சமீபத்திய பதிவுகள்
தமிழ் சினிமாவின் உச்சம்.. 700 கோடியை கடந்த முதல் தமிழ் படம்.. 76 வயதில் வரலாறு படைத்த ரஜினி!  •  ஹவுதிகளிடம் சரணடைந்த சவுதி! ரூ.8,400 கோடியுடன் களமிறங்கிய இளவரசர்?  •  இளம்பெண்ணை வெட்டிக் கொன்றுவிட்டு, லாரியில் பாய்ந்து உயிரை மாய்த்த இளைஞர் - கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி  •  அன்பில் மகேஸ் கைதின் பின்னணி என்ன? முழு விவரம்!  •  இஸ்ரேலியத்-தேர்தல்-தலைமை-மாறினால்-கொள்கை-மாறுமா?

தமிழகத்தில் அதிக வருவாய் ஈட்டும் கோவில்கள் பட்டியல் வெளியீடு.!

தமிழகத்தில் அதிக வருவாய் ஈட்டும் கோவில்கள் பட்டியல் வெளியீடு.!
சென்னை: தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற கோவில்கள் ஏராளமாக உள்ளன. முருகப்பெருமானின் அறுபடை வீடுகள், மதுரை மீனாட்சி அம்மன், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் என பிரபலமான கோவில்கள் பல உள்ளன. 

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை இந்த கோவில்களின் நிர்வாகங்களை கவனித்து வருகிறது. இந்த கோவில்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பணத்தை குறிப்பிட்ட இடைவெளியில் அறநிலையத்துறை சார்பில் எண்ணப்படுகிறது. 

இதன் விவரங்களை ஒவ்வொரு ஆண்டும் இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், அதிக வருமானம் ஈட்டும் 10 கோவில்களின் பட்டியல் வெளியிட்டப்பட்டுள்ளது. 

இதில் ரூ.233 கோடி வருவாயுடன் பழனி முருகன் கோவில் உள்ளது. 


2 ஆம் இடத்தில் திருவண்னாமலை அருணாச்சலேஸ்வரர் 


முருகனின் அறுபடை வீடுகளின் முதல் வீடாக உள்ள பழனிக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து கூட ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். 

இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் திருவண்னாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலின் ஆண்டு வருமானம் ரூ.139.06 கோடியாக உள்ளது. திருவண்ணாமலை கோவிலுக்கு கார்த்திகை தீ திருவிழா, பவுர்ணமி கிரிவலம் நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம்

திருச்செந்தூர் முருகன் கோவில் 

அதிக வருமானம் ஈட்டும் கோவில்களின் பட்டியலில் 3 ஆம் இடத்தில் திருச்செந்தூர் முருகன் கோவில் உள்ளது. 

அறுபடை வீடுககளில் கடலோரத்தில் அமைந்து இருக்கிற ஒரே ஸ்தலம் இதுவேயாகும். இந்த கோவிலில் நடைபெறும் கந்தசஷ்டி மற்றும் சூரசம்ஹாரம் போன்ற நாட்களில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சகணக்கான பக்தர்கள் முருகனை தரிசிக்க வருவார்கள். 

இந்த கோவிலில் 131.38 கோடி ஆண்டு வருமானம் ஈட்டியுள்ளது. 

சமயபுரம் மாரியம்மன் கோவில்

 4-வது இடத்தில் சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. திருச்சியில் உள்ள இந்தக்கோவிலின் ஆண்டு வருமானம் ரூ.111.09 கோடியாகும்.

சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணியில் அமைந்துள்ள முருகன் கோவில் முருகப்பெருமானின் 5 ஆம் படை வீடாகும். 

இந்த கோவிலில் ஆடிக்கிருத்திகை மற்றும் திருப்படி திருவிழா போன்ற சிறப்பு நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்த கோவிலின் ஆண்டு வருமானம் ரூ.74.98 கோடியாக உள்ளது. 

பட்டியலில் 6-வது இடத்தில் உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலின் ஆண்டு வருமானம் ரூ.73.72 கோடியாக உள்ளது. 

மதுரை அழகர் கோவில் 7-வது இடத்தில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் உள்ளது. வட இந்திய பக்தர்கள் உள்பட நாடு முழுவதும் இந்த கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருகை தருவதுவது வழக்கம். இந்த கோவிலின் ஆண்டு வருமானம் ரூ.64.33 கோடியாகும். 

8-வது இடத்தில் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்தக் கோவிலின் வருமானம் ரூ.50.57 கோடியாகும்.

9-வது இடத்தில் மதுரை அழகர் கோவிலில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வருமானம் ரூ.34.20 கோடியாகும். 

10-வது இடத்தில் ஈரோடு அருகே உள்ள பண்ணாரி அம்மன் திருக்கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டு வருமானம் ரூ.29.16 கோடியாகும்.


பகிரவும்:

கருத்துக்கள் (0)

இதுவரை கருத்துக்கள் இல்லை.

தொடர்புடைய செய்திகள்