சமீபத்திய பதிவுகள்
தமிழ் சினிமாவின் உச்சம்.. 700 கோடியை கடந்த முதல் தமிழ் படம்.. 76 வயதில் வரலாறு படைத்த ரஜினி!  •  ஹவுதிகளிடம் சரணடைந்த சவுதி! ரூ.8,400 கோடியுடன் களமிறங்கிய இளவரசர்?  •  இளம்பெண்ணை வெட்டிக் கொன்றுவிட்டு, லாரியில் பாய்ந்து உயிரை மாய்த்த இளைஞர் - கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி  •  அன்பில் மகேஸ் கைதின் பின்னணி என்ன? முழு விவரம்!  •  இஸ்ரேலியத்-தேர்தல்-தலைமை-மாறினால்-கொள்கை-மாறுமா?

திருமணம் செய்வதாக 20 பெண் கான்ஸ்டபிள்களை ஏமாற்றிய இளைஞர்

திருமணம் செய்வதாக 20 பெண் கான்ஸ்டபிள்களை ஏமாற்றிய இளைஞர்
ஆடம்பர ரெஸ்டாரண்ட், சொகுசு கார்' - திருமணம் செய்வதாக 20 பெண் கான்ஸ்டபிள்களை ஏமாற்றிய இளைஞர்

டெல்லியைச் சேர்ந்த 20 பெண் கான்ஸ்டபிள்கள் ஒரே வாலிபரிடம் திருமண ஆசையால் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர்.


டெல்லியைச் சேர்ந்த விக்ராந்த் தோமர் என்ற வாலிபர் தன்னை பணக்காரத் தொழிலதிபர் போன்று காட்டி இன்ஸ்டாகிராமில் அதிக அளவில் பதிவுகளை வெளியிட்டார்.

அதோடு தனக்கு ஆடம்பர ரெஸ்டாரண்ட்கள், சொகுசு கார்கள் இருப்பது போன்று புகைப்படங்களை வெளியிட்டார். மேலும் அவருக்கு பெண் கான்ஸ்டபிள்களுடன் தொடர்பு இருப்பதையும் காட்டி இருந்தார்.

இந்நிலையில் டெல்லி கரோல்பாக் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் பெண் கான்ஸ்டபிள் ஒருவர், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை விக்ராந்த் ஏமாற்றியதாகப் புகார் அளித்தார். இப்புகாரின் மீது போலீஸார் விசாரணை நடத்தியபோது மேலும் ​​பல பெண் கான்ஸ்டபிள்களைத் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி இருப்பது தெரிய வந்தது.



தோமர் விலையுயர்ந்த கார்கள் மற்றும் ஆடம்பர வாழ்க்கை முறை குறித்த காணொளிகளைக் காட்டி பெண் கான்ஸ்டபிள்களைக் கவர்ந்தது விசாரணையில் தெரிய வந்தது. அவர்களின் நம்பிக்கையைப் பெற்று, திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்த பிறகு, பல்வேறு காரணங்களைக் கூறி அவர்களிடம் பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

'ஆடம்பர ரெஸ்டாரண்ட், சொகுசு கார்' - திருமணம் செய்வதாக 20 பெண் கான்ஸ்டபிள்களை ஏமாற்றிய இளைஞர்
பெண் காவலர்களை நம்ப வைப்பதற்காக ஆடம்பர சொகுசு கார்களை 8 மணி நேரம் வாடகைக்கு எடுத்து பெண் கான்ஸ்டபிள்களை அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இதனால் பெண் கான்ஸ்டபிள்கள் உண்மையிலேயே விக்ராந்த் பணக்காரர் என்று நம்பி அவர் கேட்ட பணத்தைக் கொடுத்தது விசாரணையில் தெரிய வந்தது. போலீஸார் நடத்திய விசாரணையில் ​​சுமார் 20 பெண் கான்ஸ்டபிள்கள் இந்த மோசடியில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பல பெண் கான்ஸ்டபிள்கள் இதுவரை முறையான புகாரை அளிக்கவில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட நபருடன் இணைந்து லிவ் இன் முறையில் வசித்து வரும் பெண்ணும் டெல்லி காவல் துறையில் பணிபுரிகிறார்.


அந்தப் பெண் கான்ஸ்டபிள் மூலமாகவே, பெண் கான்ஸ்டபிள்கள் தகவல்களை தோமர் பெற்று, அவர்களைக் குறிவைத்திருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக மொத்தம் 5 வழக்குகள் தோமர் மீது பதிவு செய்து அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர் பெண் கான்ஸ்டபிள்களிடம் ரூ.25 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்து இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.










பகிரவும்:

கருத்துக்கள் (0)

இதுவரை கருத்துக்கள் இல்லை.

தொடர்புடைய செய்திகள்