சமீபத்திய பதிவுகள்
தமிழ் சினிமாவின் உச்சம்.. 700 கோடியை கடந்த முதல் தமிழ் படம்.. 76 வயதில் வரலாறு படைத்த ரஜினி!  •  ஹவுதிகளிடம் சரணடைந்த சவுதி! ரூ.8,400 கோடியுடன் களமிறங்கிய இளவரசர்?  •  இளம்பெண்ணை வெட்டிக் கொன்றுவிட்டு, லாரியில் பாய்ந்து உயிரை மாய்த்த இளைஞர் - கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி  •  அன்பில் மகேஸ் கைதின் பின்னணி என்ன? முழு விவரம்!  •  இஸ்ரேலியத்-தேர்தல்-தலைமை-மாறினால்-கொள்கை-மாறுமா?

பசிலைப் பிடிக்க சிவப்பு எச்­ச­ரிக்கை போதுமா?

பசிலைப் பிடிக்க சிவப்பு எச்­ச­ரிக்கை போதுமா?
கடந்த கால ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு எதி­ரான விசா­ர­ணைகள் மற்றும் சட்ட நட­வ­டிக்­கை­களை தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் தீவி­ரப்­ப­டுத்­தி­யுள்ள நிலையில், இரண்டு வழக்­குகள் அவர்­க­ளுக்குச் சவா­லாக உள்­ளன.

ஒன்று, மத்­திய வங்­கியின் முன்னாள் ஆளுநர் அர்­ஜுன மகேந்­தி­ரனை நாட்­டிற்கு கொண்டு வரு­வது. இன்­னொன்று, பசில்  ராஜபக்‌ஷவை நாட்­டிற்கு கொண்டு வரு­வது.

இந்த இரண்டும், தேசிய மக்கள் சக்தி அர­சாங்­கத்­துக்கு அமிலப் பரி­சோ­த­னை­க­ளாக உள்­ளன. பசில் ராஜபக்‌ஷ பல்­வேறு வழக்­கு­களில் நீதி­மன்­றங்­க­ளினால் பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளவர்.

அவரை நாட்­டிற்குக் கொண்டு வரு­வ­தற்கு சர்­வ­தேச பொலிஸின் சிவப்பு எச்­ச­ரிக்­கையை வெளி­யிட நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

சிவப்பு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்டால் அவரைக் கைது செய்து உட­ன­டி­யாக நாட்­டிற்குக் கொண்டு வரலாம் என்ற எதிர்­பார்ப்பு பல­ருக்கு உள்­ளது. ஆனால், சர்­வ­தேச பொலிஸின் சிவப்பு விடுக்­கப்­பட்ட அனை­வ­ரையும் உட­ன­டி­யாகக் கைது செய்ய முடி­யாது.

சிவப்பு எச்­ச­ரிக்கை என்­பது ஒரு நபர் மீதான சர்­வ­தேச பிடி­யாணை அல்ல.

இது உறுப்பு நாடு­க­ளுக்கு விடுக்­கப்­படும் ஒரு வேண்­டுகோள் மட்­டு­மே­யாகும்.

சர்­வ­தேச பொலி­ஸுக்கு சிவப்பு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­ட­வர்­களை நேர­டி­யாகக் கைது செய்யும் அதி­காரம் கிடை­யாது. அந்த நாட்டின் பொலி­ஸாரே, கைது நட­வ­டிக்­கையை எடுக்க வேண்டும்.

அதற்கு முன்­ன­தாக, ஒரு நாடு தனது சொந்த சட்­டங்­க­ளின்­படி, அந்த நபர் மீது நட­வ­டிக்கை எடுக்க வேண்­டுமா இல்­லையா என்­பதைத் தீர்­மா­னிக்க முடியும்.

குற்றம் சாட்­டப்­பட்ட நபர் இருக்கும் நாட்­டுக்கும், அவரைத் தேடும் நாட்­டுக்கும் இடையே நாடு­க­டத்தல் ஒப்­பந்தம் இருக்க வேண்டும்.

ஒப்­பந்தம் இல்­லா­விட்டால், சிவப்பு எச்­ச­ரிக்கை இருந்­தாலும் அந்த நாடு சம்­பந்­தப்­பட்ட நபரை ஒப்­ப­டைக்க மறுக்­கலாம்.

சர்­வ­தேச பொலிஸ் விதி­மு­றை­க­ளின்­படி, அர­சியல், இரா­ணுவம், மதம் அல்­லது இனம் சார்ந்த கார­ணங்­க­ளுக்­காக, சிவப்பு எச்­ச­ரிக்­கையைப் பயன்­ப­டுத்த முடி­யாது.

தேடப்­படும் நபர் ஒரு நாட்டில் அர­சியல் புக­லிடம் பெற்­றி­ருந்தால், அந்த நாடு அவரைப் பாது­காக்க வாய்ப்­புள்­ளது.

அது­த­விர, சிவப்பு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்ட பல குற்­ற­வா­ளிகள் தங்­க­ளது அடை­யா­ளங்­களை மாற்­றிக்­கொண்டு, போலி ஆவ­ணங்கள் மூலம் தலை­ம­றை­வாக வாழ்­கின்­றனர். அவர்­களின் இருப்­பி­டத்தைக் துல்­லி­ய­மாகக் கண்­ட­றியும் வரை கைது செய்ய முடி­யாது.

இது தெரி­யாமல் அவரை அமெ­ரிக்­காவில் இருந்து கொண்டு வரும் முயற்­சி­களில் அர­சாங்கம் இறங்­கி­யி­ருக்­கி­றதா என்ற கேள்வி எழலாம்.

ஆனால், பசில்  ராஜபக்‌ஷவை அமெ­ரிக்­காவில் கைது செய்­வ­தற்­கான தற்­போ­தைய முயற்­சிகள் சாத்­தி­ய­மா­வ­தற்கு அதிக வாய்ப்­புகள் உள்­ள­தாக நம்­பப்­ப­டு­கி­றது.

பசில்  ராஜபக்‌ஷவை கைது செய்­வ­தற்கு  நீதி­மன்­றினால் சர்­வ­தேசப் பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.


இலங்­கைக்கும் அமெ­ரிக்­கா­வுக்கும் இடையே குற்­ற­வா­ளி­களை நாடு­க­டத்­து­வ­தற்­கான இரு­த­ரப்பு ஒப்­பந்தம் கையெ­ழுத்­தி­டப்­பட்­டுள்­ள­தா­னது, கலி­போர்­னி­யாவில் வசித்து வரும் பசில் ராஜபக்‌ஷவை, அங்­கி­ருந்து அழைத்து வரு­வ­தற்கு, சாத­க­மான ஒரு விட­ய­மாக பார்க்­கப்­ப­டு­கி­றது.

இதனால், இலங்கை அரசு தேவை­யான ஆவ­ணங்­களைச் சமர்ப்­பிக்கும் பட்­சத்தில், அமெ­ரிக்கா சட்­டப்­படி அவரை இலங்­கை­யிடம் ஒப்­ப­டைக்க முடியும்.

ஆனால், பசில் ராஜபக்‌ஷ இலங்கை மற்றும் அமெ­ரிக்கா ஆகிய இரு நாடு­க­ளி­னதும் இரட்டைக் குடி­யு­ரிமை கொண்­டவர்.

அமெ­ரிக்கக் குடி­மகன் ஒரு­வரை மற்­றொரு நாட்­டிற்கு நாடு­க­டத்­து­வ­தற்கு, அமெ­ரிக்கச் சட்ட முறை­மையின் கீழ் மிக நீண்ட மற்றும் கடு­மை­யான சட்டப் போராட்­டங்­களை இலங்கை அரசு எதிர்­கொள்ள வேண்­டி­யி­ருக்கும்.

சர்­வ­தேச பொலிஸ் சிவப்பு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டாலும், அமெ­ரிக்க நீதி­மன்­றங்­களில் பசில் ராஜபக்‌ஷ தரப்பு தனது பாது­காப்­பிற்­காக மேன்மு­றை­யீடு செய்ய முடியும்.

இந்த சட்ட நடை­மு­றைகள் முடி­வ­டை­வ­தற்குப் பல மாதங்கள் அல்­லது வரு­டங்கள் கூட ஆகலாம் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

பிணை­முறி மோசடி வழக்கில், குற்­றம்­சாட்­டப்­படும், மத்­திய வங்­கியின் முன்னாள் ஆளுநர் அர்­ஜுன மகேந்­தி­ரனை நாட்­டிற்குக் கொண்டு வரு­வ­தற்கு அர­சாங்கம் கடு­மை­யான முயற்­சி­களை மேற்­கொண்ட போதும் அது சாத்­தி­யப்­ப­ட­வில்லை.

அர்­ஜுன மகேந்­திரன் இலங்கைப் பிரஜை அல்ல, அவர் ஒரு சிங்­கப்பூர் பிரஜை.

சிங்­கப்பூர் சட்­டங்­க­ளின்­படி, அந்­த­நாட்டுப் பிரஜை ஒரு­வரைக் கைது செய்து மற்­றொரு நாட்­டிற்கு ஒப்­ப­டைப்­பது மிகவும் கடி­ன­மா­னது.

இலங்­கைக்கும் சிங்­கப்­பூ­ருக்கும் இடையே குற்­ற­வா­ளி­களை நாடு­க­டத்­து­வ­தற்­கான இரு­த­ரப்பு உடன்­ப­டிக்கை இல்லை என்­பதும் ஒரு பெரிய முட்­டுக்­கட்­டை­யாகும்.



இதனால் அர்­ஜுன மகேந்­தி­ரனை சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து நாடு­க­டத்­து­வதில் கடு­மை­யான சட்டத் தடைகள் உள்­ள­தாக, அண்­மையில் பொது பாது­காப்பு அமைச்சர் ஆனந்த விஜே­பால தெரி­வித்­தி­ருந்தார்.

இலங்கை விடுத்த கோரிக்­கையை தங்­க­ளது நாடு­க­டத்தல் சட்ட விதி­க­ளுக்கு உட்­ப­ட­வில்லை எனக் கூறி சிங்­கப்பூர் அர­சாங்கம் ஏற்­கெ­னவே நிரா­க­ரித்து விட்­டது.

ஆனால் ராஜபக்‌ஷ விட­யத்தில்  சில சாத­க­மான விட­யங்கள் அர­சாங்­கத்­திற்கு உள்­ளது.

அமெ­ரிக்­காவும் இலங்­கையும், குற்­ற­வா­ளி­களை நாடு கடத்­து­வது தொடர்­பான உடன்­ப­டிக்­கையில் கையெ­ழுத்­திட்­டுள்­ளன.

அதை­விட, பசில் ராஜபக்‌ஷ விவ­கா­ரத்தில் அமெ­ரிக்கா ஒத்­து­ழைப்பு வழங்­கு­வ­தற்­கான வாய்ப்­புகள் அதி­க­மாக உள்­ளது.

அமெ­ரிக்க மற்றும் இலங்கை சட்ட அமு­லாக்க அதி­கா­ரிகள் மற்றும் நீதித்­து­றை­யி­ன­ருக்கு இடை­யி­லான உற­வு­களும், ஒத்­து­ழைப்­பு­களும் நெருக்­க­மாக உள்­ளது.

அமெ­ரிக்க அதி­கா­ரிகள், பசில் ராஜபக்‌ஷவை இலங்­கைக்கு நாடு­க­டத்­து­வ­தற்கு கொள்கை அளவில் தயா­ராக இருப்­ப­தா­கவும், அதற்குத் தேவை­யான முறை­யான உள்­நாட்டு நீதி­மன்ற உத்­த­ர­வு­களை சமர்ப்­பிக்­கு­மாறும் இலங்கை அர­சிடம் கோரி­யி­ருப்­ப­தா­கவும் தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.

இதன் அடிப்­ப­டை­யி­லேயே, அண்­மையில் கொழும்பு கோட்டை நீதிவான் நீதி­மன்றம் சர்­வ­தேசப் பிடி­யா­ணையை உத்­தி­யோ­க­பூர்­வ­மாகப் பிறப்­பித்­துள்­ளது.

இலங்­கைக்கும் அமெ­ரிக்­கா­வுக்கும் இடையே 1999 ஆம் ஆண்டு கையெ­ழுத்­தி­டப்­பட்ட இரு­த­ரப்பு நாடு­க­டத்தல் ஒப்­பந்­தத்­தின்­படி, அர­சியல் கார­ணங்கள் அல்­லாத பொது நிதி மோசடி மற்றும் சொத்துக் குவிப்பு போன்ற குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு உள்­ளாகும் நபர்­களை ஒரு­வ­ருக்­கொ­ருவர் ஒப்­ப­டைக்க இரு நாடு­களும் சட்­ட­பூர்­வ­மாகக் கட­மைப்­பட்­டுள்­ளன.

பசில்  ராஜபக்‌ஷ  மீதான குற்­றச்­சாட்­டுகள் முற்­றிலும் நிதி மோசடி சார்ந்­தவை என்­பதால் அமெ­ரிக்கா இலங்­கையின் கோரிக்­கையை நிரா­க­ரிக்க முடி­யாது.

அமெ­ரிக்கா பொது­வாகத் தனது நாட்டின் குடி­மக்­களை வெளி­நா­டு­க­ளுக்கு நாடு­க­டத்­து­வ­தற்கு  தயக்கம் காட்டும் என்­பது உண்மை.

ஆனால், அமெ­ரிக்க - இலங்கை நாடு­க­டத்தல் ஒப்­பந்­தத்­தின்­படி, கடு­மை­யான நிதி மோசடிக் குற்­றச்­சாட்­டு­க­ளுக்குப் போதிய ஆதா­ரங்கள் சமர்ப்­பிக்­கப்­படும் பட்­சத்தில், தமது குடி­ம­க­னாக இருந்­தாலும் சட்ட நடை­மு­றை­களைப் பின்­பற்றி நாடு­க­டத்த அமெ­ரிக்கச் சட்டம் அனு­ம­திக்­கி­றது.

இந்த நிலையில் தான், குற்றப் புல­னாய்வுத் திணைக்­களம் மற்றும் சட்ட மா அதிபர் திணைக்­களம் ஆகி­யவை இணைந்து அமெரிக்க நீதித்துறையிடம் சமர்ப்பிப்பதற்கான விரிவான ஆவணக் கோப்புகளை தயாரித்து வருகின்றன.

அமெரிக்க அரசாங்கம், புலனாய்வு அமைப்புகள் மூலம் பசில் ராஜபக்‌ஷவின் கலிபோர்னியா இருப்பிடத்தைக் கண்காணிப்பதற்கும், இலங்கை நீதிமன்றக் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதற்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் எனத் தெரிகிறது.

எனினும், அமெரிக்கா நேரடியாக அவரைக் கைது செய்து அனுப்பி வைக்காது.

இலங்கை அரசு முறையான கோரிக்கையை விடுத்தாலும் கூட, பசில் ராஜபக்‌ஷ அமெரிக்க நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்து தப்பிக்க முயற்சிப்பார்.

எனவே,  அமெரிக்க நீதித்துறை மூலம் அவரை இலங்கைக்குக் கொண்டுவர நீண்டதொரு சட்டப் போராட்டம் தேவைப்படும்.

இந்த சட்டப் போராட்டத்தில் அரசாங்கம் வெற்றி பெறத் தவறினால்,  அது ராஜபக்‌ஷ வினருக்கு சாதகமாகவும், தேசிய மக்கள் சக்திக்கு எதிர்மறையாகவும் தான் இருக்கும்.

கார்­வண்ணன்
பகிரவும்:

கருத்துக்கள் (0)

இதுவரை கருத்துக்கள் இல்லை.

தொடர்புடைய செய்திகள்