சமீபத்திய பதிவுகள்
தமிழ் சினிமாவின் உச்சம்.. 700 கோடியை கடந்த முதல் தமிழ் படம்.. 76 வயதில் வரலாறு படைத்த ரஜினி!  •  ஹவுதிகளிடம் சரணடைந்த சவுதி! ரூ.8,400 கோடியுடன் களமிறங்கிய இளவரசர்?  •  இளம்பெண்ணை வெட்டிக் கொன்றுவிட்டு, லாரியில் பாய்ந்து உயிரை மாய்த்த இளைஞர் - கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி  •  அன்பில் மகேஸ் கைதின் பின்னணி என்ன? முழு விவரம்!  •  இஸ்ரேலியத்-தேர்தல்-தலைமை-மாறினால்-கொள்கை-மாறுமா?

ஈ.பி.டி.பி அலுவலகத்தை முற்றுகையிட்ட CID: பல மணி நேரத் தீவிர சோதனை

ஈ.பி.டி.பி அலுவலகத்தை முற்றுகையிட்ட CID: பல மணி நேரத் தீவிர சோதனை
யாழ்ப்பாணம், 273, ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலத்திலும் அதன் வளாகத்திலும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் பல மணி நேரம் தீவிர தேடுதல் நடவடிக்கையில் இன்று (19) ஈடுபட்டனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்குக் கிடைத்ததாகக் கூறப்படும் தகவலின் அடிப்படையில், யாழ். நீதிமன்றத்தில் தேடுதல் ஆணையைப் பெற்று இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக குற்றப் புலனாய்வு துறையினர் தெரிவித்தனர்.

இதன்போது, டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகம் மற்றும் வளாகம் முழுவதும் அதிகாரிகளால் விரிவாகச் சல்லடைபோட்டுதேடப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

 
வாக்குமூலம்

பரபரப்பை ஏற்படுத்திய பல மணி நேரம் நீடித்த இந்தத் தேடுதலின் நிறைவில், செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா முன்னிலையில், கட்சியின் அலுவலக நிர்வாக பொறுப்பாளரிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பெற்றுச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பகிரவும்:

கருத்துக்கள் (0)

இதுவரை கருத்துக்கள் இல்லை.

தொடர்புடைய செய்திகள்