும் நிலை­வ­ரத்­துக்கு மத்­தியில் எதி­ரணி அர­சி­யல்­வா­திகள்  ஞான­சாரர் விவ­கா­ரத்தைக் கையி­லெ­டுத்­தி­ருப்­பது தேசிய மக்கள் சக்தி அர­சாங்­கத்­துக்கு எதி­ராக இன­வாத, மத­வாத. அடிப்­ப­டை­யி­லான அணி­தி­ரட்­டலைச் செய்­வதே தங்­க­ளது அர­சியல் மீட்­சிக்­கான ஒரே மார்க்கம் என்ற அவர்­களின் நம்­பிக்­கையின் வெளிப்­பா­டாகும்.


ஜனா­தி­பதி திச­ாநா­யக்­க­வையும் அர­சாங்­கத்­தையும் மகா­சங்­கத்­தி­ட­மி­ருந்து பிரித்து "சிங்­கள பௌத்த விரோத அரசாங்கம்" என்ற முத்­தி­ரையைக் குத்­து­வதன் மூலம் சிங்­கள பௌத்த மக்­களின் ஆத­ரவை தங்கள் பக்கம் திருப்­பலாம் என்று எதி­ரணி கணக்குப் போடு­கி­றது. 

ஆனால், ஜனா­தி­பதி, மகா­சங்­கத்தை ஒட்­டு­மொத்­த­மாகப் பகைத்துக் கொள்­ளக்­கூ­டிய ஒரு­வ­ரல்லர். அவ்­வாறு செய்தால் அதனால் தனக்கு ஏற்­ப­டக்­கூ­டிய அர­சியல் சிக்­கல்­களை அவர் நிச்­ச­ய­மாக அறிவார். மகா­சங்­கத்­து­ட­னான பொருதல் நீடிப்­பதை அவ­ரது ஜனதா விமுக்தி பெர­மு­ன­வுக்குள் (ஜே.வி.பி.) உள்ள பெரும்­பா­லான பிரி­வு­களும் விரும்பப் போவ­து­மில்லை.

ஆனால்,  சட்­டத்தை மீறிச் செயற்­பட வேண்டும் என்று தனக்கு நெருக்­கு­தலைக் கொடுக்கும் பிக்­கு­க­ளுக்கு அடி­ப­ணி­யாமல் உறு­தி­யாக நிற்­பதன் கார­ண­மாக ஞான­சா­ரரை மைய­மாகக் கொண்ட தற்­போ­தைய சர்ச்­சையில் ஜனா­தி­பதி ஒரு­வித அற­வியல் மேல்­நி­லையில் இருக்­கிறார் என்­பது நிச்­ச­ய­மா­னது. இதன் மூல­மாக, பௌத்த உயர்­பீ­டங்­களின் மகா­நா­யக்க தேரர்கள், ஜனா­தி­ப­தி­யையோ அல்­லது அர­சாங்­கத்­தையோ பகி­ரங்­க­மாகக் கண்­டனம் செய்ய முடி­யாத ஒரு திரி­சங்கு நிலையை அவர் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார் எனலாம்.

சட்­டத்தை மதித்துச் செயற்­பட மறுக்கும் பிக்­கு­மா­ருக்கு அடி­ப­ணிய மறுக்கும் அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு, நாட்டை இது­வரை காலமும் சீர­ழித்­து­வந்த மத­வாத அர­சி­ய­லுக்கும் சட்­டத்தில் இருந்து விலக்குப் பெற்­ற­வர்கள் போன்று சலு­கை­களை அனு­ப­வித்த பிரி­வி­ன­ருக்கும் விடுக்­கப்­பட்­டி­ருக்கும் ஒரு சவா­லாகும்.

சட்­டத்தை மீறப் போவ­தில்லை என்­பதில் உறு­தி­யாக நிற்­பது நாட்டில் சட்­டத்தின் ஆட்சி நிலை நிறுத்­தப்­ப­டு­வ­தற்­கான அக்­க­றையின் ஒரு நல்ல அடை­யா­ள­மாகும். 

ஆனால், இந்த நிலைப்­பாட்டை சிறு­பான்மைச் சமூ­கங்­களை பாதிக்கும் பிரச்­சி­னை­க­ளிலும் கடைப்­பி­டிப்­ப­தற்கு தேவை­யான அர­சியல் துணி­வாற்­றலை ஜனா­தி­ப­தி­யி­னாலும் அர­சாங்­கத்தின் ஏனைய தலை­வர்­க­ளி­னாலும்  வர­வ­ழைக்க முடி­யு­மே­யானால், அவர்கள் வாக்­கு­றுதி அளித்த புதிய அர­சியல் கலா­சா­ரத்தை நோக்­கிய ஒரு தீர்க்­க­மான அடி­யெ­டுத்­து­வைப்­பாக அது  இருக்கும்.

மாகா­ண­ ச­பை­களை உரு­வாக்­கு­வ­தற்­காக சுமார் 40 வரு­டங்­க­ளுக்கு முன்னர் கொண்­டு­வ­ரப்­பட்ட அர­சி­ய­ல­மைப்­புக்­கான 13 ஆவது திருத்­தத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த மறுப்­பதும் சட்­டத்தை மதிக்­காத ஒரு செய­லே­யாகும்.  அதுவும் சட்­டத்தின் ஆட்­சிக்­கான சவால்தான்.

வடக்கு, கிழக்கில் சிறு­பான்மைச் சமூ­கங்­க­ளுக்குச்  சொந்­த­மான மதத் தலங்­க­ளிலும் நிலங்­க­ளிலும்  செய்­யப்­படும்  அத்­து­மீ­றல்­க­ளுக்கு எதி­ரான நீதி­மன்றத் தீர்ப்­புகள் மதிக்­கப்­ப­டாத போக்கு தொட­ரு­கி­றது.

சட்­டத்தின் ஆட்­சியை நிலை­நி­றுத்­து­வது என்­பது அர­சாங்­கத்தின் விருப்­பத்­தெ­ரி­வுக்­கு­ரிய ஒரு விட­ய­மாக அல்­லாமல், சகல விட­யங்­க­ளுக்கும் பொது­வா­ன­தாக இருக்க வேண்டும். பெரும்­பான்மை தீவி­ர­வாதக் குழுக்­களின் அச்­சு­றுத்­தல்­களில் இருந்து சிறு­பான்மைச் சமூ­கங்­களின் உரி­மை­க­ளையும் வழி­பாட்டுத் தலங்­க­ளையும் பாது­காப்­பதில்  ஜனா­தி­பதி உறு­திப்­பாட்டை வெளிக்­காட்­டினால் மாத்­தி­ரமே  சட்­டத்தின் முன்னால் அனை­வரும் சமம் என்ற கோட்­பாடு நடை­மு­றையில் முழுமை பெறு­வ­தாக அமையும்.


எது எவ்­வா­றி­ருந்­தாலும், ஞான­சார தேரர் விவ­காரம் மூள­வைத்­தி­ருக்கும் சர்ச்சையானது  சட்­டத்தின் ஆட்­சிக்கும் மத­வாத அர­சியல் மேலா­திக்­கத்­துக்கும் இடை­யி­லான வர­லாற்று முக்­கி­யத்­துவ மோதலைக் குறித்து நிற்­கி­றது. இந்த சர்ச்­சையை மகா­சங்­கத்தில் ஒரு பிரி­வினர் தங்­க­ளது கட்­ட­மைப்பின்  கௌரவப் பிரச்­சி­னை­யாகப் பார்க்­கி­றார்கள். ஞான­சாரர் போன்ற, தீவி­ர­வாத / இன­வாத பேச்­சுக்­க­ளுக்கு பெயர் பெற்ற பிக்­குகள் மீதான சட்ட நட­வ­டிக்­கைகள் தென்­னி­லங்கை கடும்­போக்கு சிங்­கள பௌத்த தேசி­ய­வாத சக்­தி­க­ளுக்கு பெரிய பின்­ன­டைவை ஏற்­ப­டுத்தும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

கடந்த காலங்­களில் நீதி­மன்றத் தண்­ட­னை­களில் இருந்து ஜனா­தி­ப­தியின் பொது மன்­னிப்பின் மூலம் தப்­பிப்­பி­ழைப்­பது தீவி­ர­வாதப் பிக்­கு­க­ளுக்கு வழக்­க­மான ஒன்­றாக இருந்­தது. ஆனால், தற்­போ­தைய அர­சாங்கம் அத்­த­கைய அர­சியல் தலை­யீ­டு­களை தவிர்த்து சட்­டத்தின் ஆட்­சியை நிலை­நி­றுத்­து­வதில் உறு­தி­யாக இருந்தால், மீண்டும் இன­வாத - மத­வாத உணர்ச்­சி­களைத் தூண்டி அர­சியல் ஆதாயம் தேட நினைக்கும் சக்­தி­களின் திட்­டங்கள் தோல்­வி­ய­டையும்.


பேரி­ன­வாத மற்றும் தீவி­ர­வாதப் போக்கை விரும்­பாத, நியா­ய­மாகச் சிந்­திக்கும் பௌத்த பிக்­கு­களும் நாட்டில் அமை­தி­யையும் பொரு­ளா­தார மீட்­சி­யையும் விரும்பும் பெரும்­பான்மை மக்­களும் அர­சாங்­கத்தின் இந்த உறு­தி­யான  நிலைப்­பாட்­டுக்கு ஆத­ர­வாக நிற்க வேண்டும். அதன் மூல­மாக தீவி­ர­வாதப் பிக்­கு­களைத் தனி­மைப்­ப­டுத்த முடியும்.  தங்­க­ளது பிரச்­சி­னை­களில் அர­சாங்­கத்தின் கடந்த இரு­வ­ருட கால அணு­கு­மு­றை­களும் செயற்­பா­டு­களும் குறித்து சிறு­பான்மைச் சமூ­கங்­க­ளுக்கு கடு­மை­யான ஏமாற்­றமும் வேத­னையும் இருக்­கின்ற போதிலும், தற்­போ­தைய சர்ச்­சையில் ஜனா­தி­ப­திக்கு ஒரு­மைப்­பாட்டை வெளிக்­காட்­டு­வது காலத்தின் தேவையாகும்.

தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் ஜே.வி.பி. / தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் ஆரோக்கியமானவையாக இல்லை என்ற போதிலும், பிக்குகளுடனான இன்றைய தகராறில் ஜனாதிபதிக்கு பின்னடைவு ஏற்படுமேயானால், மீண்டும் இனவாத/ மதவாத அணிதிரட்டல்களைச் செய்து ஆட்சியைப் பிடிக்கத்துடிக்கும் அரசியல் சக்திகளுக்கு அது அனுகூலமாக  அமைந்துவிடும். சிறுபான்மைச் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் சக்திகளின் அணுகுமுறை இதை மனதிற்கொண்டதாக இருக்க வேண்டியது அவசியம்.

ஞானசார தேரர் விவகாரத்தில் அரசாங்கம் காட்டும் உறுதிப்பாடு இலங்கை அரசுக்கும் மகாசங்கத்துக்கும் இடையிலான உறவை அழித்துவிடப் போவதில்லை. மாறாக, அந்த உறவை நவீன, ஜனநாயக மற்றும் சட்டத்திற்கு உட்பட்ட புதியதொரு எல்லைக்குள் சீரமைக்க வழிபிறக்குமானால் இலங்கையின் எதிர்காலத்துக்கு நல்லது.

அரசாங்கத்துக்கும் பிக்குமாரில் ஒரு பிரிவினருக்கும் இடையிலான பொருதல் அரசுக்கும்  மகாசங்கத்திற்கும் இடையிலான பாரம்பரிய உறவில் புதிய கோடு ஒன்றை வரையுமா? அதாவது மதரீதியான வழிநடத்தல் என்பது ஆன்மீகம் மற்றும் சமூகநலன் சார்ந்ததாக மாத்திரம் இருக்க வேண்டுமே தவிர, சட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலோ அல்லது நீதித்துறையின் முடிவுகளிலோ தலையிடுவதாக இருக்கக்கூடாது என்ற நிலை உருவாக முடியுமா? இலங்கை சட்டத்தின் ஆட்சி நிலை நிறுத்தப்படுகின்ற, பன்மைத்துவ ஜனநாயக நாடாக முன்னகர்வதற்கான வாய்ப்புக்கு வழிபிறக்குமா? இவையே நம் முன்னாலுள்ள முக்கியமான கேள்விகள்.

-வீரகத்தி தனபாலசிங்கம்-
பகிரவும்:

கருத்துக்கள் (0)

இதுவரை கருத்துக்கள் இல்லை.

தொடர்புடைய செய்திகள்